Friday, October 05, 2018

On Friday, October 05, 2018 by Tamilnewstv   
திருச்சி :
மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி  பேட்டி :


அக்டோர் 7ம் தேதி கூடுதல் மழை பெய்யும் என்பதால் மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு எதிர்கொள்ளும் பொருட்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க பருகியது

கடந்த காலம் எங்கே எல்லாம் மழை சேதம் ஏற்பட்டு இருக்கிறது. அதை எல்லாம் கணக்கெடுத்து தற்போது சேதம் ஏற்படாமல் பாதுகாப்பதிலும் தாழ்வான பகுதியில் இருக்க வேண்டும் என்றும், காவிரி கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தபடுகிறது. வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, அதேபோல பொதுப்பணித் துறை நெடுஞ்சாலைத் துறை போன்ற துறையில் தொடர்ந்து முன்னெச்சரிக்கை பணிகளில் மழைக்காலங்களில் தடையின்றி செல்வதற்கு சிறிய, பெரிய பாலங்கள் ரோடுகள் எந்தவிதத் தடையுமின்றி செல்ல உறுதி செய்துப்படுகிறது.
ஏற்கனவே அதிகமாக மழை பெய்து பாதிக்ககூடிய154 இடங்கள் கண்டறிய பட்டுள்ளன. அந்த பகுதியில் உள்ள மக்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகள் அரசு தயார் நிலையில் உள்ளன. மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ஒரு பகுதிக்கு 10 பேர் விதம் 1,440 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தீயணைப்புத்துறையினர் பயிற்சி எடுத்து வருகின்றனர் கால்நடைகள் பாதுகாப்பு தேவைப்படுகிறது கால்நடை பராமரிப்பு துறை இணைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது, மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்களுக்கு வேண்டுகோள் காவிரி ஆற்றில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது குழந்தைகள், பெரியவர்கள் தண்ணீர் அருகில் செல்லாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும், மேலும் ஏரிகள் குளங்கள் தண்ணீர் இருப்பதால் அதில் ஆபத்தை உணராமல் உள்ளே சென்று குளிக்க வேண்டும் அவற்றை தவிர்க்க வேண்டும்.

12 நேரடி கொள்முதல் நிலையங்கள் உள்ளன.

38 இடங்களில் அதிகபடியான மழை பாதிப்பு இருக்கும்.
41 இடங்களில் மிதமான பாதிப்பு இருக்கும்.
72 இடங்கள் பாதுகாப்பான இருக்கும்.

பள்ளி செல்ல கூடிய குழந்தைகள் பாதுகாப்பாக அனுப்புவதற்கு பெற்றோர்களை கேட்டு கொள்ள படுகிறது. பள்ளி நிர்வாகமும் பள்ளி குழந்தைகளை பார்த்து கொள்ள வேண்டும்.

அவசர உதவிக்கு 1077 என்ற என்னும், 0431 - 2418995 என்னையும் தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
On Friday, October 05, 2018 by Tamilnewstv   
திருச்சி - 05



பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பாமக சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டிக்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம்



திருச்சி பாமக சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது மேலும் கூறுகையில் மத்திய மாநில அரசுகள் மக்களை பாதிக்காத வகையில் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்க வேண்டும் இல்லாவிட்டால் மாபெரும் போராட்டம் சந்திக்க நேரிடும் என எச்சரித்தனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் உமாநாத் மாவட்ட தலைவர் வினோத் மாவட்ட செயலாளர் திலீப் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
பேட்டி: ஸ்ரீதர் மாநில துணை பொதுச்செயலாளர் பாமக
On Friday, October 05, 2018 by Tamilnewstv   
திருச்சி_05.10.18


மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்திருப்பது மூலம் மக்களுக்கு மிகப்பெரிய சுமை நீங்கியது-மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டி






திருச்சியில் தனியார் கல்லூரி மற்றும் தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் நடை பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் பேசுகையில்...

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது.
அதேபோல பா.ஜ.க ஆளும் 13 மாநில அரசுகள் பெட்ரோல் விலையை ஏற்கனவே ரூ.2.50பைசா குறைத்துள்ளது. எனவே அந்த மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை 5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்திருப்பது மூலம் மக்களுக்கு மிகப்பெரிய சுமை நீங்கியது. கடந்த நான்கு ஆண்டுகளில் மக்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம், எரிவாயு, கழிவறை ஆகிய அடிப்படை வசதிகள் இருமடங்காக உயர்த்தப்பட்டு உள்ளது.  இது ஆளும் பா.ஜ.க அரசின் மிகப்பெரிய சாதனை என்றார்.
On Friday, October 05, 2018 by Tamilnewstv   
திருச்சி-05.10.18


தமிழகத்தில் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது-துணை முதலமைச்சர் ஒ.பன்னிர்செல்வம் பேட்டி


தேனியிலிருந்து சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்த துணை முதலமைச்சர் ஒ.பன்னிர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில்...

தங்க தமிழ் செல்வன் அளித்த பேட்டியை நான் இன்னும் முழுமையாக பார்க்கவில்லை,அதை பார்த்த பின்பு விரிவான பதிலை அளிக்கிறேன்.

தமிழகத்தில் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

டி.டி.வி தினகரனை கடந்த ஆண்டு சந்தித்தீர்களா என்கிற கேள்விக்கு *அது கடந்த காலம்* என பதில் அளித்தார்.

Wednesday, October 03, 2018

On Wednesday, October 03, 2018 by Tamilnewstv   





திருச்சி மாவட்டம் லால்குடி தாலுக்கா அரியூர்


அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம் மகோத்ஸவம் எட்டாம் ஆண்டு இன்று நடை பெற்றது






நிகழ்ச்சி வருடா வருடம் ஸ்ரீ விளம்பி வருடம் புரட்டாதி மாதம் பதினேழாம் நாள் கிருஷ்ண பட்ச தசமி திதி புனர்பூச நட்சத்திரம் சித்தி யோகம் கூடிய தினத்தில் ஸ்ரீதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு விருச்சக லக்னத்தில் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படும்
இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் அனைத்தும் ஊர் பொதுமக்கள் சார்பில் கிராம பொதுமக்கள் சார்பில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி திருமணம் ஆகாதவர்கள் விரைவில் திருமணம் பாக்கியம் பெறுவார்கள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை வரம் பெறுவார்கள் இதுபோன்ற மங்கலமான நிகழ்ச்சி இந்த ஆண்டும் சிறப்பாக ஊர் பொதுமக்கள் சார்பில் நடைபெற்றது

Tuesday, October 02, 2018

On Tuesday, October 02, 2018 by Tamilnewstv   

திருசசி   02.10.18

அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் மாநில பொதுச் செயலாளர் ஜாவித் உசேன் தலைமையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் அனைத்து தேர்தல்களிலும் இஸ்லாமியர்களுக்கு தனித் தொகுதி வேண்டும் தலித் மக்களுக்கு இருப்பது போன்று இஸ்லாமிய மக்களுக்கு ரிசர்வ் தொகுதி வேண்டும் ஸ்டெர்லைட் ஆலை நியூட்ரினோ மீத்தேன் திட்டங்கள் எட்டு வழி சாலை போன்ற திட்டங்கள் மக்களால் எதிர்க்கும் திட்டங்களாகும் அதை உடனே கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தேசியத் தலைவர் சாதிக் பாஷா அப்பாவா பாபா

தன்மான கலாச்சாரத்தை பாதுகாத்து வந்த நம் இந்திய திருநாட்டில் தற்சமயம் அதை சீர்குலைக்கும் விதமாக கள்ளத்தொடர்புகள் குற்றமில்லை ஓரினச்சேர்க்கை தவறில்லை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது
இந்திய கலாச்சாரத்தை காக்கும் வகையில் அகில இந்திய முஸ்லிம் லீக் உலகில் போராட்டத்தை நடத்தும்
பாபர் மசூதி தீர்ப்பு என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது சர்ச்சைக்குரிய இடம் எனக் கூறப்படும் இடத்தில் மசூதி ராமர் கோயிலும் கட்டி இந்திய தேசம் ஒற்றுமைக்கு  இலக்கணம் என்பதை ஏற்படுத்த வேண்டும் என்றார், மேலும் உயர் நீதிமன்றத்தையும்,
உச்சநீதிமன்றத்தை மயிர் ஆவது என்று கூறிய ராஜாவை இதுவரை கைது செய்யப்படவில்லை, அவர் சொல்லிய கருத்து சரி என்றால் அவர் இந்திய தேசத்தின் பாதுகாவலன் தான் என்றார்.

Sunday, September 30, 2018

On Sunday, September 30, 2018 by Tamilnewstv in , ,    



திருச்சி_30.09.18

ஜனவரி ஒன்று முதல் பிளாஸ்டிக் பை உபயோகிக்க தடை என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும்-தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா பேட்டி

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் திருச்சி புதுக்கோட்டை மாவட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம்,  அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியன இணைந்து நடத்திய பிளாஸ்டிக் விழிப்புணர்வு கூட்டம்,  திருச்சியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா உள்ளிட்ட 100 க்கும்  மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் விக்ரமராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்...

ஜனவரி ஒன்று முதல் பிளாஸ்டிக் பை உபயோகிக்க தடை என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும். பிளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் பணியை,  வியாபாரிகள் ஏற்றுக்கொள்ள தயார்.
பிளாஸ்டிக்கை பயன்படுத்தும்  பன்னாட்டு நிறுவனங்களை  அனுமதிக்கும் அரசு,  நம் நாட்டில் உள்ள 11 லட்சம் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை புதைக்க முயற்சிப்பது  கண்டனத்திற்குறியது.

வரும் 23 ஆம் தேதி கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு.
என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி
On Sunday, September 30, 2018 by Tamilnewstv   
திருச்சி      29.09.18

மத்திய மாநில அரசுகள் பெட்ரோல், டீசலுக்கான வரியை பாதியாக குறைக்க வேண்டும்-திருச்சியில் எல்.ஜே.டி. மாநில பொதுச் செயலாளர் ஜான் குமார் பேட்டி


ஜனநாயக ஜனதாதளம் (எல்.ஜே.டி.) நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் திருச்சியில் மாநில தலைவர் ராஜகோபால் தலைமையில் இன்று நடந்தது. இதில் மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், மாநில பொது செயலாளர்கள் வையாபுரி, ஹேமநாதன், இப்ராம்பால், மாவட்ட தலைவர்கள் அறிவழகன்,  உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மாலை திருச்சி அண்ணா சிலை அருகே ஆர்பாட்டம் நடைப்பெற்றது.


இந்திய அரசு போர் விமானங்களை வாங்குவதில் மிகப்பெரிய ஊழலை செய்துள்ளது. இதில் மோடி ஊழல் நடைபெறவில்லை என்று நிரூபிக்க பாராளுமன்ற கூட்டு நடவடிக்கை குழுவிடம் புலனாய்வு செய்ய ஒப்படைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு 100 முறை உயர்ந்துள்ளது. இதில் மத்திய, மாநில அரசுகள் வரியை பாதியாக குறைக்க வேண்டும். அப்படி குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை குறையும். 1838–ல் கட்டப்பட்ட முக்கொம்பு அணை உடைந்து விட்டது. இதில் புதிய அணை கட்ட சர்வதேச அளவில் மிகப்பெரிய தொழில் நுட்பம் கொண்டதாக டெண்டர் விட வேண்டும். இல்லையென்றால் வழக்கு தொடர்வோம். மேலும் மணல் கொள்ளையை தடுக்க 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு தடுப்பணை என தடுப்பணைகள் கட்ட வேண்டும்.

வருடத்திற்கு 10 லட்சம் பேருக்கு வேலை என கூறி மத்திய அரசு ஏமாற்றிவிட்டது. மத்திய மாநில அரசுகள் விவசாயிகள் நலன் கருதி டாக்டர் சாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட வேண்டும். விரைவில் மழைக்காலம் வர இருப்பதால் ஏரி குளங்களை தூர் வார வேண்டும்.

திருச்சி மாநகராட்சியில் அதிக அளவில் ஊழல் நடந்துள்ளதாக தெரிய வருகிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
On Sunday, September 30, 2018 by Tamilnewstv   
திருச்சி_30.09.18

எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.



திருச்சி எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளையின் பொது செயலாளர் skd. பாண்டியன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கருவாட்டு பேட்டை மற்றும் வீரமாநகரம் பகுதிகளில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் பிளாஸ்டிக்கின் அபாயம் குறித்து

விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. இப்பேரணியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பையை உபயோகப்படுத்த வேண்டும் என்று கூறி துணிப்பை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் நமசிவாயம், மாவட்ட தலைவர் சங்கர், மாவட்ட செயலாளர் நாகராஜ், மாவட்ட துணை தலைவர் ராஜா, மாவட்ட பொருளாளர் ஜெய்க்கி, செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.