Monday, April 20, 2015

On Monday, April 20, 2015 by Unknown in ,    
காங்கயத்தில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட அம்மா உணவகத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காங்கயத்தில் அம்மா உணவகம் துவங்குவதற்கு கடந்த ஆண்டு ஜூனில் பூமி பூஜை போடப்பட்டு, கட்டடப் பணிகள் துவங்கின. தற்போது பணிகள் நிறைவு பெற்றுள்ளன. ரூ.12 லட்சம் மதிப்பில் சமையல் பாத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. ஒரு வேளைக்கு சுமார் 300 பேருக்கு உணவளிக்கும் விதத்தில் இந்த அம்மா உணவகம் கட்டப்பட்டுள்ளது.
ஆனால், இதுவரை அம்மா உணவகத்துக்கு திறப்பு விழா நடைபெறவில்லை. இந்த உணவகம் திறக்கப்பட்டால், காங்கயம் பகுதியில் வசிக்கும் ஏழை மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இந்த உணவகத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments: