Sunday, October 12, 2014

On Sunday, October 12, 2014 by farook press in ,    


ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் மேயர், துணை மேயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்கள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 15 நாட்களாக கர்நாடகா சிறையில் அடைப்பட்டுள்ளார்.அவரை விடுதலை செய்ய வேண்டி தமிழ்நாடு முழுவதும் அண்ணா தி.மு.க.நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்தும் ,யாகம் நடத்தியும், தலைமுடி காணிக்கை செலுத்தியும், கருப்புசட்டைகள் அணிந்தும், மனித சங்கிலி நடத்தியும், அமைதியான முறையில் அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி திருப்பூர் பல்லடம் ரோடு, அருண் சில்க்ஸ் அருகில் உள்ள ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜையும், வழிபாடும் நடந்தது  இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம் தலைமை தாங்கினார். மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி,  மாவட்ட இளைஞர் அணி செயலாளர், துணை மேயர் சு.குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலளார் வி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டியும், நல்ல உடல்நல ஆரோக்யத்துடன் இருக்க வேண்டியும் 1 மணி நேரம் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
இதனை தொடர்ந்து 4-வது மண்டலம் சார்பில் காலை 5 மணி முதல், மாலை வரை அபிஷேக, அலங்கார பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்து. மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் 4வது மண்டலம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், நகர மற்றும் கிளை கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், தலைமை கழக பேச்சாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Saturday, October 11, 2014

On Saturday, October 11, 2014 by Unknown in ,    
karur Kovil parthi (amma) 10.10.2014
On Saturday, October 11, 2014 by Unknown in ,    



On Saturday, October 11, 2014 by Unknown in    
அ. இ. அ. தி .மு. க வினர்  உடுமலை திருமூர்த்தி மலைக்கு பாதயாத்திரையாக சென்று புரட்சிதலைவி அம்மா அவர்கள் விடுதலை வேண்டி சிறப்பு பிரார்த்தனை .

  மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது பொய் வழக்கை கண்டித்தும் விடுதலை வேண்டி ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதயாத்திரை சென்று திருமூர்த்திமலை கோவிலில் உடுமலை நகரமன்ற தலைவர் K.G.S ஷோபனா,  K ஆறுச்சாமி ஒன்றியசெயலாளர் ,ஜெகநாதன் ஒன்றியகுழுதுணைத்தலைவர்,G V  வாசுதேவன்   திருப்பூர்   புறநகர்   மாவட்ட   அம்மா   பேரவை செயலாளர் V .லட்சுமணசாமி திருப்பூர் மாவட்ட M .G. R. மன்ற துணைத்தலைவர். கவுன்சிலர் செல்வராஜ்.  பெரியகோட்டை ஊராட்சிமன்றத் தலைவர்  பாலசுப்பிரமணியம் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர்
On Saturday, October 11, 2014 by Unknown in ,    

On Saturday, October 11, 2014 by farook press in ,    
அண்ணா தி.மு.கழக பொதுச் செயலாளரும், மக்கள் முதலவருமான புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கில் இருந்து விடுதலையைக வேண்டியும், அவர் பூர்ண நலம் பெற்று மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்கவும் சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயரான், சண்முகவேலு எம்.எல்.ஏ.ஆகியோர் பழனி கோவிலில் தங்க தேர் இழுத்தனர். 
அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளரும், மக்கள் முதல்வருமான புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது சுமத்தபட்ட பொய் வழக்குகளிலிருந்து விடுதலையாக வேண்டி தமிழகத்திலுள்ள அனைத்து பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் அண்ணா தி.மு.க.வினர் சிறப்புப் பிரார்த்தனைகளும், பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடத்தி வருகின்றனர்.இதனை முன்னிட்டு, பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் மடத்துக்குளம் ஒன்றியக் கழகம் சார்பில் திருப்பூர் புறநகர் மாவட்டச்செயலாளரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.சண்முகவேலு ஆகியோர் தலைமையில் ஒன்றியசெயலாளர் அண்ணாத்துரை, அரசு வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், எஸ்.ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் அருள்மிகு பாலதண்டாயுதபாணிக்கு தங்கத் தேர் வடம் பிடித்தும், பாலபிசேகம், சந்தனக்காப்பு செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மேலும் மடத்துக்குளம் ஒன்றிய ஜெயலலிதா பேரவைச்செயலாளர் எஸ்.பி.சிவலிங்கம், குமரலிங்கம் பேரூராட்சித்தலைவர் சிவக்குமார், பேரூர்கழகச் செயலாளர் கே.ஏ.வரதராஜ் ஆகியோர் முன்னிலையிலும் மண்சோறு சாப்பிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றது. 
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணைச்செயலாளர் எம்.ஏ.சுப்பிரமணியம், மடத்துக்குளம் பேரூராட்சித் தலைவர் எஸ்.பழனிச்சாமி, துணைத் தலைவர் ஜி.கே.தண்டபாணி, வீராச்சாமி, கொழுமம் ஊராட்சி மன்றத்தலைவர் இந்திராணி, நீலம்பூர் செல்வராஜ், கவுன்சிலர் குணா, கே.கே.ரவி, கணியூர் பேரூராட்சி துணைத்தலைவர் கணியூர் காஜாமைதீன் மற்றும் அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

