Wednesday, May 11, 2016
திருப்பூர், : திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மு.பெ.சாமிநாதன் நேற்று வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சேகரித்தார். அப்போது, திமுக தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்ளை வழங்கி வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், சாக்கடை, கழிப்பிட வசதி உள்ளிட்ட எந்தவித வசதிகளும் எங்களுக்கு முறையாக கிடைக்கவில்லை.
இது குறித்து பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதிமுக ஆட்சியில், பொய் வாக்குறுதிகளை கூறி எங்களை ஏமாற்றி விட்டனர் என்றனர். அப்போது, அவர்களிடம் பேசிய, திமுக வேட்பாளர் மு.பெ. சாமிநாதன், திமுக ஆட்சிக்கு வந்ததும், தேர்தல் அறிக்கையில் உள்ள அனைத்து திட்டங்களும், கண்டிப்பாக நிறைவேற்றப்படும். அனைத்து மக்களின் முக்கிய பிரச்சனையாக உள்ள குடிநீர், தரமான தார் சாலை, சாக்கடை கால்வாய் வசதி, கழிப்பிட வசதி என அனைத்து வசதிகளும் நிறைவேற்றித்தரப்படும். மக்களின் துயர் விரைவில் துடைக்கப்படும்.
வெளி மாவட்ட பனியன் தொழிலாளர்கள் தங்கி பணிபுரிய ஏதுவாக ஆண், பெண்களுக்கு தனித்தனியாக தங்கும் விடுதி கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். காலை, மாலை நேரங்களில் பெண்களுக்கு என்று தனியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். எப்போது வேண்டுமென்றாலும் என்னை அணுகி உங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம்.ஆகவே இத்தொகுதியில் என்னை நீங்கள் பெருவாரியான வாக்குவித்தியாசத்தில் வெற்றிப்பெற செய்ய வேண்டும் என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...

0 comments:
Post a Comment