Wednesday, May 11, 2016
திருப்பூர், : திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வராஜ் நேற்று, பல்லடம் ரோடு, அம்பேத்கர் நகர், தென்னம்பாளையம், பட்டுக்கோட்டையார் நகர், வெள்ளியங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். இதில் பல இடங்களில் வேட்பாளர் செல்வராஜிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் ஆர்வமுடன் ஆரத்தி எடுத்து வரவவேற்றனர். அப்போது அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் அடிப்படை தேவைகளான குடிநீர், சாக்கடை, சாலை வசதி உள்ளிட்ட எதுவும் நிறைவேற்றப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக பல்ேவறு போராட்டங்கள் நடத்தியும் தீர்வு காணப்படவில்லை.
அதிமுக.,வுக்கு வாக்களித்ததற்கு சரியான தண்டனை தான் கிடைத்தது. மாதக்கணக்கில் அகற்றப்படாத குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு, குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.நீங்கள் மேயராக இருந்தபோது, தினசரி குப்பைகள் அகற்றப்பட்டு வந்தது. இப்போது, மாதத்திற்கு ஒருமுறை கூட அகற்ற யாரும் வருவதில்லை என புகார் தெரிவித்தனர். இதுகுறித்து திமுக வேட்பாளர் செல்வராஜ் பேசுகையில், உங்களின் ஆதரவுடன் திமுக கண்டிப்பாக ஆட்சிக்கு வரும், ஆட்சியில் அமர்ந்தவுடன், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்.
சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தினசரி குப்பைகள், கழிவுகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பூருக்கு என்று தனியாக தேர்தல் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. அதில் பல்வேறு முக்கிய திட்டங்கள் உள்ளது. அவை அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும்.ஆகவே உங்களின் ஆதரவை தெரிவித்து, திமுக.,வுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிப்பெற செய்ய வேண்டும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...

0 comments:
Post a Comment