Wednesday, May 11, 2016
அனுப்பர்பாளையம்,; அவிநாசி (தனி) தொகுதி திமுக வேட்பாளர் இ.ஆனந்தன், அவிநாசி பேரூராட்சி பகுதியில் வாக்குகளை சேகரித்தார். அப்போது திமுக வேட்பாளர் ஆனந்தனுக்கு பெண்கள் திரண்டுவந்து, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.அவிநாசி(தனி) தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இ.ஆனந்தன் நேற்று அவிநாசி பேரூராட்சியில் தாலூகாஅலுவலகம், சீனிவாசபுரம், வள்ளுவர் வீதி,வ.உ.சிபார்க் வீதி, நேருவீதி, சிந்தாமணி, ராயம்பாளையம், சக்திநகர், புதிய பேருந்துநிலைய்ம், பழைய பேருந்துநிலையம், வாணியர்வீதி, காந்திபுரம், சுகாதார ஊழியர்வீதி, கஸ்தூரிபாய்வீதி, மங்கலம்ரோடு, வடக்குரதவீதி, சூளை, சாளையப்பாளையம் உள்ளிட்ட 34 பகுதிகளுக்கு சென்று, பொது மக்களை சந்தித்து உதய சூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.
அப்போது, கடந்த திமுக ஆட்சியில் செய்த எண்ணற்ற சாதனைகளையும், தற்போதைய திமுக தேர்தல் அறிக்கையின் சிறப்புகளையும் எடுத்துரைத்து, உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.அப்போது ஆனந்தன் பேசுகையில், அவிநாசி பேரூராட்சி பகுதிகளில் பல வருடங்களாக குடிநீர் பஞ்சம் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும், அத்திக்கடவு அவிநாசி திட்டம் நிறைவேற்றுவோம். தொகுதியில் சாக்கடை வசதி, தார்சாலைவசதி, உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தருவேன் என்றார்.
திமுக வேட்பாளர் ஆனந்தனுடன், அவிநாசி ஒன்றிய திமுக செயலாளர் மற்றும் அவிநாசி தொகுதி பொறுப்பாளர் சாமிநாதன், பொதுக்குழு உறுப்பினர் சரவணன்நம்பி, அவிநாசி நகர திமுக செயலாளர் பொன்னுசாமி, காங்கிரஸ் கமிட்டி புறநகர் மாவட்ட தலைவர் வெங்கடாசலம் உள்ளிட்ட திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் திரளாக பங்கேற்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...

0 comments:
Post a Comment