Saturday, April 01, 2017

On Saturday, April 01, 2017 by Tamilnewstv in    
19 ஆம் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கொண்டாட்டங்கள் – (பதிவறிக்கை (தமிழ்) - 31.௦3.2௦17
நிகழ்ச்சி நிரல்
எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரி தனது 19ஆம் வருட கல்லூரி ஆண்டு விழாவை கல்லூரி வளாகத்தில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடியது.  திருச்சி பகுதியில் சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக திகழும் எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரி துவக்கப்பட்டு 19 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 19ஆம் வருட ஆண்டு விழா கொண்டாட்டங்கள் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. எம்.ஏ.எம் பொறியியல் கல்லூரியின் செயலர் முனைவர் முகம்மது நிஜாம், செயல் அலுவலர் திருமதி ஷஷ்மினாஸ் நிஜாம், இயக்குனர் பேராசிரியர் திரு சர்வதயாபரன், முதல்வர்  முனைவர் ரவிமாறன் , ஆராய்ச்சி குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் மொகமதி பேகம், மற்றும் துணை முதல்வர் நல்லுசாமி, மற்றும் பல்வேறு துறை தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
சிறப்பு விருந்தினர் விபரங்கள்
சிறப்பு விருந்தினர் 1: பேராசிரியர் K M காதர் மொஹிதீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் தேசிய தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
சிறப்பு விருந்தினர் 2: திரு. K A M முகம்மது அபூபக்கர், எம்.எல்.ஏ மற்றும் மாநில பொது செயலாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
உள்ளரங்க விருந்தினர்: ஹாஜி. எம். அப்துல் மஜீது, தாளாளர், எம்.ஏ.எம் கல்வி குழுமம்.
முதன்மை: முனைவர். எம். ஏ. முகம்மது நிஜாம், செயலர், எம்.ஏ.எம் பொறியியல் கல்லூரி.


மற்றும்
1.  எம். சாஸ்மினாஸ் நிஜாம், செயல் அலுவலர்.
2.  பேராசிரியர் . எஸ். சர்வதயாபரன், இயக்குனர்.
3.  முனைவர். S. ரவிமாறன், முதல்வர்.
4.  முனைவர். ஒய். முகம்மது பேகம், ஆராய்ச்சி குழு ஒருங்கிணைப்பாளர்.
5.  பேராசிரியர். V. நல்லுசாமி, துணை முதல்வர்.

சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தல்:
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் தேசிய தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் K M காதர் மொஹிதீன்க்கு கல்லூரியின் செயலர் முனைவர். எம். ஏ. முகம்மது நிஜாம் பொன்னாடை மற்றும் நினைவு பரிசு வழங்கினர்.
மாநில பொது செயலாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், K A M முகம்மது அபூபக்கர்க்கு கல்லூரியின் செயலர் முனைவர். எம். ஏ. முகம்மது நிஜாம் பொன்னாடை மற்றும் நினைவு பரிசு வழங்கினர்.
விருந்தினர்கள் சிறப்புரை:

விருந்தினர் 1 பேருரை:
பேராசிரியர் திரு காதர் மொஹிதீன் தனது பேருரையில் மாணவர்களுக்கான நற்பண்புகள், மற்றும் அதன் இன்றியமையாமை குறித்து விளக்கி பேசினார். பொறியியல் பட்டபடிப்பு பெற்று தரும் அயல்நாட்டு பணியினை வெற்றிகளிப்புடன் செய்து முடிக்க ஒழுக்க படிப்பு அவசியம் என்று கூறினார். கல்வி என்ற ஒன்று இயற்கையாய் இறைவனால் படைக்கப்பட்ட படைப்பு என்றும் உள்ளத்திலிருந்து வருவது தாம் நல்ல கல்வி என்றும் பறைசாற்றினார். பேராசிரியர் அவர்கள் தனது உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டி கல்வியின் அவசியத்தை விளக்கினார். மேலும் இன்றியமையா இயற்கை கல்வியை கற்று மாணவர்கள் வளமும் நலமும் பெற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனின் பெயரால் வேண்டி விரும்பி கேட்டு கொண்டார். பரிசுகளை வென்ற மாணவ மாணவிகளுக்கு தனது பாராட்டுகளை பதவி செய்தார். இந்திய சமுதாயம், வளர்ந்து வரும் மாணவ செல்வங்களை மட்டுமே நம்பி உள்ளது என்று கூறினார்.
விருந்தினர் 2 சிறப்புரை:
சட்டமன்ற உறுப்பினர் திரு. முகம்மது அபூபக்கர் தனது உரையில் மாணவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் பல அறிவுரைகளை வழங்கினார். மாணவர்கள் ஒழுக்க சீலர்களாக உருவெடுக்க வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டு கொண்டார்.  மாணவர்கள் நிருபனங்களில் பணியாற்றும் விதம் தாங்கள் கல்வி பயின்ற கல்லூரியில் இருந்து கற்று கொள்ள பட்டவையாக இருக்க வேண்டும் என்று கூறினார். பெண் கல்வி குறித்து சிறப்பாக பேசிய சட்டமன்ற உறுப்பினர், வெற்றிபெற்ற ஆணுக்கு பின் பெண்ணின் பங்கு அளப்பரியது என்று பாராட்டினார். அதற்கு எடுத்துக்காட்டாக கல்லூரியின் செயல் அலுவலரை மேற்கோள் காட்டினார். பொறியியல் பயிலும் மாணவர்கள் தங்களுக்கு எடுத்துக்காட்டாக மேதகு மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் அய்யாவை எடுத்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

