Sunday, October 19, 2014

On Sunday, October 19, 2014 by Unknown in ,    
கரூர் மாவட்டம் ஆட்சியர் அலூவலகத்தில்  விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்  நடைபெற்றது ....
On Sunday, October 19, 2014 by Unknown in ,    
கரூர் மாவட்ட ஆட் சியர்  அலுவலகத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சி 

Saturday, October 18, 2014

On Saturday, October 18, 2014 by farook press in ,    

On Saturday, October 18, 2014 by farook press in ,    




On Saturday, October 18, 2014 by farook press in ,    
திருப்பூர் வெங்கமேடு வி.கே.அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு வெற்றிக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பிரபல கல்வியாளர்கள், சமூக அறிஞர்கள் பங்கேற்று கருத்துரைகள் வழங்கினர்.
திருப்பூர் வி.கே.அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான வெற்றிக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி சனியன்று ஜெகா கார்டன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி வளர்ச்சிக்குழுத் தலைவர் டிக்ஸன் குப்புசாமி தலைமையில் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆர்.சிதம்பரநாதன், 3வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.மாரப்பன், பெற்றோர் ஆசிரியர் குழுத் தலைவர் ஜெகநாதன், பொருளாளர் கே.முருகேசன், நிர்வாகக்குழு உறுப்பினர் என்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்திருந்தனர். இவர்களுடன் பத்மாவதிபுரம் அறிவுத்திருக்கோயில் நிர்வாகிகள் குணசேகரன், கனகராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் பத்தாம் வகுப்பு மாணாக்கர்கள் 266 பேருக்கும், பனிரெண்டாம் வகுப்பு மாணாக்கர்கள் 264 பேருக்கும் தனித்தனி அரங்குகளில் ஆலோசனை வழங்கப்பட்டன. அதேபோல் பள்ளி ஆசிரியர்கள் 60 பேருக்கும், மாணாக்கர்களின் பெற்றோர்கள் சுமார் 300 பேருக்கும் தனித்தனியாக நிபுணர்கள் ஆலோசனை வழங்கினர்.
இதில் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் கே.செல்வராஜன், அமிர்தா பல்கலைக்கழக மக்கள் தொடர்பு இயக்குநர் பேராசிரியர் எஸ்.ரங்கநாதன், கே.பி.ஆ்ர் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி இயக்குநர், பயிற்சியாளர் பொறிஞர் எம்.தேவதாஸ், மனோதத்துவ ஆலோசகர் டாக்டர் எம்.எஸ்.கே.முகையதீன், தைரோகேர் இயக்குநர் ஏ.ரத்தினசாமி, சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கவிஞர் புவியரசு, கோவை பிஎஸ்ஜி எப்எம் ரேடியோ திட்ட இயக்குநர் பி.சுதாகர், யுவதி பெண்கள் அமைப்பின் நிறுவனர் ஏ.எஸ்.மகேஸ்வரி ஆகியோர் பங்கேற்று மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு அவர்களது சமூகப் பொருளாதார நிலைக்கு ஏற்ப சிறந்த எதிர்காலத்தைத் தேர்வு செய்வதற்கான பொருத்தமான ஆலோசனைகள் வழங்கினர்.
மாணவர்களுக்கு பாடம் பயிலும் முறை, நினைவில் வைத்துக் கொள்வதற்கான நுட்பம், தேர்வு அச்சத்தில் இருந்து விடுபடுதல், தாழ்வுமனப்பான்மையை புறந்தள்ளுதல், உற்சாகப்படுத்துதல், உடல்நலம் பேணுதல் கையெழுத்து நுட்பம், நேர மேலாண்மை குறித்து விரிவாக விளக்கினர்.
அதேபோல் ஆசிரியர்களுக்கு மாணவர்களின் திறனை கண்டறிந்து பயிற்சி அளிப்பது, அவர்களை ஊக்கப்படுத்துவது, ஆளுமையை மேம்படுத்துவது தொடர்பாகவும் விளக்கினர். பெற்றோர்கள் மாணவர்களிடம் வைத்துக் கொள்ள வேண்டிய அணுகுமுறை குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
வி.கே.அரசு மேல்நிலைப் பள்ளி கடந்த கல்வி ஆண்டில் 10ம் வகுப்பில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றது, மாநில அளவில் ஐந்தாம் இடம் பெற்றது. இந்த கல்வியாண்டில் இப்பள்ளியில் படிக்கும் சாமானிய வீட்டுப் பிள்ளைகள் சிறந்த மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் வெற்றி பெறுவதற்காக தேர்ந்த வல்லுநர்களைக் கொண்ட இந்த முகாம் நடத்தப்பட்டதாக பள்ளி வளர்ச்சிக்குழுவினர் தெரிவித்தனர்.


On Saturday, October 18, 2014 by farook press in ,    
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுபடும் நாளே 
              அண்ணா தி.மு.க.விற்கு தீபாவளி திருநாள் 
                      திருப்பூர் மேயர் விசாலாட்சி சூளுரை 

திருப்பூர்,அக்.18-
ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுபடும் நாளே அண்ணா தி.மு.க.விற்கு தீபாவளி திருநாள் என திருப்பூர் மேயர் விசாலாட்சி கூறினார்.
திருப்பூர் அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு விடுதலை ஜாமீன் கிடத்ததையடுத்து, திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் மகளிர் அணி மாநில துணைச் செயலாளரும்,மேயருமான அ.விசாலாட்சி, மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் ஆகியோர் தலைமையில், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பழைய பஸ் நிலையம் முன்பு பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் ஒருவருக்கு ஒருவர் மகிழ்ச்சியை பறிமாறிக்கொண்டனர் ஜெயலலிதாவை வாழ்த்தி கோஷங்களும் எழுப்பினர்.மேலும்,கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் 21நாட்களாக அணிந்திருந்த கருப்புச்சட்டையை கழற்ற்றி விட்டு வெள்ளை சட்டையை அணிந்துக்கொண்டனர். 
ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைத்தது குறித்து மேயர் அ.விசாலாட்சி கூறியதாவது:-
அரசியல் காழ்ப்புணர்ச்சியோடும்,உள்நோக்கத்துடனும்,பகைமையுணர்ச்சியோடும்,வெறுப்புடனும், மக்கள் முதல்வர் ஜெயலலிதா மீது அரசியல் எதிரிகளால்,அவர் மீது கொடுக்கப்பட்ட பொய் வழக்கில் எதிரிகளுக்கு தற்காலிகமான வெற்றி கிடைத்தது.அதன் அடிப்படையில் ஜெயலலிதா 21நாட்கள் சிறையில் இருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. மக்கள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் இருந்தபோது, அவர் விடுதலை பெற வேண்டி அண்ணா தி.மு.க.நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்களின் அறப்போராட்டத்தினாலும்,அருள் வேண்டுதல்களாலும் ஜாமீனில் வெளியானது மனதிற்கு நிம்மதி தருகிறது.கூடிய விரைவில் அவர் பொய் வழக்கில் இருந்து முழு வெற்றிப்பெற்று முற்றிலுமாக வழக்கிலிருந்து விடுப்பட்டு நரகாசுரர்களை அழித்து நாடாளும் நாள் வெகு தொலைவில் இல்லை.ஜெயலலிதா நாடாளும் நன்நாளே தமிழர்களுக்கு தீபாவளி திருநாள்,
இவ்வாறு மேயர் அ.விசாலாட்சி கூறினார்.
முன்னதாக நேற்று காலை மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் அக்கட்சியின் 43 வது ஆண்டு துவக்கவிழா குள்ளிச்செட்டியார் வீதியில் உள்ள  தலைமை அலுவலகத்தில் மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி தலைமையில், மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான் ஆகியோர் முன்னிலையில் எளிமையான முறையில் கொடியேற்று விழா நடந்தது.அதன் பின்னர் பார்க் ரோட்டில் உள்ள கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர் சிலைக்கு நடந்து சென்று நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஜெயலலிதாபேரவை செயலாளர்வி.ராதாகிருஷ்ணன், எம்.கண்ணப்பன் எம்.சி.மார்க்கெட் நா.சக்திவேல், அரசு வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணியம், ஏ.ஸ்டீபன்ராஜ்,ஏ.எஸ்,சதீஷ், 4வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், பொதுக்குழு உறுப்பினர்கள் கருணாகரன், கோமதிசம்பத், வளர்மதி சாகுல்ஹமீது, தாமோதரன், பூளுவபட்டி பாலு, வேலம்பாளையம் அய்யாசாமி, அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிச்சாமி, கலைமகள் கோபால்சாமி, ஹரிஹரசுதன், சி.எஸ்.கண்ணபிரான், ரகுநாதன், பி.கே.எஸ்.சடையப்பன், ரத்தினகுமார், பி.ராஜ்குமார், அசோக்குமார்,பெரிச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி ரஞ்சித்ரத்தினம்,அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கேபிள் பாலு, வினோத்குமார்,முபாரக், குணசேகர்,  விஸ்வநாதன், கவுன்சிலர்கள் முருகசாமி, செல்வம், கணேஷ், வசந்தாமணி, பிரியா சக்திவேல், பாலசுப்பிரமணியம், சின்னசாமி, ஈஸ்வரன், கனகராஜ், அமுதா வேலுமணி, சபரீஷ்வரன், செந்தில்குமார், பேபி தர்மலிங்கம், முன்னால் கவுன்சிலர்கள் சு.கேசவன்,ருக்குமணி, ராஜகோபால், பேபி பழனிசாமி மற்றும் பாசறை நிர்வாகிகள் யுவராஜ் சரவணன், வி.எம்.கோகுல், பி.லோகநாதன், பரமராஜன், சுரேந்தர், பொன்.அன்பரசன், நீதிராஜன், ஆண்டவர் பழனிசாமி, பங்க் என்.ரமேஷ், என்.சரவணன், கிளை கழக செயலாளர்கள் விவேகானந்தன்,ராஜேந்திரன், மூர்த்தி, தலைமை கழக பேச்சாளர்கள் முகவை கண்ணன், டி.ஏ.பாலகிருஷ்ணன், வேங்கை விஜயகுமார், எம்.ஜி.குணசேகரன், மதுரபாரதி உள்ளிட்டவர்களும், பாஸ் என்கிற பாஸ்கரன், வே.சரவணன், பஸ் ஸ்டாண்ட் சந்திரன், வாசுதேவன், சீனிவாசன்,மகளிர் அணி நிர்வாகிகள் சுந்தராம்பாள் கேசவன்,  மும்தாஜ், இந்திராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

On Saturday, October 18, 2014 by farook press in ,    
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சி அடைந்தனர். உற்சாகம் அடைந்த அவர்கள் விடுதலையை கொண்டாடினார்கள். ஈரோட்டில் ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் தலைமையில் அ.தி.மு.க. மகளிர் அணியினர் மற்றும் தொண்டர்கள் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் முன்பு கூடினார்கள். அவர்கள் உற்சாக மிகுதியால் துள்ளிக்குதித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கோஷங்கள் எழுப்பினார்கள். மகளிர் அணியினர் சிலர் மகிழ்ச்சி காரணமாக மேயர் மல்லிகா பரமசிவத்தை சுமந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.தொடர்ந்து அ.தி.மு.க.வினர் தங்கள் நேர்ச்சையை செலுத்தினார்கள். பெரிய மாரியம்மனுக்கு அ.தி.மு.க.வினர் 108 தேங்காய் உடைத்தனர்.
பின்னர் அங்கிருந்து அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானா பகுதிக்கு வந்தனர். தொண்டர்கள் அ.தி.மு.க. கொடிகளை கையில் ஏந்தி உற்சாகமாக `அம்மா வாழ்க` என்ற கோஷங்கள் எழுப்பினார்கள். சிலர் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
ஈரோடு முனிசிபல்காலனி விநாயகர் கோவிலில் ஈரோடு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பு பூஜை செய்து 108 தேங்காய் உடைத்து நேர்ச்சைக்கடன் செலுத்தினார்கள்.வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் நகர அ.தி.மு.க. சார்பில் ஏராளமான அ.தி.மு.க.வினர் 108 தேங்காய் உடைத்து வழிபட்டனர்.
ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் ஈரோடு கோட்டை ஈஸ்வரன்கோவில், கோட்டை பெருமாள் கோவில், பெரிய மாரியம்மன் கோவில், சின்னமாரியம்மன் கோவில், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில் என 5 கோவில்களில் சிறப்பு பூஜை செய்து, தலா 108 தேங்காய்கள் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்
ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர்–இளம்பெண்கள் பாசறை சார்பில் காளைமாடு சிலை பகுதியில் பட்டாசு வெடித்து தொண்டர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கினார். வார்டு எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் காளைமாடு சிலை பகுதியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். ஈரோடு நகர அ.தி.மு.க. சார்பில் கட்சியினர் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.
இந்த கொண்டாட்டங்களில் ஈரோடு மாநகர் ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் வீரக்குமார், மாவட்ட பிரதிநிதி பி.பி.கே.பழனிச்சாமி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஏ.கே.பழனிச்சாமி, மண்டல தலைவர் காஞ்சனா பழனிச்சாமி, மாநகர் மாவட்ட இளைஞர்–இளம்பெண்கள் பாசறை செயலாளர் பி.பி.கே.மணிகண்டன், காசிபாளையம் நகர் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் கேபிள் ரமேஷ், வார்டு எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் டி.எஸ்.ஆர்.ராஜ்கிரன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் டி.எஸ்.ஆர்.செந்தில்ராஜன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
On Saturday, October 18, 2014 by farook press in ,    
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–இலங்கை அகதி 
ஊஞ்சலூர் அருகே ஈஞ்சம்பள்ளியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இதில் வசித்து வந்தவர் இலங்கேஸ்வரன் (வயது 49). அவருடைய மனைவி ராமலட்சுமி (45). இவர்களுக்கு இந்துமதி (25), துர்கா (22) ஆகிய 2 மகள்களும், ஜெகதீஸ்வரன் (16), வெங்கடேஸ்வரன் (14) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் கடந்த 2010–ம் ஆண்டு இலங்கையில் இருந்து இங்கு வந்து தங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் திடீரென இலங்கேஸ்வரன் யாரிடமும் சொல்லாமல் அகதிகள் முகாமை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால் அரசு பதிவேட்டில் இருந்து அவர் பெயர் நீக்கப்பட்டது. பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அகதிகள் முகாமுக்கு திரும்பி வந்தார். அப்போது தனது பெயரை மீண்டும் அரசு பதிவேட்டில் சேர்த்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தினார்.
இதற்கிடையில் இலங்கேஸ்வரன் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த இலங்கேஸ்வரன் நேற்று மாலை அகதிகள் முகாமில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி அக்கம்பக்கத்தினர் மலையம்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இலங்கேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
On Saturday, October 18, 2014 by farook press in ,    
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்களின் மகன் ரஞ்சித்குமார்(22).இவர் என்ஜினீயரிங் படிப்பை முடித்து கடந்த 6 மாதமாக வேலை தேடிக்கொண்டு இருந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது தந்தை பழனிசாமி கட்டிட வேலை செய்தபோது அடிபட்டு வேலைக்கு போக முடியாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார்.ரஞ்சித்குமாரும் தான் படித்த படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை என்று புலம்பிக்கொண்டு இருந்துள்ளார்.இந்த நிலையில் தனக்கும் வேலை கிடைக்கவில்லை, தந்தை நிலையும் இப்படி ஆகிவிட்டதே என்று வேதனையடைந்த ரஞ்சித்குமார் பூச்சி மருந்தை சாப்பிட்டு மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ரஞ்சித்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.