Monday, July 25, 2016

On Monday, July 25, 2016 by Tamilnewstv in


திருச்சி 25.7.16                சபரிநாதன் 9443086297
திருச்சி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தலீத் சமூகத்தினர் மீது தாக்குதல் கண்டித்து திருச்சி மேல சிந்தாமணி அருகில் மபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது
ஆர்பாட்டத்தில் மாநில தலைவர்  அல்தாஃபி கூறியது பாஜாக அரசு பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து தலித் சமூகத்தினர் மீது தாக்குதல்களும் வன்முறைகளும் நடத்தி வருகின்றனர் கடந்த வாரம் குஜராத்தில் இறந்து  போன மாட்டின் தோலை உறித்ததாக கூறி தலித் இளைஞர்கள் சங்பரிவார கும்பலால் மிக கொடூரமான முறையில் தாக்கப்;பட்டுள்ளனர் மேலும் அங்கு நடந்த வன்முறையாலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.மாட்டை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் மனித உயிர்கள் வேட்டையாடப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து தலித் சமூகத்தினர் மீது தாக்குதல் நடைபெறுமானால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது இந்திய இறையாண்மைக்கு எதிராக மத்திய பாஜக அரசு நடந்து வருகிறது.இதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வன்மையாக கண்டிப்பதுடன் இந்திய இறையாண்மைக்கு எதிராக யார் நின்றாலும் இறையாண்மை காக்கவும் தலித் ஆதரவாக போராடவும் தவ்ஹீத் ஜமாத் களம் இறங்க தயாராக உள்ளது என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட தலைவர் நஸீர் அஹமது தலைமை தாங்கினார் ஏராளமான தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் உறுப்பினர்கள் சிறுவர் சிறுமியர் ஆண்கள் பெண்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர் அவர்களின் பாதுகாப்பிற்காக ஏராளமான காவல் துறைஅதிகாரிகள் பாது பணியில் ஈடுபடுத்தப்பட்டிறுந்தனர்.

பேட்டி   மாநில தலைவர் அல்தாஃபி