Monday, April 20, 2015

On Monday, April 20, 2015 by Unknown in ,    
குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ. 2.69 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
உடுமலை வட்டம், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 23 ஊராட்சிகள் உள்ளன. பெதப்பம்பட்டியில் அமைந்துள்ள இந்த ஒன்றிய அலுவலகத்துக்கு புதிதாக கட்டடம் கட்டித் தரவேண்டும் என நீண்ட ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
கோரிக்கையை ஏற்று, தற்போது புதிய கட்டடம் கட்டுவதற்காக தமிழக அரசு ரூ. 2.69 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. 
இந்நிலையில், புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட திட்ட இயக்குநர் ரூபன் சங்கராஜ் தலைமை வகித்தார். சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன், தாராபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் பொன்னுச்சாமி, ஒன்றிய ஆணையர் செல்வராஜ், அதிமுக ஒன்றியச் செயலாளர் சுந்தரசாமி, ஒன்றியக் குழு துணைத் தலைவர் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

0 comments: