Saturday, October 25, 2014

கரூர் அருகே திருக்காம் புலியூரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் ஸ்ரீவர்ஷன் (வயது 13) இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடந்தது. இதில் ஸ்ரீவர்ஷனின் பெற்றோரும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு ஸ்ரீவர்ஷனும் சென்றிருந்தார்.
கூட்டம் முடிந்து திரும்பிய ஸ்ரீவர்ஷன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கண்டு கதறி அழுத பெற்றோர் கரூர் டவுன் போலீசிற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவம் இடம் சென்ற இன்ஸ்பெக்டர் சென்ட்ரிக் இமானுவேல், சப்-இன்ஸ்பெக்டர் சுஜாதா மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று ஸ்ரீவர்ஷன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆறுபடை முருகன் கோவில்களுக்கு 61 அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் யாத்திரையா க சென்று மொட்டை அடித்தும்,முடிகாணிக்கை செலுத்தியும்,தங்கரதம் இழுத்தனர், அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சிறையில் இருந்து விடுதலை பெற்றதை யொட்டியும், அவர்மீது சுமத்தப்பட்ட பொய் வழக்கில் இருந்து முழுமையாக விடுதலை பெற வேண்டியும், தலைவருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன் அறிவுரையின் பேரில் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும், சட்டபேரவை தலைவருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன் அறிவுரையின் பேரில், உடுமலைப்பேட்டை நகராட்சி துணைத்தலைவரும், பொதுக்குழு உறுப்பினருமான எம்.ண்ணாயிரம் தலைமையில் அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் 61 பேர் மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் இருந்து மீண்டு வந்து மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்க மனமுருகி வேண்டி உடுமலைப்பேட்டை நேரு வீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் பவுணர்மி பூஜை நடத்தி ஆறுபடை முருகன் கோவிலுக்கு யாத்திரையை தொடங்கினர்.
பின்னர் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து,9 பேர் முடி காணிக்கை செலுத்தி பன்னீர் அபிஷேகம் செய்தனர். அதன் பின்னர் கும்பகோணம் சுவாமிமலை கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து 9 பேர் முடி காணிக்கை செலுத்தி சிறப்பு சந்தன அபிஷேகம் செய்தனர். மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் பால் பஞ்சாமிதம் அபிஷேகம் மற்றும் பழமுதிர்சோலை முருகன் கோவிலில் தேனும்,தினைமாவும் அபிஷேகம் செய்து சிறப்பு பிரார்த்தனை, பூஜைகள் நடத்தி 18 பேர் முடி காணிக்கை செலுத்தினர். அதன் பின்னர் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோவிலில் பூஜைகள் நடத்தியும், பிரார்த்தனை செய்து விபூதி அபிஷேகம் செய்து 10 பேர் முடி காணிக்கை செலுத்தி, தங்கரதம் இழுதனர்.திண்டுக்கல் மாவட்டம், பழனி தெண்டபாணி சுவாமி முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்தும்,சிறப்பு பூஜைகள், பிரார்த்தனைகள் நடத்தி 13 பேர் முடி காணிக்கை செலுத்தி மொட்டை அடித்து, தங்கரதம் இழுத்தனர். பின்னர் அவர்கள் உடுமலை மாரியம்ம்மன் கோவிலில் சென்று அம்மனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர்.
இந்த அனைத்து நிகழ்சிகளிலும் உடுமலை நகர் மன்ற உறுப்பினர் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி சற்குணசாமி உமா குப்புசாமி, பெயிண்டர் பாலு, ராஜேந்திரன், பி.டி.குமார், முத்துகுமார், முருகேசன், பாப்பாத்தி, மயிலாத்தாள், பஞ்சலிங்கம், வலசப்பன், சுந்தரம், டைலர் வேலுச்சாமி, தெண்டபாணி, செல்லம்மாள், சுலோக்சனா, செம்பியன், ராஜேந்திரன், மணிவண்ணன், வின்சென்ட், செல்வராஜ், செம்பே கவுண்டர், ரொட்டி என்கிற அலிபாவஷா, வேலுச்சாமி ஆசாரி, மாரியப்பன், சரஸ்வதி, ராதாகிருஷ்ணன், முன்னால் நகர்மன்ற உறுப்பினர் தங்கமணி, வினோத்குமார், ராமசாமி ஆசாரி, கார்த்தீபன், முத்துராமன், சின்னு செட்டியார், ராஜகோபால், முத்துலட்சுமி, முருகேசன், பனியன் துரை என்கிற துரைசாமி, சென்னை டி.பரமசிவம், பஞ்சலிங்கம், ராமச்சந்திரன், ஜோதிடர் முருகசன், பொற்கொடி, ஆருமுகபாண்டியன், பண்ணைகிணறு கார்த்திகேயன், சுபாஸ் சந்திரபோஸ், சிதம்பர நாதன், நடராஜ், சண்முகம், கபிலன், சரஸ்வதி அம்மாள், செந்தில் மேஷன், ஆறுமுகம் (ஐ.ஓ.பி.), நாகராஜ், ஆருக்கும் (சமையல்), போடிபட்டி முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Friday, October 24, 2014

தமிழகத்திலேயே முதல் முறையாக திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த 2 ஆண்டுகளாக நூலக வாசகர் வட்டம் சார்பில் தேசிய தகுதித் தேர்வு (நெட்), மாநில தகுதித் தேர்வு (செட்), தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள் (டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 3, 4) உள்ளிட்டவற்றுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
போட்டித் தேர்வுகள் மூலமாக தேர்வு பெற்று, அரசு வேலையை பெற வேண்டும் என்பதே பலரது கனவாக உள்ளது. இந்நிலையில், உடுமலையில் தன்னார்வலர்களால் செயல் படுத்தப்படும் போட்டித் தேர்வு மையத்தில் கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களும், பெண்களும்தான் அதிகம். உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பொள்ளாச்சி பகுதிக ளுக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் இருந்து 170 பேர் பயிற்சி பெறுகின்றனர். இதில் 120 பேர் பெண்கள்.
இதுதொடர்பாக நூலக வாசகர் வட்டத் தலைவரும், பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப் பாளருமான லெனின்பாரதி கூறியது:
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலமாக, கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பயிற்சி மையம், தவிர்க்க முடியாத காரணங்களால் கைவிடப்பட்டது. அப்போது கிடைத்த அனுபவங்கள் மூலமாக, உடுமலை நூலகத்திலேயே கடந்த ஆண்டு முதல் இப்பயிற்சியை நடத்த தீர்மானிக்கப்பட்டது. பாடங்கள் நடத்துவதற்காக நூலகர் பீர்பாஷா, பேராசிரியர்கள் கிருஷ்ணன், குணசேகரன், சுப்பிரமணியம், திருப்பூர் மாவட்ட வழங்கல் அலுவலர் தினேஷ் ராகவன் ஆகியோரை கொண்ட தனி குழுவும் அமைக்கப்பட்டது.
நூலகத்துக்கு வரும் வாசகர்கள் மூலமாகவும், துண்டுப் பிரசுரங்கள், செய்தித்தாள்கள், விழிப்புணர்வுக் கூட்டங்கள் வாயிலாகவும் பயிற்சி மையம் செயல்படுவதை தெரியப்படுத்தினோம். ஆரம்பத்தில் 40 பேர் பயிற்சிக்கு வந்தனர். தற்போது 170 பேர் படிக்கின்றனர். பயிற்சிக்கான புத்தகங்கள், கையேடுகளை தயாரிக்க தனி குழு உள்ளது. இந்தக் குழுவினர், சென்னையில் உள்ள மனிதநேய அறக்கட்டளை, ஆயக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிகரமாக செயல்படும் மையங்களுக்கு சென்று, பயிற்றுவிக்கும் முறைகளை கற்றுக்கொள்வதுடன், வினா தாள் ஆகியவற்றையும் பெற்று இங்குள்ள மாணவர்களுக்கு அளிக்கின்றனர்.
ஞாயிற்றுக்கிழமைதோறும் காலை முதல் மாலை வரை வகுப்புகள் நடைபெறுகின்றன. இப்பயிற்சி வகுப்பில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். பயிற்சிக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், போதிய இருக்கைகள் இல்லாததாலும் பலர் தரையில் அமர்ந்து வகுப்புகளை கவனிக்கின்றனர். இந்த மையத்தில் பயிற்சி பெற்ற நான்கு பேர் இளநிலை உதவியாளர், கிளார்க் உள்ளிட்ட அரசுப் பணிகளில் உள்ளனர். தமிழகத்திலேயே நூலக வாசகர் வட்டம் சார்பில் நடத்தப்படும் முதல் பயிற்சி மையம் இதுதான் என்றார்.
பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. தமிழ் திரையுலகில் பராசக்தி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.
மதுரை சேடப்பட்டியில் பிறந்த அவர் நூற்றுக்கும் அதிகமான தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது திரைப்படங்களில் திராவிட இயக்க கருத்துக்களை கொண்ட வசனங்களை பேசி நடித்ததால், ரசிகர்கள் அவரை ‘லட்சிய நடிகர்’ எஸ்.எஸ்.ஆர் என்று அழைத்தனர்.
தேனி சட்டப்பேரவை தொகுதியில் 1962-ல் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய வரலாற்றில் தேர்தலில் வென்ற முதல் நடிகர் என்ற பெருமையும் எஸ்.எஸ்.ஆருக்கு உண்டு.
எஸ்.எஸ்.ஆர் சில ஆண்டுகள் திமுகவிலும் அதன்பின் அதிமுக விலும் இருந்து வந்தார். பின்னர், அரசியலிலிருந்து ஓய்வுபெற்ற அவர், சென்னை எல்டாம்ஸ் சாலையிலுள்ள தனது வீட்டில் மனைவி தாமரைச்செல்வி மற்றும் மகன் கண்ணனோடு வாழ்ந்து வந்தார்.
கடந்த சில நாட்களாக எஸ்.எஸ்.ஆர். நுரையீரல் தொற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து, அவரை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கவலைக்கிடமான நிலையில் அவரது உடல் நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை 11.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
ரத்தக் கண்ணீர், ரங்கூன் ராதா, சிவகங்கைச் சீமை, பூம்புகார், மறக்க முடியுமா, பார் மகளே பார், குங்குமம், பச்சை விளக்கு, கைகொடுத்த தெய்வம், சாரதா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

சென்னையில் உள்ள இரு சார்பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 2013ஆம் ஆண்டில் மட்டும் வழக்கறிஞர்களின் மூலம் 3000க்கும் அதிகமான திருமணங்கள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
ஒரு வழக்கிற்காக நீதிமன்ற உத்தரவுக்கமைய ஆய்வுகளைச் செய்தபோது, 2013ஆம் ஆண்டில் ராயபுரத்தில் உள்ள பதிவு அலுவலகத்தில் 1559 காதல் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதே ஆண்டில் வடசென்னை பதிவு அலுவலகத்தில் 1937 திருமணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது.
இந்த திருமணங்கள் எல்லாம் முதலில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் ரகசியமாக நடப்பதாகவும் பின்னர் வழக்கறிஞர்கள் அளிக்கும் சான்றிதழ்கள் மூலம் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரியவந்தது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், போலி பதிவுச் சான்றிதழ்களைத் தயாரித்து, அப்பாவி பெண்களை தங்களின் மனைவி என்று உரிமை கோரி சிலர் மிரட்டுவதன் நோக்கம் பணம் பறிப்பதாகவே இருக்கும் என்றும், இது குறித்து விரிவான விசாரணை நடத்தி போலிப்பதிவு திருமணங்களின் பின்னணியில் இருப்பவர்கள், அவர்களுக்கு துணை போன பதிவுத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். இத்தகைய போலிப் பதிவுத் திருமணங்களால் அப்பாவி பெண்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்திருக்கும் உயர்நீதிமன்றம், வழக்கறிஞர்கள் காதல் ஜோடிகளுக்கு தங்களது அறையில் ரகசிய திருமணம் செய்து வைக்கக்கூடாது என்றும், அப்படி திருமணம் செய்து வைத்த்தாகப் புகார் வந்தால், அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளது.
திருமணத்தைப் பதிவுசெய்யும்போது, தம்பதி இருவரும் வருவதை பதிவுத் துறை அதிகாரிகள் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
Thursday, October 23, 2014
On Thursday, October 23, 2014 by Unknown in Break
சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் பதுக்கியவர்கள் பற்றிய விவரங்களை அடுத்த வாரம் மத்திய அரசு சமர்ப்பிக்க உள்ளது. முதற்கட்டமாக சீல் வைக்கப்பட்ட கவரில் வைத்து 136 பேரின் விவரங்களை மத்திய அரசு சமர்ப்பிக்கிறது. பிரதமர் மோடி, மத்திய நிதி மந்திரி மற்றும் பா.ஜ.க. தலைவர் அருண் ஜெட்லி ஆகியோருக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கருப்பு பணம் பதுக்கிய 800 பேர் பற்றிய விவரங்களை ஐரோப்பிய அரசுகள் அளித்துள்ள நிலையில் முதலில் 136 பேரின் பட்டியலை மட்டும் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் அரசின் இம்முடிவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மத்திய அரசு பணம் பதுக்கியவர்கள் பற்றிய ஒட்டுமொத்த விவரங்களை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. வரும் திங்களன்று இந்த விவரங்கள் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுடன், மறுநாள் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.
சர்வதேச நிதி நேர்மை அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்திய ரூபாயின் இன்றைய மதிப்பின் படி சுமார் 28 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கருப்பு பணம் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுவும் 1948 லிருந்து 2008 ஆம் ஆண்டு வரை பதுக்கிய கறுப்பு பணம் பற்றிய விவரம் தான்.
சுவிஸ் வங்கியில் கடந்த 2012 ஆம் ஆண்டு 9514 கோடி ரூபாய் கருப்பு பணம் பதுக்கப்பட்ட நிலையில் ஒரு வருடத்தில் (அதாவது 2013) 40 சதவிகித அளவுக்கு கருப்பு பண பதுக்கல் அதிகரித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு 14000 கோடி ரூபாய் கறுப்பு பணம் பதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கருப்பு பணம் பதுக்கிய 800 பேர் பற்றிய விவரங்களை ஐரோப்பிய அரசுகள் அளித்துள்ள நிலையில் முதலில் 136 பேரின் பட்டியலை மட்டும் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் அரசின் இம்முடிவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மத்திய அரசு பணம் பதுக்கியவர்கள் பற்றிய ஒட்டுமொத்த விவரங்களை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. வரும் திங்களன்று இந்த விவரங்கள் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுடன், மறுநாள் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.
சர்வதேச நிதி நேர்மை அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்திய ரூபாயின் இன்றைய மதிப்பின் படி சுமார் 28 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கருப்பு பணம் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுவும் 1948 லிருந்து 2008 ஆம் ஆண்டு வரை பதுக்கிய கறுப்பு பணம் பற்றிய விவரம் தான்.
சுவிஸ் வங்கியில் கடந்த 2012 ஆம் ஆண்டு 9514 கோடி ரூபாய் கருப்பு பணம் பதுக்கப்பட்ட நிலையில் ஒரு வருடத்தில் (அதாவது 2013) 40 சதவிகித அளவுக்கு கருப்பு பண பதுக்கல் அதிகரித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு 14000 கோடி ரூபாய் கறுப்பு பணம் பதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...


