Sunday, February 21, 2016

On Sunday, February 21, 2016 by Tamilnewstv in    
திருச்சி 20.2.16
திருச்சி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை
திருச்சியில் நிர்மலா சீதாராமன் சீதாலெட்சுமி ராமசாமி கல்லூயின் 65 வருட ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
பின்னர் சிறுதொழில் மற்றும் தொழில்புரிவோரை சந்தித்து கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. அப்பொழுது அதில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது அதில் அவர்கூறியது சீன பட்டாசு மற்றும் மத்தாப்பூகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவி;ட்டது அதற்கு முழு ஒத்துழைப்பும் தமிழக அரசின் காவல் துறையின் முழு ஒத்துழைப்புதான் காரணம் என்றும் மேலும் வரும் ஆண்டும் காவல் துறை முழு ஒத்துழைப்புடன்; செயல்படுவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.வெளிநாட்டு பட்டாசு உரிமம் யாருக்கும் கொடுக்கப்படுவதில்லை என்றும் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
பின்னர் பாரத மிகுமின் தொழிற்சாலையை நம்பி இருந்த சிறு தொழிற்பட்டரைகள் 50 சதவீதம் வரை மூடப்பட்டது தனக்கு தெரியாது என்றும் தெரிவித்தார் அதற்கு தான் எவ்விதமான நடவடிக்கை எடுக்கவேண்டுமோ அதன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
தொழிற்பேட்டை அமைப்பதற்கு முழுமையாக மாநில அரசு முன்னிலை வகுத்தால் மத்திய அரசு உடனடியாக முழு ஒத்துழைப்பு தரும் என்றும் தொழிற்பேட்டை அமைக்க மாநில அரசு தான் நடவடிக்கை வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்களுக்கு கருத்து சுதந்திரம் உண்டு என்றும் ஆனால் ஜவஹர்லால் நேரு பல்கழைக்கழக பிரச்சனையில் மதவாத சக்திகள் செயல்பட்டுள்ளதா என்று முறையான விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார்.


N;பட்டி  நிர்மால சீதாராமன்

0 comments: