Sunday, October 12, 2014
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் .கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுதலையாக் வேண்டி மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் பார்க் ரோட்டில் உள்ள ராகவேந்திரா கோவிலில் கணபதி ஹோமம்,சுதர்சன ஹோமம், நவக்கிரஹ ஹோமம், நரசிம்ம ஹோமம் ஆகியவை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், மற்றும் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஆனந்தன் துணைவியார் லட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். என முஸ்லிம் லீக்கின் மாநிலத் தலைவர் கே.எம்.காதர் மைதீன் சனிக்கிழமை கூறினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருப்பூர் மாவட்டங்களின் ஒருங்கிணைந்த பொதுக்குழுக் கூட்டம் குமரன் ரோட்டில் உள்ள அரோமா ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ் மாநிலத் தலைவர் கே.எம்.காதர் மைதீன் தலைமை தங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேச ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் பாடுபடும் கட்சியாகும். அனைத்து சமுதாய மக்களும் நல்லிணக்கத்தோடு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம். சிறுபான்மை சமுதாயத்தினர் தங்களுக்கான அடையாளங்களை இழந்துவிடாமல் இருக்க முஸ்லிம் லீக் பாடுபட்டு வருகிறது.பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் என எதற்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உடன்படுவதில்லை. அப்படி ஈடுபடுபவர்களை ஆதரிப்பதும் இல்லை. சில திசைமாறிய குழப்பத்தில் உள்ள முஸ்லிம் இளைஞர்களை அது போன்ற செயல்களில் ஈடுபடாமல் தடுத்து நிறுத்தும் பணியை இக்கட்சி மேற்கொண்டு வருகிறது. காஷ்மீர் வெள்ள நிவாரண நிதியாக கட்சி சார்பில் ரூ. 25 லட்சத்தை விரைவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வழங்க இருக்கிறோம்.தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் திமுகவுடன் தற்போது கூட்டணி வைத்திருக்கிறோம். எதிர்காலத்தில் அது தொடரும் என சொல்ல முடியாது. அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை 18 ஆண்டுகளாக இழுத்தடித்தார் என ஒருதரப்பினர் கூறினாலும், நீதித்துறை இது குறித்து மாற்றாக சிந்தித்திருக்க வேண்டும். சிறையில் அடைத்ததால் ஜெயலலிதாவிற்கு மக்கள் மத்தியில் அனுதாப அலை பெருகி உள்ளது. அவரை விமர்சித்தவர்கள் கூட அனுதாபம் தெரிவிக்கின்றனர். அண்ணா தி.மு.க.ஆட்சிக்கு என்பதை விட ஜெயலலிதா மீது மக்களிடம் ஆதரவு அலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு இறுதி தீர்ப்பு அல்ல. நல்லது நடக்கும் என அண்ணா தி.மு.க.வினர்களும், மக்களும் எதிர் பார்கின்றனர். எனவே அண்ணா திமுகவினருக்கு மிகவும் பொறுப்பு உள்ளது. அமைச்சர்கள் தங்கள் பணியில் ஈடுபடத் தொடங்கி உள்ளனர். கடந்த சில நாள்களாக தமிழகத்தில் அமைதி நிலவுகிறது.அவர்கள் அவர்களின் கட்சிக்கும், தலைமைக்கும் கட்டுப்பட்டுள்ளனர்.
அதிக பெரும்பான்மையுடன் அண்ணா திமுக கட்சி உள்ளது.அந்த கட்சியில் குழப்பம் இல்லை. எனவே, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்தல் வரக்கூடும் என ஒரு சில கட்சிகள் எதிர்பார்த்தாலும் கூட அது யூகமே தவிர அதற்கான வாய்ப்பு இல்லை.
விசாகப்பட்டினம்: ஹுட்ஹுட் புயல் விசாகப்பட்டினத்தை தாக்கியது. இதையடுத்து அங்கு மணிக்கு 180 கிமீ வேகத்தில் காற்று வீசி வருகிறது. வங்க கடலில் நிலை கொண்ட மிகவும் தீவிரமான ஹுட்ஹுட் புயல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மற்றும் ஒடிஸா மாநிலம் கோபால்பூர் இடையே இன்று மதியம் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் முன்கூட்டியே விசாகப்பட்டினத்தை தாக்கியுள்ளது. துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் தற்போது மணிக்கு 180 கிமீ வேகத்தில் காற்று வீசி வருகிறது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். மழைக்கு இதுவரை 2 பேர் பலியாகியுள்ளனர். பலத்த காற்றால் கூரை வீடுகள் பறந்து வருகின்றன, மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன, மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன. விசாகப்பட்டினத்தில் பேருந்து, ரயில் மற்றும் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளதால் மீட்பு படையினருக்கு அதை தடையாக உள்ளது. புயலால் கடற்கரையோர பகுதிகளில் வாழும் ஆயிரக் கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதே போன்று ஒடிஸா மாநிலத்தில் கடற்கரையோரம் உள்ள 8 மாவட்டங்களில் வசிக்கும் 3.5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புயல் விசாகப்பட்டினத்தை தாக்கி வரும் வேலையில் ஒடிஸாவின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இரு மாநிலங்களிலும் மீட்பு படையினர் , விமானப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களுடன் தொடர்பில் இருக்குமாறு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
மதுரை சிக்கந்தர் சாவடியை சேர்ந்தவர் மகேஸ்வரன். இவரது மனைவி வனிதா (வயது34), இவருக்கு ஆரப்பாளையத்தைச் சேர்ந்த பாண்டிச்செல்வி என்பவர் தோழியானார்.
அவர், திருநகரைச் சேர்ந்த பூபதி என்ற பெண்ணிடம் ரூ.ஆயிரம் கொடுத்தால் ரூ.1 லட்சம் வரை வங்கி கடன் வாங்கி தருவதாக வனிதாவிடம் தெரிவித்தார். இதை நம்பிய வனிதா, கூடல்நகர் பகுதியில் பலரிடம் இதுபோல் பணம் பெற்று பூபதியிடம் கொடுத்தாராம்.
இதுவரை ரூ.3½ லட்சம் வசூல் செய்து கொடுத்த நிலையில் வங்கி கடன் எதையும் பூபதி வாங்கி தர வில்லையாம். இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கூடல் புதூர் போலீசில் வனிதா புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி பாண்டிச் செல்வி, பூபதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவில் பல்வேறு தொழில்களில் அன்னிய முதலீட்டுக்கு வழிசெய்யப்பட்டுள்ளதால் தொழிற்கல்வி பட்டதாரிகள், பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கான தேவை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது என திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை அழகர்கோவில் அருகிலுள்ள லதா மாதவன் பாலிடெக்னிக்கல்லூரியில் அனைத்து பிரிவு மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு கருத்தரங்குமுதல்வர் தவமணி தலைமையில் நடைபெற்றது. மாணவர் வள மேம்பாட்டு பயிற்றுநரும், மேல்நிலைப் பள்ளி ஆசிரியருமான சூரியகுமார் மாணவர்கள் சுய திறன் வளர்ச்சி குறித்து பேசுகையில், ஜப்பானும் சீனாவும் போட்டி போட்டுக்கொண்டு நம் நாட்டில் முதலீடு செய்கின்றன. இந்தியாவில் உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகள், உதிரிப் பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள், மூலப்பொருளை முடிவுற்ற பொருளாக மாற்றும் தொழிற்சாலைகள் என இரண்டாம் நிலைத் தொழில்களைச் செய்யும் தொழிற்சாலைகளை இந்தியா முழுவதும் தொடங்க இந் நாடுகள் தயாராகி வருகின்றன.
இத் தொழிற்சாலைகளுக்கு ஸ்கில்டு லேபர் என்று சொல்லப்படக் கூடிய தொழில் திறன் பெற்றவர்கள் அதிகம் தேவைப்படுவர். பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் இந்த தொழில்திறன் பெற்றவர்களாக இருப்பதால், தொழில் நிறுவனங்கள் இவர்களையே அதிகம் விரும்பும். ஆனாலும், இம் மாணவர்கள் தங்கள் துறை சார்ந்த நடைமுறை அறிவையும், தொழில் அறிவையும் பெருக்கிக் கொள்ள வேண்டும். இன்னும் இரண்டு ஆண்டுகளில் பாலிடெக்னிக் முடித்த ஸ்கில்டு லேபர் தேவை இப்போது இருப்பதை விட இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்றார். நிகழ்ச்சியின் நிறைவில் சிவில் துறையின் தலைவர் மற்றும் துணை முதல்வர் பிரபாகரன் நன்றி கூறினார்.
மதுரை சிக்கந்தர் சாவடியை சேர்ந்தவர் மகேஸ்வரன். இவரது மனைவி வனிதா (வயது34), இவருக்கு ஆரப்பாளையத்தைச் சேர்ந்த பாண்டிச்செல்வி என்பவர் தோழியானார்.
அவர், திருநகரைச் சேர்ந்த பூபதி என்ற பெண்ணிடம் ரூ.ஆயிரம் கொடுத்தால் ரூ.1 லட்சம் வரை வங்கி கடன் வாங்கி தருவதாக வனிதாவிடம் தெரிவித்தார். இதை நம்பிய வனிதா, கூடல்நகர் பகுதியில் பலரிடம் இதுபோல் பணம் பெற்று பூபதியிடம் கொடுத்தாராம்.
இதுவரை ரூ.3½ லட்சம் வசூல் செய்து கொடுத்த நிலையில் வங்கி கடன் எதையும் பூபதி வாங்கி தர வில்லையாம். இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கூடல் புதூர் போலீசில் வனிதா புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி பாண்டிச் செல்வி, பூபதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்த தஞ்சை மாவட்ட நீதிமன்றம் பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், அவரது மனைவி சரஸ்வதி உள்பட 9 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. மேலும் இந்த வழக்கில் இருந்து முன்னாள் அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் என 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ஆயுள் தண்டனை பெற்ற பழனிச்சாமி மற்றும் சிறை தண்டனை பெற்றவர்கள் அனைவரும் மாவட்ட நீதிமன்றம் அளித்த தண்டனையை ரத்து செய்து விடுவிக்கக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மேல் முறையீடு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் 11 பேரை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்தது எதிர்த்து அரசு தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் நீதிபதிகள் செல்வம், ரவி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் விடுதலை செய்யப்பட்ட 11 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
அதன்படி விடுதலை செய்யப்பட்ட தஞ்சை மாவட்ட முன்னாள் தொடக்க கல்வி அலுவலர் பழனிச்சாமி, முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் நாராயணசாமி, முன்னாள் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் ராதா கிருஷ்ணன், பாலசுப்பிர மணியன், முன்னாள் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் பாலகிருஷ்ணன், மாதவன், பள்ளி ஆசிரியைகள் தேவி, மகாலட்சுமி, அந்தோணியம்மாள், கும்பகோணம் நகராட்சி முன்னாள் ஆணையர் சத்தியமூர்த்தி, முன்னாள் நகரமைப்பு அதிகாரி முருகன் ஆகிய 11 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தீபாவளி பண்டிகையை கொண்டாட இப்போதே பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள். இதனால் ஜவுளிக்கடை, பல சரக்கு கடை பஜார் பகுதிகளில் கூட்டம் அலைமோதுகிறது.
மேலும் சொந்த ஊர்களில் தீபாவளியை கொண்டாட நினைப்பவர்கள் இப்போதே ரெயில் மற்றும் பஸ்களில் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பொது மக்கள் வசதிக்காக கூடுதல் சிறப்பு ரெயில்களும், பஸ்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரெயில் மற்றும் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் சிலர் லக்கேஜூடன் பட்டாசுகளையும் எடுத்து செல்வது வழக்கம். இதனால் பெரும் விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டு பஸ், ரெயில்களில் பட்டாசுகள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு அசம்பாவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என கருதி இந்த பாதுகாப்பு நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.
