Monday, July 06, 2015

On Monday, July 06, 2015 by Unknown in ,    
மதுரையில் அதிகவட்டி தருவதாக பொதுமக்களிடமிருந்து பணம் வசூலித்து ஏமாற்றிய தனியார் நிதி நிறுவனம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கலாம் என, காவல் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து, மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு ஆய்வாளர் அலுவலகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மதுரை கே.கே.நகரில் இயங்கிவரும் தனியார் நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து பல கோடி ரூபாய் வசூலித்து ஏமாற்றியதாகப் புகார் கூறப்பட்டுள்ளது. இதன்பேரில், நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குட்டியான் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் தலைமறைவாக உள்ளனர். எனவே, நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள், மதுரை தாசில்தார் நகர் பெரியார் தெருவில் கதவு எண் 2 இன் கீழ் 316 இல் இயங்கும் பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம். தொலைபேசி எண்: 0452-2532161

0 comments: