Monday, March 09, 2015
வெள்ளகோவில், மார்ச் 9–
இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் ஊழியர் சங்கத்தின் சார்பில் வருகிற 11–ந்தேதி புதிய பாலிசிகள் விற்பனை இயக்கம் நடத்த உள்ளனர்.
இதுகுறித்து ஊழியர் சங்கத்தின் நிர்வாகி கூறியதாவது:–
நடப்பு நீதி ஆண்டில் கடைசி மாதத்தில் உள்ளது. இன்சூரன்ஸ் துறையில் எல்.ஐ.சி. நிறுவனம் சிறப்பான வணிகத்தினை நிறைவு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டு உயர்வு பாலிசிகள் மீதான சேவைவரி, பாலிசி உரிமத்தொகைக்கு வருமானவரி என மத்திய அரசும் பாலிசிகளின் மீது ஐ.ஆர்.டி.ஏ.வின் கட்டுப்பாடுகள் என தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு சாதகமான நடவடிக்கைகளும் தீவிரப் படுத்தப்படுகின்றன.
எனவே இதற்கு முகவர்கள், வளர்ச்சி அதிகாரிகள் ஊழியர்கள் அனைவரும் போராட்டங்கள் நடத்தி உள்ளனர்.
தற்போது மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப புதிய திட்டங்கள் எல்.ஐ.சி. அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. அதற்கு அடிப்டையாக புது வணிகத்தினை உயர்த்திடும் பணிகளில் நாம் முன்னிற்க வேண்டும். அதற்காக ஒவ்வொரு ஊழியர் குடும்பத்தில் பாலிசி எடுப்பது, தெரிந்தவர்களிடம் பாலிசி பெற்றுத்தருவது, வணிகத்திற்காக முகவர்கள் வளர்ச்சி அதிகாரி களுக்கு உதவுவது என சங்கத்தின் சார்பில் முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.
இதற்காக காங்கயம் சங்கத்தலைவர் அற்புத ராஜ், செயலாளர் அங்கப்பன், பொருளாளர் ராஜன் தலைமையில் ஊழியர்கள் ஒவ்வொரு முகவரிடம் புதிய பாலிசி விற்பனைக்கு ஆதரவு கோரி வருகின்றனர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,மாநகர் மாவட்ட கழக செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆலோசனையின் பேரில் மாவட்ட மாணவரணி சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.அன்பகம் திருப்பதி ஏற்பாட்டின் பேரில் மக்களின் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அவர்களின் 67-வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி விவேகானந்தா சிவாலயத்தில் உள்ள குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளரும், மாநகராட்சி நகரமைப்பு குழுத்தலைவருமான ஆர்.அன்பகம் திருப்பதி தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பரமசிவம், மாநகராட்சி துணை மேயர் சு.குணசேகரன் ஆகியோர். கேக் வெட்டி,சிவாலயத்திற்கு தொலைக்காட்சிப் பெட்டி,120 தலையணை, 120 பெட்சீட்டுகள், நோட்டுப்புத்தகங்கள், எழுது பொருட்கள் மற்றும் மதிய உணவு ஆகியவற்றை குழந்தைகளுக்கு வழங் கினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், துணைத்தலைவர் ஆனந்தகுமார், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான். வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என். விஜயகுமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன், 4வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், சார்பு அணி நிர்வாகிகள் கண்னப்பன், கருவம்பாளையம் மணி, மார்க்கெட் நா.சக்திவல், ஸ்டீபன்ராஜ், வளர்மதி கருணாகரன், சாகுல்ஹமீது, தாமோதரன், பூண்டி நகர செயலாளர் விஸ்வநாதன், பூண்டி பேரூராட்சி தலைவர் பழனிச்சாமி, முன்னால் தலைவர் லதாசேகர், பழனிசாமி, கவுன்சிலர் பாலசுப்பிரமணி, மணவரணி நிர்வாகிகள் மாரிமுத்து, சபாபதி ஆகியோர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக ஒன்றிய மாணவரணி செயலா ளர்ஏ.ஆர்.கார்த்திகேயன் வரவேற்றார் முடிவில் ஸ்ரீ விவேகானந்தாசிவாலய நிர்வாக அறங்காவலர் செந்தில்நாதன் நன்றி கூறினார்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மடத்துக்குளத்தை அடுத்த கணியூரில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8–ந்தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி கணியூரில் நேற்று நடைபெற்ற மகளிர் தின விழாவை மகளிருக்கான சட்ட விழிப்புணர்வு தினமாக கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தமிழ்வாணன் தலைமை தாங்கி பேசினார். சி.சண்முகவேலு எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

முன்னதாக வக்கீல் ஸ்ரீரஞ்சனி செல்வராஜ் வரவேற்றார். பள்ளியில் சிறப்பாக செயல்பட்ட மாணவ– மாணவிகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தமிழ்வாணன் பரிசுகளை வழங்கி பாராட்டினர். மணி மொழி தமிழ்வாணன் குத்துவிளக்கு ஏற்றினார். நீதிபதி தமிழ்வாணன் பேசும்போது கூறியதாவது:–
உலகளவில் ஆண்களுக்கு நிகரான எண்ணிக்கையில் பெண்களும் உள்ளனர். அதாவது உலகில் 50 சதவீதம் பெண்கள் உள்ளனர். ஆனால் பெண்களுக்கான சமஉரிமை எந்த காலத்திலும் கொடுக்கப்படவில்லை. ஆனால் கிடைக்கும். பெண்கள் விழிப்புணர்வு வரவேண்டுமானால் முதலில் கல்வியறிவு வேண்டும். பொருளாதார மேம்பாடு அடைய வேண்டும். சிந்தனைப்பூர்வமான மாற்றம் வேண்டும்.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி இந்தியாவின் முதல் மருத்துவர். அவர் மருத்துவக்கல்லூரியில் சேர முயற்சி எடுத்தபோது பல்வேறு போராட்டங்களை சந்திக்க வேண்டியதிருந்தது. ஆனால் இன்று மருத்துவ உலகில் பெண்களின் பங்கு அதிக அளவில் உள்ளது. ஜெர்மனி நாட்டைச்சேர்ந்த வழக்கறிஞரும், சமூக சீர்திருத்தவாதியுமான கிளாரா செட்கிள் என்பவர் 1911–ம் ஆண்டு 15 ஆயிரம் பேரை திரட்டி மாநாடு நடத்தினார். அதன்பிறகு 1913–ம் ஆண்டு முதல் மார்ச் 8–ந்தேதி மகளிர் தினமாக உறுதி செய்யப்பட்டது.
ஆற்றல் என்பது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் உண்டு. சட்டம் சமுதாயத்தை வழி நடத்துகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டம் சட்டங்களுக்கெல்லாம் சட்டம். அதுவே மத்திய, மாநில அரசுகளையும் கோர்ட்டின் அதிகாரங்களையும் முடிவு செய்கிறது. அதில் எந்த ஒரு நபரையும் மதம், இனம், மொழி, சாதி, ஆண், பெண் என்பதை வைத்து பாகுபடுத்தக் கூடாது என்று சொல்கிறது.
அதன்படி பெண் என்பவர் ஆணுக்கு சமமானவள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரதியின் பெண்கள் நடத்த வந்தோம் என்று பெண்ணாகவே தன்னைப் பாவித்துப்பாடிய பாரதியின் வழியில் பெண்கள் முன்னேற்றம் அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மடத்துக்குளம் தாசில்தார் சண்முகவடிவேல், மதுரை உயர்நீதிமன்ற வக்கீல் சங்க தலைவர் நெடுஞ்செழியன், உடுமலை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதிகள், சென்னை உயர்நீதி மன்ற வக்கீல்கள், கணியூர் பேரூராட்சி மன்ற தலைவர் தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊதியூர் அருகே பஸ்நிறுத்தத்தில் நிற்காமல் சென்றுவந்த 2தனியார் பஸ்களை பயணிகள் சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர்.
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் ஊதியூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட வஞ்சிபாளையம் பிரிவில் நிழலி, கவுண்டம்பாளையம், செட்டிபாளையம், பங்காம்பாளையம், அம்மாபாளையம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பனியன் கம்பெனி தொழிலாளர்கள், மாணவர்கள் ஆகியோர் பஸ்ஏறி திருப்பூர், தாராபுரம், பழனி, ஒட்டன்சத்திரம் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த வழியாக இயக்கப்படும் 2தனியார் பஸ்கள் வஞ்சிபாளையம் பஸ்நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்காமல் செல்வதாகக் கூறி நேற்று காலை 10.30மணிக்கு அப்பகுதியைச் சேர்ந்த 100பேர் 2தனியார் பஸ்களையும் சிறைப்பிடித்தனர்.
இதில் ஒரு தனியார் பஸ்சின் டிரைவர் ஆத்திரமடைந்து எனது பஸ் ரோட்டில் ஓடவில்லையென்றால் வேறு எந்த பஸ்சும் ஓடவிடமாட்டேன் என்று கூறி பஸ்சை ரோட்டின் குறுக்காக நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் திருப்பூர் தாராபுரம் ரோட்டில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. இதையடுத்து பொதுமக்களே வேறு வழியை ஏற்படுத்தி மற்ற வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்தனர்.
தகவலறிந்த ஊதியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேசி சமாதானம் செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட பஸ்கம்பெனி நிர்வாகிகளுடன் பேசி இனி முறையாக பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பஸ்களை 12.30மணிக்கு விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2மணி நேரம் பரபரப்பு நிலவியது.
இதுபற்றி பொதுமக்கள் தரப்பில் கூறும்போது கடந்த 2வருடத்திற்கு முன்பு இதேபோல பஸ்களை நிறுத்தாமல் சென்றதைத் தொடர்ந்து நாங்கள் சாலைமறியல் செய்வதாக அறிவித்தோம். உடனே காங்கயம் தாசில்தார் எங்களையும் பஸ்கம்பெனி நிர்வாகிகளையும் அழைத்து முறையாக நின்று செல்ல அறிவுறுத்தினார். அதையடுத்து கடந்த 1வருடமாக நின்று பயணிகளை ஏற்றி இறக்கிச் சென்றனர். ஆனால் கடந்த சில மாதங்களாக மீண்டும் நிற்காமல் செல்லத் தொடங்கிவிட்டனர். இதனாலேயே பஸ்சை சிறைப்பிடிக்கவேண்டியதாயிற்று என்றனர்.

மடத்துக்குளம்,
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மடத்துக்குளத்தில் நடைபெற்ற மராத்தான் ஓட்டப்பந்தயத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 67–வது பிறந்த நாளையொட்டி மடத்துக்குளத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மராத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர்.கல்வி நிறுவன வளாகத்தில் இருந்து தொடங்கிய மராத்தான் ஓட்டப்பந்தயத்தை மடத்துக்குளம் சி.சண்முகவேலு எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஒன்றிய கழக செயலாளர் மெட்ராத்தி நா.அண்ணாத்துரை, திருப்பூர் மாவட்ட அரசு வக்கீல் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
மராத்தான் ஓட்டப்பந்தயம் 5 கிலோ மீட்டர் மற்றும் 10 கிலோ மீட்டர் என இரு பிரிவுகளில் நடைபெற்றது. இந்த ஓட்டப்பந்தயத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் 5 கிலோ மீட்டர் பிரிவில் 6–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளும், 10 கிலோ மீட்டர் தூரத்தில் ஆண்கள், பெண்கள் என அனைத்து வயதினரும் கலந்து கொண்டனர்.
ஜே.எஸ்.ஆர்.பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய மராத்தான் ஓட்டப்பந்தயம் வேடப்பட்டி, கழுகரை, நால்ரோடு உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை அடைந்தது. 10 கிலோ மீட்டர் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் செந்தில்குமார் முதல் பரிசும், அருள்பிரகாஷ் 2–வது பரிசும் பெற்றனர்.
பெண்கள் பிரிவில் அனுப்பிரியா முதல் பரிசும், கிருத்திகா 2–வது பரிசும் பெற்றனர். 5 கிலோ மீட்டர் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் ரவிக்குமார் முதல் பரிசும் சல்மான் 2–வது பரிசும், பெண்கள் பிரிவில் திவ்யா முதல் பரிசும், முருகேஸ்வரி 2–வது பரிசும் பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு சி.சண்முகவேலு எம்.எல்.ஏ., சி.மகேந்திரன் எம்.பி. ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர். ஜே.எஸ்.ஆர்.பள்ளித்தலைவர் ராஜ்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் ராஜ்குமார், ஜே.எஸ்.ஆர்.மேல்நிலைப்பள்ளி செயலாளர் கார்த்திகேயன், அறக்கட்டளை உறுப்பினர் சதீஷ்குமார், மடத்துக்குளம் பேரூராட்சி மன்றத்தலைவர் பழனிச்சாமி, துணைத்தலைவர் தண்டபாணி, மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் காளீஸ்வரன், கணியூர் காஜாமைதீன், காரத்தொழுவு ரவி, அசோக், பாபு, ஜே.எஸ்.ஆர்.மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சரவணக்குமார், மாண்டிசேரி பள்ளி முதல்வர் சிவபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டம் கோபி மணிமேகலை வீதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 60). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் பகுதியில் தங்கி, வேன் டிரைவராக வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாதப்பூர் பகுதியில் முத்துசாமி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று அவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முத்துசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி முத்துசாமி பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பான புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வெள்ளகோவில் அண்ணாநகர் 2–வது வீதியில் வசிப்பவர் மணிகண்டன் (வயது 35). நகைபட்டறை தொழிலாளி. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மணிகண்டன் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் நாமக்கல்லில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர்கள் நேற்று வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 4½ பவுன் தங்க நகை, 1¼ பவுன் தங்கதோடு ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.81 ஆயிரத்து 750 ஆகும். இதுகுறித்து மணிகண்டன் வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வீரபாண்டி,திருப்பூர் அருகே குடும்ப தகராறில் அண்ணணை அடித்து கொன்ற 3 தம்பிகளை போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவதுதகராறுதிருப்பூரை அடுத்த மங்கலம் சின்னவர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் அலிகான் (வயது 42). இவருடைய மனைவி மதினா பேகம் (40). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்த இவர்களுக்கு இதுவரை குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் அப்துல் அலிகானுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் நேற்று அதிகாலை மீண்டும் அப்துல் அலிகானுக்கும், அவருடைய மனைவிக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.இரும்பு கம்பியால்தாக்குதல்இதைத்தொடர்ந்து அதே பகுதியில் வசிக்கும் அப்துல் அலிகானின் தம்பிகளான இப்ராகிம் (40), அன்வர்பாதுஷா (30) மற்றும் ஒசூர்கான் (27) ஆகிய 3 பேரும் சேர்ந்து அப்துல் அலிகானிடம் அவருடைய மனைவியிடம் சண்டை போட்டது தொடர்பாக தட்டி கேட்டுள்ளனர்.அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த 3 பேரும் சேர்ந்து அப்துல் அலிகானை அங்கு கிடந்த இரும்பு கம்பியால் தாக்கி உள்ளனர்.
இதில் படுகாயமடைந்த அவர் இதுகுறித்து மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். பின்னர் அவர் சிகிச்சை பெறுவதற்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டிருந்தார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் அலிகானின் தம்பிகளான இப்ராகிம், அன்வர் பாதுஷா மற்றும் ஒசூர்கான் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் திருப்பூர் ஜே.எம்.2 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். திருப்பூர் அருகே குடும்ப தகராறில் அண்ணணை 3 தம்பிகள் சேர்ந்து அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் ஓடக்காடு பகுதியில் நடைபெற்ற இந்த கொடியேற்று விழாவுக்கு மாதர் சங்க ஓடக்காடு கிளைத் தலைவர் பிந்து தலைமை ஏற்றார். கிளை பொருளாளர் மகேஸ்வரி மாதர் சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து சர்வதேச மகளிர் தினத்தின் முக்கியத்துவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் ஏ.சங்கரன் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் பொன்மணி குணசேகரன் ஆகியோர் உரையாற்றினர். இதில் ஓடக்காடு கிளை சார்பில் மாதர் சங்கத்தினர் திரளாகக் கலந்து கொண்டனர்.
-------------
-------------
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...