On Saturday, October 11, 2014 by farook press in ,    
திருப்பூர் வடக்கு ஒன்றிய அண்ணா தி.மு.,க.சார்பில் மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழி காட்டுதலின் பேரில் மக்கள் முதல்வரும், அண்ணா தி.மு.க.பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வழக்கில் இருந்து மீண்டு வர வேண்டி ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமையில், ஒன்றிய பெருந்தலைவர் சாமிநாதன், அவைத்தலைவர் பட்டுலிங்கம், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பூலுவபட்டி பாலு ஆகியோர் முன்னிலையில் பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மம்ன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பேரவை செயலாளர் பழனிச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பொன்னுலிங்கம்,மூர்த்தி,பானு பழனிசாமி, சண்முகம்,ஸ்ரீதேவி பழனிச்சாமி, செல்வகுமார், சரவணன்,துணை தலைவர் கருப்புசாமி,ஒன்றிய பாசறை செயலளார் சந்திரசேகர், வேலுமணி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர்கள் எவரெடிதுரை, சுலக்ஷ்னா, பொடரப்ப கவுண்டர், குமாரவடிவடிவேல்,மாணிக்கம், சிதம்பரம்,ஊராட்சி கழக செயலாளர்கள் குருசாமி, வடிவேல், முருகேசன், தங்கராஜ், குமாரசாமி, ராமசாமி, செல்வராஜ்,ஒன்றிய விவசாய அணி செயலாளர் முத்துரத்தினம், பெருமாநல்லூர் விசைத்தறி கூட்டுறவு சங்க தலைவர் ராமசாமி, செயலாளர் துரைசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் சித்ரா பெரியசாமி, கிருத்திகா ரத்தினசாமி, அண்ணா தொழிற்சங்க ஒன்றிய தலைவர் சுப்பிரமணி, கிளை செயலாளர்கள் வேலுசாமி, மாணிக்கம் மற்றும் எம்.சி.மணி, எம்.எஸ்.விஜயகுமார் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

On Saturday, October 11, 2014 by farook press in ,    
நெஞ்சை படபடக்க வைக்கும் ‘‘பேய் வேடத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்’’ என்று நடிகை லட்சுமிராய் கூறினார்.முனி–1’, ‘முனி–2’, ‘காஞ்சனா’ ஆகிய படங்களை கொடுத்த ராகவா லாரன்ஸ், இப்போது ‘கங்கா’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இதையடுத்து, அவர் ‘ஒரு டிக்கெட்ல ரெண்டு சினிமா’ என்ற படத்தை டைரக்டு செய்ய இருக்கிறார்.
இதில், இடைவேளைக்கு முன்பு ஒரு படமும், இடைவேளைக்கு பின்னர் இன்னொரு படமும் இடம்பெறும் என்றும், ஒரு படத்துக்கு ‘கிழவன்’ என்றும், இன்னொரு படத்துக்கு ‘கருப்பு துரை’ என்றும் பெயர் சூட்டியிருப்பதாக அவர் கூறினார். ‘கருப்பு துரை’ என்ற படத்தில் லட்சுமிராய் கதாநாயகியாக நடிக்கிறார்.இதுதொடர்பாக ராகவா லாரன்சும், லட்சுமிராயும் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு லட்சுமிராய் அளித்த பதில்களும் வருமாறு:–
கேள்வி:– சமீபகாலமாக உங்களைப்பற்றிய பரபரப்புகள் அடங்கியிருக்கிறதே... என்ன விஷயம்?
பதில்:– ‘‘நான் பரபரப்புகளில் இருந்து விலகி இருக்கிறேன். நானுண்டு என் வேலை உண்டு என்று ஒதுங்கியிருக்கிறேன். கிசுகிசுக்களுக்கு இடம்கொடுக்காமல் நடந்துகொள்கிறேன்.
கேள்வி:– உங்களுக்கு வரப்போகிற கணவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்?
பதில்:– நல்ல மனிதராக இருக்க வேண்டும்.
கேள்வி:– எப்படிப்பட்ட ஆண்களை உங்களுக்கு பிடிக்கும்?
பதில்:– ஆண்களைப்பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்க நான் விரும்பவில்லை.
பேய் வேடம் 
கேள்வி:– இப்போது வருகிற பெரும்பாலான கதாநாயகிகள் பேய் வேடங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்களே?, அதுபோல் உங்களுக்கும் ஆசை இருக்கிறதா?
பதில்:– தமிழ் படஉலகில் இப்போது பேய் படங்கள் அதிகமாக வருகின்றன. அடுத்து வரஇருக்கும் ‘அரண்மனை’யும் பேய் படம்தான். அந்த படத்திலும் நான் நடித்திருக்கிறேன். ஆனாலும், நெஞ்சை படபடக்க வைக்கும் வகையில் முழுமையான ஒரு பேய் வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது.
கேள்வி:– பெரும்பாலும் நீங்கள் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராகத்தானே நடிக்கிறீர்கள்?
பதில்:– இப்போதெல்லாம் பல கதாநாயகிகள் அல்லது பல கதாநாயகர்கள் இணைந்து நடிக்கும் படங்கள்தான் வருகின்றன. படங்களுக்கான பட்ஜெட் தொகை அதிகரித்துக்கொண்டே போவதால், இதுபோன்ற ‘மல்டி ஸ்டார்’ படங்கள் வருகின லட்சுமிராய் கூறினார்.

On Saturday, October 11, 2014 by farook press in ,    
35வயதாகும் நடிகை பிபாசாபாசு  தனது சினிமா பயணத்தை 2001 இல் தனடங்கினார். இவரது முதல் படம் அஜ்னபீ. இவர் தொடர்நது நடித்த ஜிசம்,ராஸ்,கார்போரேட்,அப்ஹரன்,தூம்-2, லாம்ஹா,ஆக்ரோஸ் ஆகிய படங்கள் அவருக்கு புகழை தேடித்தந்தன. பிபாசாபாசு நடித்த ஆத்மா, ஹம்சகலஸ் ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. சமீபத்தில் கிரியேட்டர்-3டி வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் பிபாசா பாசுக்கு தனது காதலர் ஹர்மன் பவேஜாவுடன் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்பட்டது. இது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு சிரித்து கொண்டே பதில் அளித்த அவர் திருமணம் செய்து கொள்ள  தான் அவசரப்படவில்லை என்றும் தனது சினிமா வாழ்க்கையில்  கவனம் செலுத்தி வருவதாக கூறினார். 
மேலும் அவர் கூறும்போது திருமண பந்தத்தை நான் மதிக்கிறேன். ஆனால் அதற்கு என்று நேரம் இருக்கிறது.நான் திருமணம் செய்து கொள்வேன். நான் செய்ய வேண்டிய படங்கள் உள்ளன.நடிப்பு தவிர பலவற்றை நான் சிந்தித்து வைத்து உள்ளேன்.அதைப்பற்றி நான் கூற இயலாது.இவ்வாறு அவர் கூறினார்.