தீபாவளி கொண்டாட ஊருக்கு செல்லும்போது ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். எனவே ரெயில்களில் பட்டாசு கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை தீவிரமாக கண்காணிக்க தெற்கு ரெயில்வேயின் பாதுகாப்பு படை தலைமை ஆணையர் மோகன், சென்னை, மதுரை, திருச்சி, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய 6 கோட்ட பாதுகாப்புப்படை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து ரெயில்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மதுரை ரெயில்வே கோட்ட அதிகாரி ஒருவர் கூறும்போது, ரெயில்களில் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி யாராவது கொண்டு சென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ரெயில்வே சட்டப்படி அதிகபட்சமாக ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
ரெயில்களில் பட்டாசு எடுத்து செல்லக்கூடாது என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
இதேபோல் பஸ்களில் பட்டாசு பார்சல்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே அந்தந்த பஸ்களில் உள்ள கண்டக்டர்கள் பயணிகளை கண்காணிக்க வேண்டும் எனவும், பயணிகள் யாராவது பட்டாசு எடுத்து சென்றால் அவர்களை பிடித்து அருகில் உள்ள போலீசில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டு இருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி பரமசிவம் எம்.எல்.ஏ.வுடன் அண்ணா தி.மு.க.வினர் பாதயாத்திரையாக சென்று, கோவிலில் 108 தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
மக்கள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 15 நாட்களாக கர்நாடகா சிறையில் உள்ளார். அவர் விரைவில் விடுதலையாகி வரவேண்டி தமிழகம் முழுவதும் அண்ணா தி.மு.க.வினர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டியும், நீண்ட ஆரோக்யத்துடன் வாழ வேண்டியும் திருப்பூர் தெற்கு ஒன்றிய அண்ணா தி.மு.க.மற்றும் மங்கலம் ஊராட்சி கழகம் சார்பில் மங்கலம் பெருமாள் கோவிலில் இருந்து மலைக்கோவில் குழந்தை வேலாயுதசுவாமி கோலிவில்வரை அண்ணா தி.மு.க.வினர் பாதயாத்திரை சென்றனர். இந்த பாதயாத்திரையில் பல்லடம் எம்.எல்.ஏ. பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், தெற்கு ஒன்றிய செயலாளர் சில்வர் வெங்கடாசலம், ஊராட்சி கழக செயலாளர் சுப்பிரமணியம் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் நடந்து சென்றனர்.
இதை தொடர்ந்து மலைக்கோவில் குழந்தை வேலாயுதசுவாமி கோவில் வாசலில் மங்கலம் ஊராட்சி தலைவர் பாலாமணி சுப்பிரமணியம் தலைமையில் அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் 108 தேங்காய் உடைத்து வேண்டுதல் செய்தனர். பின்னர் கோவிலில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் மக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்காக 1 மணி நேரம் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கரைபுதூர் நடராஜன், மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் நடராஜன், திருப்பூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சிராஜøதீன், கொடுவாய் லோகநாதன், மாநகராட்சி கணக்குகுழுத் தலைவர் வசந்தாமணி, கவுன்சிலர்கள் கேபிள் சிவா, லட்சுமி, வேலுசாமி, திருப்பூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சிராஜøதீன், இடுவாய் ஊராட்சி கழக செயலாளர் சென்னியப்பன், தெற்கு ஒன்றிய இளைஞரணி துணைதலைவர் வெங்கடாசலம், இடுவாய் ஊராட்சி தலைவர் லட்சுமி செல்வராஜ், மங்கலம் ஊராட்சி மன்ற மன்ற துணை தலைவர் அஸ்கர்அலி, மற்றும் உறுப்பினர் கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...


