Thursday, December 31, 2015
தூத்துக்குடி மாவட்டத்தில் 2015ம் ஆண்டில் கொலை, வழிப்பறிகள் போன்ற குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என எஸ்பி அஸ்வின் கோட்னீஸ் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் இன்று மாவட்ட எஸ்பி அஸ்வின் கோட்னீஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசால் ரூ.2கோடியே 81 லட்சம் செலவில் ஆயுதபடை நிர்வாகம் கட்டிடம் கட்டப்பட்டு முதல்வர் கானொளி மூலம் நவம்பர் மாதம் திறந்து வைத்தார். மேலும் 448 ஆயுதப்படை காவலர் குடியிருப்புக்காக ரூ.55கோடியே 21 லட்சத்து 95 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து கட்டிடப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
ஆயுதப்படை வளாகத்தில் காவலர்களின் நலன்கருதி பல்பொருள் அங்காடி மற்றும் மலிவு விலை உணவகம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய பேருந்து நிலையங்களில் 25 மணிநேரமும் செயல்படும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அதிகளவில் மக்கள் கூடும் வணிக வளாகங்கள், நிதி நிறுவனங்கள் போன்ற முக்கியமான 1103 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டம், மணக்கரை, முறப்பநாடு, வல்லநாடு போன்ற பிரச்சனைக்குரிய பகுதிகளில் செல்லும் பேருந்து வழித்தடங்களில் பஸ் மார்ஷல் என்னும் காவலர்களை நியமித்தும், பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியும் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே நடக்கும் சிறுசிறு பிரச்சனைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் இருசக்கர வாகன ரோந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 30 வாகனங்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றன. 2015-ல் சைபர் செல் பிரிவு தொடங்கப்பட்டு முக்கிய குற்ற வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன்கருதி அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டு பொதுமக்கள் அமர்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களை காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 2015ம் ஆண்டில் 4 ஆதாய கொலைகள் உட்பட 71 கொலைகள் நடந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டில் 85 கொலைகள் நடந்துள்ளது. 2015ல் 33 வழிப்பறி மற்றும் 294 இதர திருட்டு வழக்குள் என மொத்தம் 402 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, ரூ.2கோடியே 44 லட்சத்து 33ஆயிரத்து 927 மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்ற நடமுறைச் சட்டம் 107, 109, 110 பிரிவின் கீழ் மொத்தம் 2989 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ரேசன் அரிசி, மணல் கடத்தலில் ஈடுபட்ட 6பேர் உட்பட குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 75பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த சுதந்திர போராட்ட தலைவர்கள் பிறந்த நாள், நினைவு நாள், திருச்செந்தூர் கந்தசஷ்டி, தூத்துக்குடி பனிமயமாதா திருவிழா உட்பட பல்வேறு திருவிழாக்களில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையின் சீரிய முயற்சியினால் கொலை, கொள்ளை, கூட்டு கொள்ளை ஆகிய வழக்குகளின் எண்ணிக்கை வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் விதமாக வாகன விபத்துக்களை கட்டுப்படுத்தும் பொருட்டு தலைகவசம் அணியாத நபர்கள் மீது அதிகளவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மோட்டார் வாகன வழக்குகள் மட்டும் 1,48,999
தலைகவசம் அணியாதவர்கள் மீது 77,048 வழக்குகளும் பதிவு செய்யபப்பட்டுள்ளது. இதில் அபராத தொகையாக ரூ.2கோடியே 84 லட்சத்து 21 ஆயிரத்து 990 வசூல் செய்யப்பட்டு மாவட்ட கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் காவல்துறையில் சிறப்பாக பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டு சான்றிதழ், வெகுமதி வழங்கப்பட்டு வருகிறது.
வாகன விபத்துக்களை குறைப்பதற்காக தலைக்கவசம், சீட் பெல்ட் அணிய வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரங்கள், முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது இவ்வாறு எஸ்பி அஸ்வின் தெரிவித்தார். தொடர்ந்து அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து கூறினார். பேட்டியின் போது ஏடிஎஸ்பி மதுரைசாமி, டிஎஸ்பிகள் தர்மலிங்கம், கோவிந்தராஜ், ராஜாமணி, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அரிகரன், சப் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதி...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
0 comments:
Post a Comment