Thursday, October 30, 2014
கரூர் வைஸ்யா வங்கியின், "மல்டி கரன்சி டிராவல் கார்டு' அறிமுக விழா: கரூர் வைஸ்யா வங்கியின், "மல்டி கரன்சி டிராவல் கார்டு' அறிமுக விழா கோவையில் நடந்தது. கரூர் வைஸ்யா வங்கி, கே.வி.பி., மல்டி கரன்சி டிராவல் கார்டு என்ற பிரிபெய்டு ரீ லோடபிள் கார்டை அறிமுகப்படுத்தி உள்ளது. இக்கார்டு மூலம், யு.எஸ். டாலர், ஈரோ மற்றும் எஸ்.ஜி.டி., ஆகிய மூன்று கரன்சிகளை கையாளலாம். வெளி நாட்டு பயணங்களின் போது, எளிதாக கொண்டு செல்லவும், பாதுகாப்பானதாகவும் இருக்க கூடியது. கே.வி.பி., நெட்பேங்கிங் மூலம், இந்த கார்டுதாரர்கள், அதன் இருப்பை தெரிந்து கொள்ளலாம். கார்டு பெறப்பட்ட நாள் முதல், 5 ஆண்டுகளுக்கு, கார்டை பயன்படுத்த முடியும். கரூர் வைஸ்யா வங்கியின் தேர்தெடுக்கப்பட்ட கிளை வாடிக்கையாளர்களுக்கு கார்டு கிடைக்க உள்ளது.
Wednesday, October 29, 2014
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மாணவி கொலை வழக்கில் 13 பேரிடம்விசாரணை பிச்சம்பட்டி மாணவி கொலை வழக்கில் 13 பேரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பிச்சம்பட்டியைச் சேர்ந்த வினிதா ஜூன் 23-ல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தொடர்பாக குளித்தலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜமீம் தலைமையில் தனிப்படையினர் விசாரணை செய்கின்றனர்.
மாணவி கொலையாகி 4 மாதங்களுக்கு மேலாகிவிட்டதால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே இந்த வழக்கில் தொடர்புள்ளவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கிருஷ்ணராயபுரம் கிழக்கு காலனியைச் சேர்ந்த குருபிரசாத் (23), மாயனூர் காட்டூரைச் சேர்ந்த முருகேசன், சித்திலவாயைச் சேர்ந்த குமார் (30),பிச்சம்பட்டியைச் சேர்ந்த பழனிவேல் (42), குமார் (40) உள்ளிட்ட 13 பேரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கரூர் அக்.30-ல் முத்திரை கட்டண வசூல் முகாம் வரும் 30-ம் தேதி வேலாயுதம்பாளையத்தில் முத்திரைக் கட்டண வசூல் முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து கரூர் வட்டாட்சியர் அலுவலக முத்திரைக்கட்டண தனி வட்டாட்சியர் ஆர். முனியப்பன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
முத்திரைக்கட்டணம் வசூலிக்கும வகையில் வருவாய் வசூலிப்புச் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள தொகையை வசூலிக்க வேலாயுதம்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் தங்களிடம் உள்ள குறைவு முத்திரை தொடர்பான ஆதார ஆவணங்களுடன் திருச்சி முத்திரைக்கட்டண தனித்துணை ஆட்சியர் முன் ஆஜராகி நிலுவைத் தொகையை செலுத்தி, ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே மனநலம் பாதித்த வாலிபர் தூக்கிட்டுத் தற் கொலை செய்துகொண்டார்.
க.பரமத்தி அருகேயுள்ள காளிபாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் மூர்த்தி (28). கடந்த சில வாரங்களாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண் டார்.பின்னர் இதுகுறித்து தெரியவந்ததும் அவரது தாய் சரஸ்வதி அளித்த புகாரின் பேரில், க.பரமத்தி போலீசார் அங்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி
கன மழையால்பாதிக்கப்பட்டோருக்கு வெள்ள நிவாரண உதவி எம்எல்ஏ வழங்கினார் அரவக்குறிச்சி, : கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் கன மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்எல்ஏ கே.சி.பழனிச்சாமி வெள்ள நிவாரண உதவிகளை வழங்கினார்.
அரவக்குறிச்சி ஒன்றியப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்து 5 அடி உயரம் வரை தேங்கி நின்றது. இதனால் வீடுகளில் உள்ள அரிசி, பருப்பு உள் ளிட்ட மளிகை சாமான்கள், பாத்திரங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.இதுகுறித்து தகவலறிந்த அரவக்குறிச்சி எம்எல்ஏ கே.சி. பழனிச்சாமி, அரவக்குறிச்சியில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாரியம்மன் கோவில் தெரு, செல்லாண்டியம்மன் கோவில் தெரு, சவேரியார் தெரு, சின்னப்ப பள்ளிவாசல் தெரு, பூச்சாங்கிணறு தெரு உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வை யிட்டு பொதுமக்களிடம் நிலைமையை கேட்டறிந்தார். பின்னர் பாதிக்கப்பட்ட 60 குடும்பத்தினருக்கு தலா ரூ. 1000 மற்றும் உணவுப் பொட்டலம் உள்ளிட்ட வெள்ள நிவாரண உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் நன் னியூர் ராஜேந்திரன், ஒன்றியச் செயலாளர் எம்.எஸ்.மணியன், அரவக்குறிச்சி நகரச் செயலாளர் அண்ணா துரை, பள்ளபட்டி நகர திமுக செயலாளர் தோட்டம் பசீர்அகமது, இளைஞர் அணி, ஆனந்தகுமார், திருக்குமார் உள் ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அமராவதி அணையில் இருந்து 37 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம் ஆற்றுப்பகுதிகளில் வெள்ள அபாயம் கரூர், : அமராவதி அணை நிரம்பியதை அடுத்து அணையில் இருந்து 37 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் அமராவதி மற்றும் காவிரியாற்று பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் அமராவதி அணை உள்ளது. கரூர் மாவட்டத்தில் அமராவதி நீரைப் பயன்படுத்தி சுமார் 40ஆயிரம் ஏக்கர் பாசனவசதி பெறுகிறது. பழைய ஆயக்கட்டுப் பகுதிகள், புதிய ஆயக்கட்டுப்பகுதிகள், நீரேற்றுப்பாசன பகுதிகள் உள்ளன.மேலும் உள்ளாட்சிகளின் குடிநீர் கிணறுகளும் அமராவதி அணை நீரை நம்பி நீரேற்றம் செய்துகொண்டிருக்கின்றன. முறைவைத்து தண்ணீர் திறக்கப்பட்டுவந்த நிலையில் மழை காரணமாக நீர்த் திறப்பு நிறுத்தப்பட்டது.
தொடர் மழையாலும் பழனி பகுதியில் இடைவிடாது மழை பெய்து வருவதாலும் நங்காஞ்சியாறு போன்ற உப நதிகளில் இருந்து வரும் வெள்ளநீரும் அமராவதி ஆற்றில் கலந்து வருகிறது. கரூர் பகுதிக்கு கரூர் அருகே உள்ள செட்டிபாளையம் தடுப்பணைக்கு அமராவதி நீர்வந்து அங்கிருந்து கரூர், பாலம்மாள்புரம். மேலப்பாளையம் பகுதி வழியாக கடைமடை பகுதியான திருமுக்கூடலூர் செல்கிறது. அங்குள்ள காவிரியாறில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் உபரிநீர் கலக்கிறது. செட்டிபாளையம் தடுப்பணை ரெகுலேட்டர்கள் மூலமாக பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது.
கடந்த 15 நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்ததாலும், தண்ணீர் திறந்துவிடாததாலும், அணையின் நீர்மட்டம் மள மள என உயர்ந்துவருகிறது. தற்போது அமராவதி அணையில் 85 அடிநீர் உள்ளதால் எந்நேரமும் அணை நிரம்பலாம் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு அணை நிரம்பியது. முழு கொள்ளளவான 90 அடியை எட்டியது. இதனையடுத்து உபரிநீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டுள்ளது.
அமராவதி அணையில் இருந்து உபரி நீரானது வினாடிக்கு 27ஆயிரம் கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது. இதுதவிர அமராவதி கிளை ஆறுகளில் இருந்து 10ஆயிரம் கன அடிநீர் ஆற்றில் கலக்கிறது. கரூர் மாவட்ட அமராவதி ஆற்றில் தற்போது 37ஆயிரம் கன அடிநீர்வந்துகொண்டிருக்கிறது.ஆற்றில் இறங்க வேண்டாம்
கரூர் கலெக்டர் ஜெயந்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: அமராவதி அணையின் முழுகொள்ளளவை நெருங்கியதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவந்துகொண்டிருக்கிறது. அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் கனமழை பெய்ததன்காரணமாக பவானி மற்றும் நொய்யல் ஆறுகளில் வெள்ளப்பெருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்ததன் காரணமாக குடகனாற்றில் வெள்ளப்பெருக்கும், ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த வெள்ளநீர் காவிரியாற்றில் கலக்கிறது. இதனால் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கரூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி, பவானி, நொய்யல், குடனகனாறு, காவிரி ஆறுகளின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள்பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிப்பதற்காகவும், கால்நடைகள் தண்ணீர் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் ஆற்றில் கால்நடைகளுடன் தண்ணீரில் இறங்க வேண்டாம்.
ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படின் மாவட்ட போரிடர் அவசரகால இயக்க மையத்தில் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசிக்கோ (எண் 1077) அல்லது சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.
தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் நல வாரியங்களின் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூர் டவுன் ஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கி பேசினார்.மாவட்ட தொழிலாளர் நல அலுவலர் ராஜாராமன் வரவேற்று பேசினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம.ஆனந்தன் பயனாளிகளுக்கு ரூ 56.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
மக்கள் நலனுக்காக ஜெயலலிதா கடந்த 3 ஆண்டுகளில் நல வாரியங்களை ஏற்படுத்தி, அதில் தொழிலாளர்களை உறுப்பினர்கலாக்கி, நல வாரியங்கள் மூலமாக தொழிலாளர்கள் நல்ல முறையில் பயன் பெற வேண்டும் என செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் அவருடைய வழிகாட்டுதலின்படி தமிழக அரசு இன்று பல்வேறு நல திட்டங்கள்;ஐ செய்து வருகிறது. 17 தொழிலாளர் நல வாரியங்களில் 1,17,528 உறுப்பினர்கள் உள்ளனர். உறுப்பினர்களுக்கு திருமண உதவித்தொகை, விபத்து, இயற்கை மரண உதவி தொகை வழங்கப்படுகிறது. ஓய்வு பெற்ற உறுப்பினர்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படுகிறது.
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின் பேரில் எந்த மாநில கட்டுமான தொழிலாளியாக இருந்தாலும் நல உதவி வழங்கப்பட்டு வருகிறது. இன்று நடைபெறும் விழாவில் 213 பேருக்கு கல்வி உதவி தொகையாக 46 லட்சத்து 30 ஆயிரத்து ஐநூறு ரூபாயும், 85 பேருக்கு திருமண உதவி தொகையாக 3 லட்சத்து 53 ஆயிரம் ரூபாயும், 19 பேருக்கு மகப்பேறு உதவியாக 1 லட்சத்து 14 ஆயிரம் ரூபாயும், 8 பேருக்கு கண் கண்ணாடி உதவி தொகையாக 3 ஆயிரத்து 983 ரூபாயும், 13 பேருக்கு இயற்கை மரண உதவி தொகையாக 2 லட்சத்து 21 ஆயிரம் ரூபாயும், 2 பேருக்கு விபத்து மரண உதவி தொகையாக 2 லட்சத்து 4 ஆயிரம் ரூபாயும், 144 பேருக்கு மாதம் ரூ 1000 க்கான ஓய்வூதிய ஆணைகள் என மொத்தம் 2484 பேருக்கு 56 லட்சத்து 70 ஆயிரத்து 483 ரூபாய் மதிப்பிலான அரசு உதவி வழங்கப்படுகிறது.
இப்படிப்பட்ட நலத்திட்டங்களை உருவாக்கி தமிழக தொழிலாளர்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஜெயலலிதாவழிகாட்டுதல் படி தமிழக அரசு வழங்கி வருகிறது. வருகிற காலத்தில் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடைய வேண்டும்.மக்கள் முதல்வர் ஜெயலலிதா தொழிலாளர்கள் நலனுக்காக இன்னும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்க உள்ளாரஇவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
விழாவில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கி பேசும்போது,
தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. 10ம் வகுப்பு முதல் கல்லூரி வரை அரசு கல்வி உதவி வழங்குகிறது. திருமண உதவி, இயற்கை, விபத்து மரண உதவி மற்றும் ஓய்வூதியங்களை வழங்கி வருகிறது. இவ்வாறு தொழிலாளர் நலனுக்காக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.எனு கூறினார்.
திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி பேசும்போது கூறியதாவது:-
மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் வழிகாட்டுதல் படி உங்களுக்கான திட்டங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் படி இந்த விழா நடக்கிறது. மக்கள் முதல்வர் ஜெயலலிதா என்றும் மக்களுக்கான திட்டங்களை எந்த இறுக்கமான சூழ்நிலையிலும் வழங்குகிறார்கள். அவர் மீண்டு மக்களுக்கான திட்டங்களை தொடர்வார்கள். என்று பேசினார்.
இந்த விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எம்.சண்முகம், துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள் வி.ராதாகிருஷ்ணன், நிலைக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி, கவுன்சிலர்கள் கண்ணப்பன், கருவம்பாளையம் மணி, மார்க்கெட் சக்திவேல், கண்ணபிரான்,கலைமகள் கோபால்சாமி, ஜெகநாதன், சுந்தரமூர்த்தி, திருப்பூர் தொழிலாளர் அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...