கல்லூரி செயலர் சிறப்புரை:
செயலர் திரு முகம்மது நிஜாம் தனது சிறப்புரையில் பரிசு பெற்ற மாணவர்களை பாராட்டியதோடு மேலும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்களை தெரிவித்தார். 19 வருடம் எம்..எம் கல்லூரி கடந்து வந்த வெற்றி பாதையை மாணவர்களிடம் களிப்போடு பகிர்ந்து கொண்டார். மேலும் தங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கி விழாவினை சிறப்பித்தமைக்காக சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி வினவினார்.  
கல்லூரி இயக்குனர் சிறப்புரை:
இயக்குனர் தனது சிறப்பு உரையில் கல்லூரியின் வளர்சிக்காகவும், மேன்மைக்காகவும் உறுதுணையாக நின்ற மாணவர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். ஒரு வருடம் கல்லூரி மேற்கொண்ட வளர்ச்சி திட்டங்களை விவரித்து பேசினார். கிராமபுறங்களுக்கு சமூக அக்கறையிலான நலத்திட்ட உதவிகள், கிராமங்களை சார்ந்து இருக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கு எம்.ஏ.எம் பொறியியல் கல்லூரி ஆற்றிய பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் பற்றி விரிவாக உரையாற்றினார்.
மேடை நிகழ்வுகள்
முதல்வரின் ஆண்டறிக்கை:
1.  வருகை பதிவேட்டில் 1௦௦% தந்தமைக்காக 36 மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கபடுகிறது 
2.  இந்த ஆண்டில் நமது கல்லூரியின் அனைத்து துறைகளையும் சேர்த்து  48 முறை சிறப்பு விருந்தினர் உரை நடைபெற்றது
3.  தொழிற்சாலை பார்வையிடல் 18 முறை நடைபெற்றது மற்றும்
4.  26 கருத்தரங்கு நிகழ்ச்சிகள் அனைத்து துறைகளிலும் நடைபெற்றது
5.  மதிப்பு செரியூட்டபட்ட படிப்புகள்: கட்டிட பொறியியல் துறையால் நடத்தப்பட்டது.
பல்கலைகழக முதன்மை இடங்கள்:
தனிநபர் விருதுகள் (கல்வி):
1.       அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் நடைபெற்ற தேர்வுகளில் 9௦% மேல் மதிப்பெண் பெற்ற 11 மாணவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
2.       கல்லூரியின் அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
தனி நபர் விருதுகள் (விளையாட்டு):
             கல்லூரியின் விளையாட்டுதுறை மூலம் நடத்தப்பட்ட 1௦௦மீ,2௦௦மீ,4௦௦மீ,8௦௦மீ,16௦௦மீட்டருக்கான,ஓட்டபந்தயம்,தட்டுஎறிதல், குண்டுஎறிதல்,உயரம்தாண்டுதல்,நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது
            இப்போட்டியில் 18 மாணவிகள் மற்றும் 27 மாணவர்கள் பரிசுகளை வென்றுள்ளனர்
குழு விருதுகள் (விளையாட்டு):
            4௦௦மீ தொடர் ஓட்டம், கைப்பந்து, கூடைபந்து, கால்பந்து, கபாடி போட்டிகள் நடத்தப்பட்டது.
            இப்போட்டியில் 44 மாணவிகள் மற்றும் 61 மாணவர்கள் பரிசுகளை வென்றுள்ளனர்.
ஒட்டு மொத்த சாம்பியன் பெண் (விளையாட்டு):
           மாணவிகளுக்கான ஒட்டுமொத்த அளவிலான போட்டியில் மஞ்சள் நிற அணியினர் 44 புள்ளிகள் அடிப்படையில் கோப்பையை கைபற்றினர்
         ஒட்டுமொத்த  சாம்பியன் பட்டத்தை செல்வி. S. ஐஸ்வர்யா வென்றார்
ஒட்டுமொத்த சாம்பியன் ஆண் (விளையாட்டு):
           பச்சை நிற அணியினர் ஒட்டுமொத்த அளவிலான  கோப்பையை கைபற்றினர். இவர்கள் 64 புள்ளிகள் அடிப்படையில் வெற்றி இலக்கை அடைந்துள்ளனர்.
           ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை திரு.T.இளையராஜா மற்றும் S.சையது அசீஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்
கலை மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகளின் பதிவு,
அதனை தொடர்ந்து பல்வேறு மாணவ மாணவிகள் கலந்து கொண்ட பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நன்றியுரை மற்றும் நாட்டுபண் நவில்தல்.

கோலாகலமான கல்லூரி ஆண்டு விழா மாணவர்களின் கரகோஷத்தொடும், நாட்டு பன்னுடனும் முடிவுற்றது.

0 comments: