Showing posts with label மதுரை. Show all posts
Showing posts with label மதுரை. Show all posts

Sunday, March 29, 2015

On Sunday, March 29, 2015 by Unknown in ,    

உலக தமிழ் பல்கலைக்கழகம், அமெரிக்கா. சார்பாக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழா மதுரையில் நடைபெற்றது, அதில் I T ப்ரோ சென்டரின் நிறுவனர் டாக்டர் டாமினிக் செவியோமென்டிக் அவர்களுக்கு உலக தமிழ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் & வேந்தர் டாக்டர் செல்வின் குமார் அவர்கள் டாக்டர் பட்டத்தினை வழங்கி கௌரவித்தார்.



Thursday, March 26, 2015

On Thursday, March 26, 2015 by Unknown in ,    
மதுரையில் அ.தி.மு.க. சார்பில் நீர்–மோர் பந்தல்கள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பகுதி வாரியாக மதுரை மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட 10 பகுதிகளிலும் இன்று நீர்–மோர் பந்தல்கள் திறக்கப்பட்டன. இங்கு நீர்–மோர், தர்ப்பூசணி, இளநீர், ரோஸ்மில்க், வெள்ளரி போன்ற குளிர்ச்சியான பொருட்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன.
மதுரை மத்திய 2–ம் பகுதி செயலாளர் தளபதி மாரியப்பன் ஏற்பாட்டில் பெரியார் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ, நீர்–மோர் வழங்கினார். இதைத்தொடர்ந்து ஜெய்ஹிந்த் புரத்தில் பொதுமக்களுக்கு நீர்–மோர் வழங்கப்பட்டது.
பழங்காநத்தத்தில், மேற்கு 2–ம் பகுதி சார்பில் மண்டல தலைவர் சாலைமுத்து ஏற்பாட்டில் அமைக்கப்பட்டிருந்த நீர்–மோர் பந்தலை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.
மத்திய 1–ம் பகுதி சார்பில் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் பகுதி செயலாளர் ஜெயபால் ஏற்பாட்டில் நீர்–மோர் பந்தல்கள் திறக்கப்பட்டன. மதுரை நரிமேட்டில் வடக்கு 2–ம் பகுதி சார்பில் மண்டல தலைவர் ஜெயவேல் ஏற்பாட்டில் நீர்–மோர் பந்தல் திறக்கப்பட்டது.
அண்ணா நகரில் வடக்கு 1–ம் பகுதி சார்பில் பகுதி செயலாளர் அண்ணாநகர் முருகன் ஏற்பாட்டில் நீர்–மோர் பந்தல்கள் திறக்கப்பட்டன. மதுரை மகால் முன்பு தெற்கு 2–ம் பகுதி சார்பில் பகுதி செயலாளர் வி.கே.எஸ்.மாரிச்சாமி ஏற்பாட்டில் அமைச்சர் செல்லூர் ராஜூ நீர்–மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்.
தெற்கு 1–ம் பகுதி சார்பில் நெல்பேட்டையில் பகுதி செயலாளர் ராஜலிங்கம் ஏற்பாட்டில் நீர்–மோர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.
மதுரை நகரில் 10 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நீர்–மோர் பந்தல்களை திறந்து வைத்து அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:–
ஏழை–எளிய மக்கள் நலனில் அக்கறை கொண்டவர் மக்களின் முதல்வர் அம்மா. எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் உதிக்காத சிந்தனை, தமிழக மக்களின் மீதான கரிசனை அம்மாவுக்கு எப்போதுமே உண்டு. எனவே தான் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக ஆங்காங்கே நீர்–மோர் பந்தலை திறக்க நம் தாய் ஆணையிட்டுள்ளார்.
மேலும் இந்த நீர்–மோர் பந்தலை மிகவும் சுகாதாரமாக அமைக்க அவர் கட்டளையிட்டுள்ளார். எனவே இந்த நீர்–மோர் பந்தலை பொதுமக்கள் தொடர்ந்து பயன்படுத்த நாம் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் நீர்–மோர் பந்தலாக இவை அமைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சிகளில் மேயர் ராஜன் செல்லப்பா, துணை மேயர் திரவியம், மாவட்ட நிர்வாகிகள் புதூர் துரைப்பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மண்டல தலைவர்கள் ராஜ பாண்டியன், சண்முகவள்ளி, பொதுக்குழு உறுப்பினர்கள் முத்துராமலிங்கம், முனியசாமி, அணி செயலாளர்கள் ஜெயபாலன், விஜயகுமார், ரமணி, ராஜீவ்காந்தி, வினோத்குமார், பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், கலைச்செல்வம், நிலையூர் முருகன், ஓம்ஜெயம் பாரதி முருகன், பிரிட்டோ, தொகுதி நிர்வாகிகள் ரவிச்சந்திரன், சுப்பு, ஏ.பி.பாலசுப்பிரமணி, இளைஞரணி நிர்வாகிகள் பார்த்திபன், பரமேஸ்வரன், முத்துமுருகன், தயிர் மார்க்கெட் அன்பழகன், செந்தில்குமரன், சரவணன்,
சசிகுமார், ரவிராஜ், வக்கீல்கள் ரமேஷ், அசோகன், மாவூத்துவேலவன், சிவமுருகன், கவுன்சிலர்கள் கேசவ பாண்டியம்மாள், புதூர் அபுதாகீர், லட்சுமி, தாஸ், முத்துமீனாள், கலாவதி, முருகேஸ்வரி, சித்திரை ஜோதி, முத்து ராஜா, ஆறுமுகம், குமார், ஜெயக்குமார், பாகச்செயலாளர்கள் கண்ணன், பாஸ்கரன், வட்ட செயலாளர்கள் சக்திவிநாயகர் பாண்டியன், தேவதாஸ், பஜார் துரைப்பாண்டி, கந்தகுமார், கணேசன், கார்த்திக் முனியசாமி, புதூர் கண்ணன், கே.வி.கே.கண்ணன், ஜெயராஜ், மணிமுருகன், நிர்வாகிகள் மிசா செந்தில், தல்லாகுளம் மோகன்குமார், ரகுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
On Thursday, March 26, 2015 by Unknown in ,    
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் எ 1 கிளார்க்காக பணியாற்றி வருபவர் செல்லூரை சேர்ந்த கண்ணகி .உத்தங்குடி பகுதியை சார்ந்த செல்வராஜ் என்பவர் நகை அடகு கடை வைப்பதற்கு லைசென்ஸ் பெறுவதற்காக கடந்த ஜனவரி மாதக் கடைசியில் விண்ணப்பித்து இருந்தார் .அதற்கான கோப்பை தாசில் தாரிடம் கொண்டு சேர்ப்பதற்கு 4000 ரூபாய் லஞ்ச பணமாக தனக்கு தர வேண்டும் என கண்ணகி கேட்டுள்ளார் .பணம் தருவதாக ஒப்புக்கொண்ட செல்வராஜ் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் செய்து விட்டு கண்ணகியிடம் பணத்தை கொடுப்பதற்காக வந்தனர் .பணத்தை மேஜையின் மீது வைக்க சொன்ன கண்ணகி தனது செல்போனை எடுத்து அதன் மேல் வைத்துள்ளார் .அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறை டி எஸ் பி இசக்கி ஆனந்தன் தலைமையிலான படை கண்ணகியை கையும் களவுமாக பிடித்தனர் .தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் .மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளே செயல்படும் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் கேட்ட சம்பவம் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .குரூப் 2 தேர்வு மூலம் பணிக்கு வந்து 1 வருடம் ஆவதற்குள் லஞ்சம் வாங்கிய வழக்கில் கண்ணகி கைதாவது குறிப்பிட தக்கது