Showing posts with label Ariyalur. Show all posts
Showing posts with label Ariyalur. Show all posts

Friday, September 19, 2014

On Friday, September 19, 2014 by farook press in ,    
அரியலூர் மாவட்டத்தில் பாதுகாப்புக்காக பொது சுற்றுச்சுவர் இல்லாத சிமெண்டு ஆலைகளில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்டு ஆலைகளில் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியா வுல்ஹக் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண் டுகள் இளங்கோ, செல்லதுரை, துணை சூப்பிரண்டுகள் ஸ்ரீதரன், வின்சென்ட் ஜெய ராஜ், ஜெயங்கொண்டம் உட் கோட்ட பகுதிகளில் உள்ள சிமெண்டு ஆலைகளின் நிர் வாக அதிகாரிகள், பாது காப்பு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியா வுல்ஹக் பேசியதாவது:-

ஆலைகளின் பாதுகாப்பு குறித்தும், அதன் சுற்றுப் புறங்களில் ஏதேனும் குற்ற நிகழ்வுகள் நடந்தால் கண்டு பிடிப்பதற்கு ஆலை நிர்வாகம் உதவுவது சம்பந்த மாகவும் ஆலோசிக்கப்பட் டது.

கண்காணிப்பு கேமரா

கயர்லாபாத் அரசு சிமெண்டு ஆலையில் எந்த இடத்திலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில் லை. தேவையான இடங் களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். ஆலைகளில் பிரதான வாச லில் உள்ளே வரும் மற்றும் வெளியே செல்லும் வாகனங் களை கண்காணிக்க பொருத் தப்பட்டுள்ள கேமராக்களின் தகுதி மற்றும் பதிவு திறன் மேம்படுத்தப்பட வேண்டும்.

ஓட்டுனர்கள் ஓய்வு எடுக்கும் அறை மற்றும்¢ உணவக விடுதி களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண் டும். அப்படி பொருத் தினால்தான் அன்னிய நபர்களை கண்டு பிடிக்க முடியும். யார்டுக்கு வந்து செல்லும் வாகனங் கள் கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட வேண்டும்.

வாகன சோதனை

பிரதான சாலைகளில் இருந்து ஆலைக்கு பிரிந்து செல்லும் இடத்தில் பிரதான சாலையை நான்கு பக்கங்களும் கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட வேண் டும்.

ஆலைகளின் பிரதான வாச லில் வந்து செல்லும் வாக னங்கள் முழுமையாக சோத னை செய்யப்பட வெண் டும். ஆலைகளின் பிரதான வாசல் மற்றும் இதர வாசல் களில் வந்து செல்லும் வாகனங் களின் ஓட்டுனர் மற்றும் கிளீ னர்கள் ஆகியோர்களின் புகைப்படத்துடனான அடை யாள அட்டையை சரி பார்த்து அனுப்ப வேண்டும்.

சுற்றுச்சுவர்

ஆலைகளில் உள்ள லாரி நிறுத்தும் இடம், உணவக விடுதியில் இருப்பவர்களை அடிக்கடி சோதனை செய்ய வேண்டும். ஆலைகளின் பிர தான வாசல் மற்றும் இதர வாசல்களில் வந்து செல்லும் வாகனங்கள் மற்றும் ஆவணங் களை சரிபார்க்கும் அளவிற்கு போதிய காவலர்கள் நியமிக்கப் பட வேண்டும். மேலும் அந்த வாசல்களின் வழியாக வந்து செல்லும் வாகனங்களின் எண் மற்றும் ஓட்டுனர் முக வரியை நேரப்படி தனியாக ஒரு ஆவணத்தில் எழுதப்பட வேண்டும்.

