Wednesday, May 11, 2016

On Wednesday, May 11, 2016 by Unknown in ,    




பல்லடம், : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள வடுகபாளையம்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட புதுாரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பொதுத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரூ. 21 லட்சம் செலவில் இப்பகுதியில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த கட்டிடத்திற்கு திறப்பு விழாவும் நடத்தப்பட்டது. ஆனால் திறப்பு விழாவுடன் இதற்கு மூடு விழாவும் நடந்தது. 

இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த பகுதியில் வசிக்கும் ஏழை மக்களின் பயன்பாட்டிற்காக இந்த துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது.ஆனால் இன்று வரை திறக்காமல் உள்ளது. இதுகுறித்து கேட்டால் இந்த துணை சுகாதார நிலையத்திற்கு இன்னும் மருத்துவர்கள் பணியமர்த்தப்படவில்லை கூடிய விரைவில் மருத்துவர்கள் வருவார்கள் என்று கூறுகின்றனர் என்றனர். மேலும் மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் பொது மக்கள் பயன் பாட்டிற்கு வராமல் வீணாக உள்ளது. எனவே இந்த துணை சுகாதார நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டு வர வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்

0 comments: