Showing posts with label சிவகங்கை. Show all posts
Showing posts with label சிவகங்கை. Show all posts

Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
துபாய் நாட்டில் இறந்த கட்டுமானத் தொழிலாளியின் உடலை மீட்டுத் தரக்கோரி அவரது குடும்பத்தினர் சிவகங்கை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
கட்டுமானத் தொழிலாளி
சிவகங்கையை அடுத்த கீழப்பூங்குடி அம்பேத்கார் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து மருதன் (வயது 28). இவரது மனைவி மேனகா(24). இவர்களது மகன் தஞ்சன் (3). இந்தநிலையில் மாரிமுத்து மருதன் கடந்த 2013–ம் ஆண்டு டிசம்பர் மாதம் துபாயில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றார். அங்கு பணியில் நீடித்த அவர் அடிக்கடி குடும்பத்தினருடன் போனில் பேசி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 11–ந்தேதி இரவு அவரது குடும்பத்தினருக்கு துபாயில் இருந்து ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர், நான் மாரிமுத்து மருதனின் நண்பர் என்று கூறினார். அத்துடன் மாரிமுத்துமருதன் இறந்து விட்டதாகவும், 3 நாட்களில் அவரது உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மாரிமுத்துமருதனை போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அது முடியாமல் போனது. ஆனாலும் அவர் பணியில் இருந்த நிறுவனத்தினை தொடர்பு கொண்டபோது, அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவரது உடல் இதுவரை ஊர் வந்து சேரவில்லை.
நடவடிக்கை தேவை
இதையடுத்து மாரிமுத்து மருதனின் தம்பி ஜெயக்குமார் என்பவர் சிவகங்கை மாவட்ட கலெக்டர் ராஜாராமனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:–
எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளது. நான் கூலி வேலை பார்த்து பெற்றோரை காப்பாற்றி வருகிறேன். என் அண்ணனின் மனைவி, மகன் ஆகியோர் அவரது வருமானத்தை நம்பியே இருந்தனர். எங்களுக்காகவே என் அண்ணன் பணத்தை கடன் வாங்கிச் செலுத்திவிட்டு துபாய் நாட்டில் கட்டுமான நிறுவனத்தில் வேலைக்கு சென்றார். அங்கு அவர் இறந்துவிட்டார் என்பதை அறிந்த எங்கள் குடும்பத்தினர் ஆழ்ந்த துக்கத்தில் உள்ளனர்.
அத்துடன் அவரது உடலை பார்க்க முடியவில்லையே என்று நாங்கள் அனைவரும் வேதனையில் தவித்து வருகிறோம். எனவே எனது சகோதரனின் உடலை மீட்டு இங்கு கொண்டு வருவதற்கு அரசுத்தரப்பில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
வல்லனி, வண்டவாசி கண்மாய் பகுதியில் தனி நபருக்கு பட்டா வழங்க கூடாது என்று கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
தனிநபருக்கு பட்டா
சிவகங்கையை அடுத்த வல் லனி மற்றும் வண்டவாசி கிராம மக்கள் கலெக்டர் ராஜா ராமனிடம் கொடுத் துள்ள மனுவில் கூறியிருப்பதா வது:–
வல்லனி மற்றும் வண்டவாசி கிராம கண்மாய் மூலமாக சுமார் 1,500 ஏக்கர் விவசாய நிலம் பயன் அடைந்து வரு கிறது. இந்த நிலையில் இந்த கண்மாயில் நீர்பிடிப்பு பகுதி மற்றும் வல்லனி சுடுகாட்டு பகுதி அடுத்தடுத்து உள்ளது.
தற்போது இந்த இடத்தை சில தனிநபர்களுக்கு பட்டா கொடுக்க முயற்சி செய்து வருகின்றனர். அவ்வாறு பட்டா கொடுத்தால் இந்த பகுதி விவசாயம் பாதிக்கப் படும். எனவே விவசாயத்தை நம்பியுள்ள இந்த பகுதி மக்களுக்கு உதவிடும் வகையில் இந்த இடத்தை தனிநபர்களுக்கு பட்டா கொடுக்க கூடாது.
எப்போதும் போல பொது மக்களின் பயன்பாட்டுக்கு இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள் ளனர்.
On Wednesday, September 17, 2014 by farook press in ,    
சிவகங்கை நகர் தெப்பக் குளத்திற்கு மழை தண் ணீர் வரும் வரத்துக் கால் வாய் சீரமைக்கப்பட்டது.
தெப்பக்குளம்
சிவகங்கை நகரின் மையப் பகுதியில் புகழ்பெற்ற தெப்பக் குளம் உள்ளது. இந்த தெப்பக் குளம் சிவகங்கை நகர் முதன் முதலில் உருவானபோது அமைக்கப்பட்டது. இந்த தெப்பக்குளத்திற்கு தண்ணீர் தற்போது கலெக்டர் அலுவலக வளாகம் அமைந்துள்ள பகுதி யில் இருந்து மழைபெய்யும் காலங்களில் வரத்துக்கால் வாய் மூலமாக வந்து சேரும்.
சமீபகாலமாக இந்த வரத்துக் கால்வாய் முழுமை யாக அடைப்பட்டதால் தெப் பக்குளத்திற்கு மழைநீர் கிடைக் காத நிலை இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து நக ராட்சி சார்பில் இந்த வரத் துக்கால்வாயை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது.
சீரமைப்பு
நகராட்சி ஊழியர்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு தெப்பக்குளத்திற்கு மழை நீர் வரும் வரத்துக் கால்வாயில் தேங்கி கிடந்த மண் மற்றும் குப்பைகளை அகற்றி வரத்துக்கால்வாயை சீரமைக்கும் பணியில் ஈடு பட்டனர். நகராட்சி தலைவர் அர்ச்சுனன், ஆணையாளர் சரவணன், பொறியாளர் குருசாமி, சுகாதார அதிகாரி ராஜ் மோகன் மற்றும் அதி காரிகள் இந்த பணியினை பார்வை யிட்டனர்.

Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by farook press in ,    
சிவகங்கையை சேர்ந்தவர் சுதா (வயது 38). இவரும் அரசனூர் கிராமத்தை சேர்ந்த குணவதி என்பவரும் ஒரு தனியார் பஸ்சில் சிவகங்கை வந்தனர். அப்போது, சுதாவின் கால் குணவதி மீது தெரியாமல் பட்டுவிட்டது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதுப்பற்றி குணவதி செல்போன் மூலம் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையில் பஸ் திருமாஞ்சோலை பஸ் நிறுத்தம் வந்தது. அப்போது அங்கு தயாராக நின்று இருந்த குணவதியின் தந்தை துரைச்சாமி, தாயார் பேச்சியம்மாள், பெரியப்பா வெள்ளைச்சாமி ஆகியார் சுதாவின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கினார்களாம். இதுகுறித்து சுதா பூவந்தி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் மலைச்செல்வம், தாக்குதலில் ஈடுபட்ட குணவதி, அவரது தந்தை உள்பட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.