Saturday, March 12, 2016
On Saturday, March 12, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
12.3.16
திருச்சி ஜனநாயக வாலிபர் சங்கம் திருச்சியில் இயங்கி வரும் பிரபல சினிமா எல் எ திரையரங்கில் நீதி மன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டுமென வாக்குவாதம்
கடந்த ஆண்டு திரிபுரா மாநிலம் அகர்தாலா நகரில் உள்ள திரையரங்கு ஒன்றில் குடிநீரைக்கொண்டு செல்வதற்கு ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து அம்மாநில நுகர்வோர் குறை தீர் ஆணையத்;தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது மனுவை விசாரித்த ஆணையம் புகார்தாரருக்கு ரூ 10ää000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டது
இந்த உத்தரவை எதிர்த்து சம்பந்;தப்பட்ட திரையரங்கு நிர்வாகம் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது அம்மனுவை விசாரித்த நீதிபதி வி.கே ஜெயின் தலைமையிலான ஆணையம் திரையரங்குகளுக்குக் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் வருகின்றனர் குடிநீர் இன்றி மூன்று மணி நேரம் வரை இருப்பதென்பது கடினமான ஒன்று சரியான நேரத்தில் குடிநீர் கிடைக்காத பட்சத்தில் மயக்கமடையும் நிலைகூட ஏற்படலாம் வெளியிலிருந்து குடிநீர் அனுமதிக்காத பட்சத்தில் அது சேவைப்பற்றாக்குறையாகக் கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் தெரிவித்திருக்கிறது மேலும் திரையரங்கு செயல்படும் நேரம் முழுவதும் குடிநீர் சுத்திகரிப்பான்கள் குளிர்விப்பான்கள் ஒரு முறை பயன்படுததும் டம்பளர்கள் உள்ளிட்டவை கட்டாயம் சரிவர அமைக்கப்பட வேண்டும் தவிர்க்க முடியாத காரணங்களால் தண்ணீர் வரத்து தடைப்பட்டால் உடனடியாக மாற்று ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டியது திரையங்க நிர்வாகத்தின் பொறுப்பு இந்த நடவடிக்கைகளை நடைமுறைக்குக் கொண்டு வரத்தவறினால் சேவைக் குறைபாடு காரணமாக நுகர்வோருக்கு திரையரங்கு இழப்பீடு வழங்க வேண்டியிருக்கும் என்று ஆணையம் தெரிவித்திருந்தது.
இதனை மதிக்காமல் திருச்சியில் செயல்படும் எல்எ சினிமா அரங்கில் இன்றைக்கு ஓருவர் மயக்கமடைந்து விட்டார் இதற்கு திரையரங்கு அலட்சியப்போக்கே காரணம் திரையரங்கத்தில் ஊழியர்கள் அதனை கண்டு கொள்வில்லை என்பதால் திரையரங்கிற்கு வந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர் பின்னர் காவல்துறையினர் சமரகம் செய்து குறை நீக்க உத்திரவாதம் அளித்த பின்னர் கலைந்து சென்றனர்
பேட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருச்சி மாவட்ட துணை செயலாளர் குமரப்பன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டில் 80 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்க...
-
மாவட்டத் தலைநகரமாக உயர்ந்துள்ள திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதுடன், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையை பன்னோக்கு சிறப்பு (மல...
-
திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா 67 பிறந்த நாளை முன்னிட்டும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கருமண்டபத்தில...
-
அரசு மேல்நிலைப் பள்ளி கண்ணுடையான் பட்டியில் பயிலும் மாணவர்களுக்கு 1 லட்சம் ௹பாய மதிப்பிலான அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் அப்பள்ளி...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
திருப்பூர் காங்கயம் ரோடு செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரியில் நிர்வாகவியல் துறை சார்பில் விற்பனை கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சவுரி...
0 comments:
Post a Comment