ஆலைகளில் பாதுகாப்பில் உள்ள காவலர்களை அதிக அளவில் தணிக்கை செய்யப் படவேண்டும். பொது சுற்றுச் சுவர் இல்லாத ஆலைகளில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட வேண்டும். சுற்றுச்சுவர் இல் லாத லாரி நிறுத்தங்களில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட வேண்டும். இவற்றை ஆலை நிர்வாகிகள் பின்பற்ற வேண் டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
செந்துறை,
6 பெண்கள், குழந்தை உள்பட 8 பேரை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கொலை செய்தது எப்படி என்பது பற்றி அந்த வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஒப்பந்தக்காரர்
செந்துறை அருகே உள்ள சேந்தமங்கலம் ஏரிக்கரையை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் அப்பகுதியின் அருகில் உள்ள ஒரு சிமெண்டு ஆலையில் ஒப்பந்தக்காரராக இருந்தார். இவரது மனைவி பார்வதி. இவர்களின் குழந்தைகள் மகாலட்சுமி, கீர்த்தனா, இன்பதமிழன். வேல்முருகன் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் அவரது பெற்றோருடன் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வேல்முருகனின் பெற்றோர் பெருமாள், மல்லிகா மற்றும் அவரது மகள் மகாலட்சுமி, மகன் இன்பத்தமிழன் ஆகியோர் அருகில் உள்ள உறவினர் வீட்டில் சென்று படுத்துக்கொண்டனர். வேல்முருகன், அவரது மனைவி பார்வதி, 1 வயது மகள் கீர்த்தனா ஆகியோர் குடிசை வீட்டில் தூங்கினார்கள்.
3 பேர் கொலை
மறுநாள் அதிகாலை வேல்முருகன் வீட்டிற்கு டிரைவர் விஜயகாந்த் டிராக்டரை எடுக்க சென்றார். அப்போது அங்கு வேல்முருகன் கோடாரியால் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அருகில் காயங்களுடன் குழந்தை கீர்த்தனா மயங்கி கிடந்தது. சிறிது தூரத்தில் பார்வதி நிர்வாண நிலையில் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது மார்பில் சூலத்துடன் கூடிய சாமி சிலை ஒன்றும் கிடந்தது.
இதனைக்கண்ட விஜயகாந்த் அலறியடித்து கொண்டு ஓடி உறவினர்களிடம் தகவல் தெரிவித்தார். அவர்கள் அங்கு வந்து மயங்கிய நிலையில் கிடந்த குழந்தை கீர்த்தனாவை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையும் இறந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
5 தனிப்படை
இதே போல் அரியலூர் அருகே கயர்லாபாத் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி. தனியார் அறவை ஆலையில் வேலை பார்த்து வந்த இவருக்கு 3 மகள்கள். இதில் ஒரு மகள் சரஸ்வதி (35) கணவரை பிரிந்து தாயுடன் குடிசை வீட்டில் தங்கி, கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் கடந்த 29–ந் தேதியன்று இரவு வீட்டில் லட்சுமியும், சரஸ்வதியும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள் இதைக்கண்டு கயர்லாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த 5 கொலைகள் தொடர்பாக துப்பு துலக்க போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளியை தேடி வந்தனர்.
வாக்குமூலம்
இந்நிலையில் நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பீடாக்கடை உரிமையாளர் செல்வத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டி, பொருட்களை திருடிய வாலிபரை தம்மம்பட்டி போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரை அடுத்த கத்தரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த அன்னக்கரை மகன் சுப்பராயன் (வயது 24) என்பது தெரியவந்தது. மேலும் அவர் கொலை சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இது குறித்து சுப்பராயன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளதாவது;–
நான் லாரி கிளீனராக வேலை பார்த்தேன். பின்னர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் சிமெண்டு ஆலையில் 2 நாட்களாக வேலை தேடி அலைந்தேன். வேலை கிடைக்கவில்லை. சாப்பிடுவதற்கு பணம் இல்லாததால், சிமெண்டு ஆலை எதிரே இருந்த கோழிக்கடையில் உள்ளே புகுந்து ஒரு கோழியையும், கத்தியையும் எடுத்து கொண்டு வெளியே வந்தேன். அதனை சுட்டு சாப்பிடலாம் என்று சாலையில் சென்று கொண்டிருந்தேன். அப்போது சேந்தமங்கலத்தில் தனியாக இருந்த வீட்டை பார்த்ததும் அதில் பணம், நகை கிடைக்கும் என்று உள்ளே சென்றேன்.
கோடாரியால் வெட்டினேன்
வீட்டிற்குள் சட்டையில் இருந்த 200 ரூபாய் மற்றும் வேல்முருகனின் செல்போனை எடுத்தேன். அப்போது பார்வதி எழுந்து எனது கையை பிடித்து விட்டார். அதனால் அருகில் கிடந்த கோடாரியை எடுத்து பார்வதியை வெட்டினேன். சத்தம் கேட்டு எழுந்த வேல்முருகனையும் வெட்டினேன். குழந்தை அழுது கொண்டு இருந்ததால் கோடாரியால் தாக்கினேன்.
பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த பார்வதியை கற்பழித்துவிட்டு, மேலும் பணம், நகைகள் உள்ளனவா என்று தேடி பார்த்துவிட்டு, அங்கே நிறுத்தி இருந்த வேல்முருகனின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பி சென்றேன்.
பணம் கொள்ளை
அப்போது செந்துறை போலீசார் இரவு ரோந்தின் போது வழிமறித்தனர். அவர்களிடம் இருந்து தப்பித்து பொன்பரப்பி சென்ற போது பெட்ரோல் தீர்ந்து விட்டதால் முந்திரி காட்டிலேயே மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டேன். இதேபோன்று கயர்லாபாத்தில் தனியாக இருந்த தாய், மகளை கொன்றுவிட்டு அதில் சரஸ்வதியை கற்பழித்துவிட்டு அவர்கள் வைத்து இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் திருச்சி கல்லக்குடியில் ஜெயமேலு (82) என்ற மூதாட்டியையும், 2012–ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் பத்திரகவுண்டம்பாளையத்தில் பணம் தரமறுத்த தனது பாட்டியையும் கொலை செய்ததையும், தம்மம்பட்டி அருகே உள்ள வெள்ளைக்கல் குவாரியில் கிளீனராக வேலை பார்த்தபோது அங்கு வட்டி தொழில் செய்து வந்த சின்னபாப்பு (45) என்ற பெண்ணையும் கொடூரமாக கற்பழித்து கொன்றுவிட்டு, அவரிடம் இருந்த ரூ.6 ஆயிரத்து 500–ஐ கொள்ளையடித்ததையும் சுப்பராயன் ஒப்புக்கொண்டார்.
போலீசார் விசாரணை
இதைத்தொடர்ந்து அரியலூர், திருச்சி, சேலம் ஆகிய 3 மாவட்ட போலீஸ் அதிகாரிகளும் சுப்பராயனை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காமக்கொடூரன் ஜெய்சங்கர் போன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஒருவனே இத்தனை கொலைகளை தடயமில்லாமல் செய்து இருப்பது போலீசாரிடையேயும், பொதுமக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by farook press in ,    
அரியலூர் வாலாஜா நகரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தை களுக்கு கலெக்டர் சரவணவேல்ராஜ் கலவை சாதம் வழங்கினார்.
கலவை சாதம்
அரியலூர் மாவட்டம், அரியலூர் வாலாஜாநகரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு கலவை சாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பலவகை கலவை சாதம் வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
அரியலூர் வட்டாரத்தில் 125 அங்கன்வாடி மையங் களிலும் உள்ள 2825 (2–5 வயதுவரை) குழந்தைகளுக்கு பலவகை கலவை சாதம் வாரத்தில் திங்கள் முதல் சனி வரை 6 நாட்கள் வழங்கப்பட உள்ளது.
8–ந் தேதி
8–ந் தேதி முதல் அரியலூர் மாவட்டம், திருமானூர் வட்டாரத்தில் உள்ள 122 அங்கன்வாடி மையங்களில் உள்ள 2 ஆயிரத்து 842 (2–5 வயதுவரை) குழந்தைகளுக்கும் மற்றும் செந்துறை வட்டா ரத்தில் உள்ள 127 அங்கன்வாடி மையங்களில் உள்ள 2 ஆயிரத்து 390 (2–5 வயதுவரை) குழந்தைகளுக்கும் பலவகை கலவை சாதம் வழங்கப்பட உள்ளது.15–ந் தேதி முதல் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டாரத்தில் உள்ள 125 அங்கன்வாடி மையங்களில் உள்ள 2 ஆயிரத்து 835 (2–5 வயதுவரை) குழந்தைகளுக்கும் மற்றும் தா.பழூர் வட்டாரத்தில் உள்ள 120 அங்கன்வாடி மையங்களில் உள்ள 2 ஆயிரத்து 213 (2–5 வயதுவரை) குழந்தைகளுக்கும் பலவகை கலவை சாதம் வழங்கப்பட உள்ளது.
15 ஆயிரம் குழந்தைகள்
தமிழக முதலமைச்சர் அறிவித்தப்படி, 15–ந் தேதிமுதல் அரியலூர் மாவட் டத்தில் மொத்தம் உள்ள 774 அங்கன்வாடி மையங்களிலும் உள்ள 15 ஆயிரத்து 817 (2–5 வயதுவரை) குழந்தைகளுக்கும் பலவகை கலவை சாதம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில் ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பத்மினி ஜான்பால், வட்டார குழந்தை கள் வளர்ச்சி திட்ட அலுவலர் க.அன்பரசி, மாவட்ட புள்ளி யியல் ஆய் வாளர் பாலசுப்ர மணியன், திருமானூர் குழந் தைகள் வளர்ச்சி திட்ட அலு வலர் எம்.சி.அருணா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Friday, July 18, 2014

On Friday, July 18, 2014 by Anonymous in ,    
மத்திய பட்ஜெட்டை கண்டித்து அரியலூரில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் தலைமை தபால் நிலையம் முன்பு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மத்திய அரசு மத்திய பட்ஜெட்டில் இன்சூரன்ஸ், ராணுவத்தில், அன்னிய முதலீட்டை கண்டித்தும் ரெயில்வே துறை தலைவர் மயமாவதை கண்டித்தும் பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சி.பி.ஐ. சார்பாக மாவட்ட செயலாளர் உலகநாதன், மாவட்ட துணை செயலாளர் தண்டபாணி, ஜெயராஜ், மகாலிங்கம், ராஜேந்திரன், கிருஷ்ணன், சி.பி.எம். சார்பாக மாவட்ட செயலாளர் மணிவேல், மாவட்ட செயற்குழு துரைசாமி, ஒன்றிய செயலாளர் சிற்றம்பலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.