Saturday, March 21, 2020

On Saturday, March 21, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,
 திருச்சி விமான நிலையத்தில் இருந்து கடந்த மார்ச் 8ஆம் தேதி முதல் வருகை தந்த வெளிநாட்டு பயணிகள் 3,400 பேருக்கு மருத்துவ குழுவினரால் விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 191 பேருக்கு சளி காய்ச்சல் இருமல் போன்ற அறிகுறி இருந்ததால் திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் கள்ளிக்குடி கொரோனா பிரத்யேக சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா தாக்குதல் இல்லை என்பது ரத்த பரிசோதனை முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.


இந்த வகையில் நேற்று துபாய், சார்ஜாவில் இருந்து வந்த 428 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 34 பேருக்கு சளி காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கள்ளிக்குடி தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய 191 பேரும் தொடர்ந்து மருத்துவ குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மருத்துவ குழுவினர் தடுப்பு நடவடிக்கையில் பாராட்டுக்குரிய வகையில் ஈடுபட்டு வருகிறார்கள். நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்ற சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு வாகனங்கள் உள்பட அரசுப் பேருந்துகளும் நாளை நிறுத்தப்படும். காய்கறி, பால் போன்ற அத்தியாவசிய வாகனங்கள் மட்டும் செல்ல தடை கிடையாது. பொதுமக்கள் சாலையில் தேவையற்று கூட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. அத்தியாவசிய சிகிச்சை தவிர வேறு எதற்காகவும் வெளியில் வர வேண்டாம். மருத்துவமனை, பொது இடங்களில் நாளை கூடுவதை தவிர்க்க வேண்டும். காவல்துறையினர், மருத்துவக் குழுவினர்  நாளை பணியில் இருப்பார்கள்.
   ஏற்கனவே கொரோனா ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளும் மையம் இந்தியாவிலேயே புனேயில் மட்டும்தான் இருந்தது. இதற்கு அடுத்தபடியாக கிங்ஸ் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஐந்து இடங்களில் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 2 அமைக்க அரசு முடிவு செய்து உள்ளது. இதில் ஒன்று திருச்சி அரசு மருத்துவமனையில் அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நகர்ப்புறப் பகுதிகளில் கைகழுவும் விழிப்புணர்வு அதிக அளவில் உள்ளது. ஆனால் கிராமப்புற மக்களிடம் இது சற்று குறைவாக உள்ளது. மகளிர் சுய உதவி குழு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பரவி மக்களை பீதி அடைய செய்யக் கூடாது. அவ்வாறு ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்  என்றார்.
On Saturday, March 21, 2020 by Tamilnewstv in    
கொரோனா வைரஸ் நோய் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது.

இந்த வகையில் இந்தியாவில் இந்த வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வெளிநாடுகளுக்கு செல்லும் பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில்களிலும் சில சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்கம், மால்கள், ஜவுளிக்கடைகள், கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்டவற்றை இன்று 20ம் தேதி முதல் வரும் 31ஆம் தேதி வரை மூட உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இதில் எந்தெந்த கோவில்கள் மூடப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகியவை 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
வழக்கம்போல பூஜைகள் நடைபெறும். ஆனால் பக்தர்கள் தரிசனம் கிடையாது என்ற அறிவிப்பும் வெளியாகியிருந்தது.
 இதைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை என்பதால் காலை முதல் பக்தர்கள் அருகில் உள்ள இதர கோவில்களுக்கு சென்றனர். ஆனால் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களும் பூட்டப்பட்டிருந்தது. முன்னறிவிப்பின்றி பூட்டப்பட்டு இருந்ததால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மக்கள் அதிகம்  கூடுவதை தவிர்ப்பதற்காக கோவில்கள் மூடப்படுவது வரவேற்கத்தக்கது. ஆனால் முன்கூட்டியே அறிவித்து இருந்ததால் கோவில்களுக்கு வந்திருக்க மாட்டோம் என்று பக்தர்கள் புலம்பிக் கொண்டு சென்றனர்.
 இந்த வகையில் திருச்சியில் உறையூர் வெக்காளியம்மன் கோவில், தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில், உறையூர் நாச்சியார் கோவில், திருவானைக்காவல், மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில் உள்பட அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சிறிய மற்றும் பெரிய கோவில்களும் இன்று காலை முதல் மூடப்பட்டிருந்தது.
On Saturday, March 21, 2020 by Tamilnewstv in    
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் அசரப் அலி மற்றும் மாவட்ட பொருளாளர் மைதீன் அப்துல் காதர் தலைமையில் அக்கட்சியினர் இன்று ஆட்சியர் சிவராசுவை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அதில், உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மக்களிடம் இது குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மூடப்பட்டு இருப்பதால் தினக்கூலி தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் சுய உதவிக்குழு, தினசரி பைனான்ஸ் கந்து வட்டி போன்றவர்களிடம் கடன் பெற்றுள்ளனர்.  இந்த கடன் வசூலை ஒருமாத காலம் நிறுத்தி வைக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுக்கடைகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 மாதங்களுக்கு பூட்ட வேண்டும். மக்களுக்கு அத்தியாவசியமான மாஸ்க் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை தடுக்கும் வகையில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இவற்றை இலவசமாக மக்களுக்கு வழங்க வேண்டும். வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் 24 மணி நேரமும் தயாராக உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

Friday, March 20, 2020

On Friday, March 20, 2020 by Tamilnewstv in    
திருச்சி மன்னார்புரத்தில் தற்போது தலைமை அலுவலகம் அமைத்து  ஏழை நடுத்தர மக்களை ஏமாற்றி வரும் நிறுவனம்தான் இந்த  எல்பின் .


இந்த நிறுவனத்தின் மீது திருச்சி ( 1 /19) தஞ்சை (1/20), புதுகை, கோவை, மதுரை போன்ற பல மாவட்டங்களிலும் மாவட்ட குற்ற பிரிவில் பண மோசடி வழக்குகள் மற்றும் பல்வேறு வழக்குகள் இன்று வரை நிலுவையில் உள்ளது.

(மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு RMWC  ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது  வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின்  நம்பர் 0003161010 & 0006833411 இதுநாள்வரை  பல கோடிகள் சுருட்டியது போதவில்லை என்று அடுத்தது தற்போது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார்  & பாதுஷா    டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ  குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN
 என்ற நிறுவனம் நடத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர்  )


 கடந்த அக்டோபர் மாதம்  மதுரையில் இந்நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்ஆர்கே என்னும் ரமேஷ் குமார் மீது ரூ.4.63கோடி வெடி வாங்கிய வகையில் மோசடி என்ற வழக்கில் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி தினமலர் நாளிதழில் கூட வெளிவந்தது.
ஆனால் 2 ஆட்களில் மீண்டும் சுதந்திரமாக வெளியில் வந்தனர். மூன்று மாதத்தில் ரூபாய் 10 கோடி தருகிறேன் என கூறி வெளியில் வந்தனர். ஆனால் இதுவரை அந்த நபருக்கு பணமும் செட்டில் செய்யவில்லை என கூறப்படுகிறது.

தற்போது கடந்த மாதம் தஞ்சையில் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்த இருந்ததாக கூறி அவர்கள் டீம் லீடர் கள் பிரசன்ன வெங்கடேஷ் மற்றும் கிங்ஸ்லி இருவரும் கைது செய்யப்பட்டனர். சிறிது நாட்கள் சிறையில் இருந்தவர்கள் இருவரும் தற்போது மீண்டும் தங்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சையில் கைதின் போது போலீசார் லத்திசார்ஜ் செய்தனர் இதனால் கடும் கோபமடைந்த எல்பின் உரிமையாளர் ராஜா காவல் துறையை எச்சரிக்கும் படி பல பதிவுகளை  வாட்ஸ் அப் குழுக்களில் வெளியிட்டார்.
உங்கள் வீட்டிற்க்கு  யாராவது போலீசார் விசா ரனைக்கு வந்தால் அவரை போட்டோ எடுங்கள், வீடியோ எடுங்கள் போன் செய்தால் பதிவு செய்யுங்கள் நான் அவர்களை என்ன செய்ய வேண்டுமோ செய்து கொள்ளலாம் என்றும் ராஜா என்கிற அழகர்சாமி கூறினார். ஜாமினில் வெளி வந்தவர்களை வெளிநாட்டிற்கு அழைத்து சென்றார்
இப்படி எல்லாம் பேசிய ராஜா மீது எந்த வழக்கும் இதுவரை பதிவு செய்யவில்லை என்பது வருத்தத்துக்குரியதாகும்.

இவர்கள் இவ்வளவு தைரியமாக பேசுவதற்கு என்ன காரணம்  என்றால் இவர்கள் நிதிநிறுவனத்தில் முன்னாள் காவல்துறையில் உயர்பதவியில் பணியாற்றிய முன்னாள் அதிகாரிகளே காரணம் என கூறப்படுகிறது.
இவர்கள் அனைத்து உயர் காவல் துறையினருக்கும் பேசி  சரி செய்து  விடுகிறார்களாம். இந்த முன்னாள் காவல்துறை அதிகாரிகளுக்கு மாதம் பல லட்சம் சம்பளம் கொடுக்கிறார்களாம் முன்னாள் காவல் துறை அதிகாரிகள் துணையுடன் தான் ராஜா காவல்துறை செயல்பாடுகளை முடக்கும் அளவிற்கு
இவ்வாறு ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ்குமார் என்கிற எஸ் ஆர் கே ரமேஷ் இப்படிக்கு செயல் படுகிறார்களாம்

நேர்மையாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி திரிபாதி அவர்கள் இதனை கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
On Friday, March 20, 2020 by Tamilnewstv in    
மக்கள் சமூகநீதிப் பேரவை மாநில அமைப்பாளர் கோவிந்தன் திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
 கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி புரிந்துள்ளன. அண்ணன் தம்பி போல் இரண்டு கட்சிகளும் ஊழலில் ஈடுபட்டுள்ளன. அரசியலில் மாற்றம் வேண்டும் என்று தமிழக இளைஞர்களும், பெண்களும் விரும்புகின்றனர்.

மாற்று தலைவர் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும். இதை வலியுறுத்தி வரும் 23ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தோம். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ரஜினிக்கு ஆதரவாக 10 லட்சம் கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊழலற்ற ஆட்சி அளிக்க ரஜினி முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் 25 மாவட்டங்களில் ரஜினிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வோம். தற்போது நாங்கள் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை. எங்களது கொள்கையும் ரஜினியின் கொள்கையும் ஒன்றாக உள்ளது. ஊழல் ஒழிப்பு, நதிநீர் இணைப்பு மூலம் விவசாயிகள் மேம்பாடு போன்ற அவரது கொள்கைகள் வரவேற்கத்தக்கதாகும் என்றார்.
On Friday, March 20, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில்


கோட்டை காவல்துறை உதவி ஆணையர் ஸ்ரீகாந்த், 
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் விஜய் ரசிகர் மன்றத்தினை சேர்ந்த மாவட்ட துணை செயலாளர் சுரேஷ், மாவட்ட இணைச் செயலாளர் ஞானவேல், மாவட்ட மகளிரணி தீபா, நிர்வாகிகள் அலெக்சாண்டர், சதீஷ், அஸ்வின், ராம்கி, மோசஸ், கௌதம், நவீன், பார்த்திபன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
On Friday, March 20, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை ரயில்வே எஸ்.பி. செந்தில்குமார் இன்று ஆய்வு செய்தார்.


இப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில் தமிழ்நாடு ரயில்வே காவல் துறையும் தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக ரயில்வே காவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பயணிகளை பரிசோதனை செய்வது, கை கழுவுவது உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
 இதையடுத்து திருச்சி ரயில்வே மாவட்டத்திற்குட்பட்ட கன்னியாகுமரி முதல் விழுப்புரம் வரையிலான ரயில் நிலையங்களில் ரயில்வே காவலர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தெர்மல் ஸ்கேனர் மூலம் அனைத்து பயணிகளையும் சோதனை செய்து வருகின்றனர். திருச்சி ரயில்வே மாவட்டத்தில் கேரளா எல்லையில் அமைந்துள்ள கன்னியாகுமரி, நாகர்கோவில், தென்காசி, மதுரை, திருச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் 10 தெர்மல் ஸ்கேனர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.



திருச்சியில் இன்று ஓடும் ரயில்களில் பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது வரை யாருக்கும் எவ்வித நோய் அறிகுறியும் தென்படவில்லை. திருச்சி ரயில் நிலையத்தில் ஒரு ஆம்புலன்சும், ஒரு மருத்துவர்  தலைமையிலான மருத்துவ குழு தயாராக உள்ளது. அறிகுறி இருக்கும் பயணிகள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கள்ளிக்குடியில் உள்ள சிறப்பு வார்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
 ஒரு காவல் ஆய்வாளர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஆறு காவலர்கள் உள்ளிட்ட காவல்துறை குழு மூன்று ஷிப்டுகளில் சுழற்சிமுறையில் வழக்கமான பணியை தவிர்த்து கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் தேவையற்ற பயணங்களை மக்கள் தவிர்க்க வேண்டும் முன்பதிவு ரத்து செய்யப்பட்டால் உடனடியாக பணம் வங்கிக் கணக்கிற்கு சென்று விடும். அதனால் தேவையற்ற பயணங்களை தவிர்த்து அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
On Friday, March 20, 2020 by Tamilnewstv in    
திருச்சி சட்டத்திற்கு புறம்பாக பைக் டாக்சி நடவடிக்கைக்கோரி சிஐடியு போலீசில் மனு

தனிநபருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை வாடகைக்கு பயன்படுத்தி பைக் டாக்சி என்ற பெயரில் பயணிகளை ஏற்றி செல்லுவது மோட்டார் வாகன சட்டப்படி குற்றமாகும். தனிநபர் வாகனத்தை வாடகை போக்குவரத்து வாகனமாக பயன்படுத்த கூடாது என்ற நீதிமன்ற தீர்ப்பை பொருட்படுத்தாமல் செயல்படும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சிஐடியு ஆட்டோ ரிக்~h ஓட்டுனர் சங்கம் சார்பில் பல்வேறு கட்டப்போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.



மேலும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி மாவட்டத்தில் உள்ள 3 ஆர்டிஓ அலுவலகத்திலும் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில்  ஒரு தனியார் நிறுவனம் இருசக்கர வாகனம் வைத்துள்ளவர்கள் தங்கள் வாகனத்தை பைக் டாக்சி நிறுவனத்தில் இணைந்து செயல்பட்டால் இலவசமாக இன்சூரன்ஸ் மற்றும் தலைகவசம் வழங்குவதாக கவர்ச்சிகரமான விளம்பரம் செய்து புதனன்று பைக் டாக்சிக்கு ஆள்சேர்க்கும் முகாம் நடைபெறும் என அறிவித்திருந்தது. இதனை கண்டித்தும் இந்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் சிஐடியு ஆட்டோ ரிக்~h ஒட்டுனர் சங்கம் சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட தலைவர்  சந்திரன் மாவட்ட பொருளாளர் அன்பு செல்வம், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ஜெயபால்  ஆகியோர் உறையூர் காவல் நிலையத்தில் புதனன்று புகார் அளித்தனர்.
பின்னர் மாவட்ட செயலாளர் மணிகண்டன் நிருபர்களிடம் கூறியதாவது: ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆட்டோ சங்கங்களையும் இணைந்து மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.  பேட்டியின் போது மாவட்ட நிர்வாகிகள் கிரேசி, ராஜலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.
On Friday, March 20, 2020 by Tamilnewstv in    
தமிழகம் முழுவதும் பல்வேறு வகையில்  மோசடி  செய்து வரும் நிறுவனம் தான் எல்பின் நிதி நிறுவனம்

திருப்பூர், மதுரை ராஜபாளையம் தேனி கோவை, திருச்சி தில்லைநகர் என பல்வேறு இடங்களில் பல பெயர்களில் நிறுவனம் நடத்தி பல கோடி பணத்தை  சுருட்டி, தற்போது எல்பின் பின்னர் ஸ்பாரோ குளோபல் ஏஜென்சி என்ற பெயரில் மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து ஏழை மற்றும் நடுத்தர மக்களை உங்களை கோடீஸ்வரர் ஆக்குகிறேன் என ஏமாற்றி வரும் எல்பின்  நிறுவன தலைவர்கள் அழகர்சாமி என்னும் ராஜா, மற்றும் எஸ்ஆர்கே என்னும் ரமேஷ் குமார் மற்றும் இவர்களது கூட்டாளிகள். இவர்கள் இருவர் மீதும் தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறை மாவட்ட குற்றப்பிரிவில் பல கோடி ஏமாற்றிய பல வழக்குகள் இன்று வரை நிலுவையில் உள்ளது. சமீபத்தில் 1/19திருச்சியிலும் குற்றப் பொருளாதாரப் பிரிவில் வழக்கு போடப்பட்டது
 தஞ்சையில் எல்பின் நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள் மீது காவல்துறையால் 1/20 வழக்குப் போடப்பட்டது தமிழகம் முழுவதும்  பல கோடி ஏமாற்றிய மோசடி மற்றும்பல்வேறு வழக்குகள் நிலுவை இருந்தும் தமிழக காவல்துறையை மிரட்டும் ஆடியோ ராஜா என்கிற அழகர்சாமி வெளியிட்டார் சமீபத்தில் மதுரையிலிருந்து எல்பின் நிறுவனத்திற்கு முன்பாக ஏமாற்றிய ஆர் எம் டபிள்யூ சி மோசடிக்கு சம்மன் அனுப்பப்பட்டது (ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகாளை வைத்து வழக்கு போடாமல் தப்பித்தார்களா என்று தெரியவில்லை)தற்போது இத்தனை வழக்குகளும் இருக்கும்போது தொடர்ச்சியாக பல்வேறு பெயர்களில் அக்கவுண்ட் தொடங்கி பல்வேறு வங்கிகளில் கணக்கு வைத்து பணத்தை சுருட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு தான் வருகிறார்கள்


மேலும்
இவர்களை போன்று தமிழகம் முழுவதும் அலுவகம் அமைத்து பொது மக்களை ஏமாற்றி  ரூ.600 கோடிக்குமேல் சம்பாதித்த Fincrop நிறுவனத்தின் மீது குற்ற பொருளாதார பிரிவு காவல்துறை  குற்ற பிரிவில் வழக்கு பதிய பட்டது. அதனை தொடர்ந்த Fincrop நிறுவனம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

மாவட்ட குற்ற பிரிவில் வழக்கு பதிந்ததால் Fincrop நிறுவனம் சீல் வைக்கப்பட்டது அனைவரும் அறிந்தது.

அதே போல் திருப்பூர், தஞ்சை, புதுகை, கோவை மதுரை மற்றும் தமிழத்தில் பல் இடங்களில் பல ஆயிரம் கோடி மோசடி போன்று பல்வேறு மாவட்டங்களிலும் மாவட்ட குற்ற பிரிவில் பல வழக்குகள் ராஜா, ரமேஷ் மற்றும் எல்பின் நிறுவனத்தின் மீதும் இன்று வரை நிலுவையில் இருந்தும் இந்த நிறுவனம் சீல் வைக்கபடாதது ஏன் என சமூக ஆர்வலர்களும் பாதிக்கப்பட்டவர்களும்  கேள்வி எழுப்புகிறார்கள்.
இதுபற்றாது என்று டாக்டர் பட்டம் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் போதே

( ஏமாற்றுவதற்காக சிறப்பு பட்டமா) என்று தெரியவில்லை
பிரபல பத்திரிக்கைகளில் விளம்பரம் தமிழக அரசுக்கு ஆதரவாக (இவர்கள் செய்யும் தவறு மறைப்பதற்காவா) என்று தெரியவில்லை


இந்த செய்தியினை பார்த்த பின்பாவது அரசும், காவல் துறையும் உடனடி நடவேடிக்கை எடுத்து ஏழை, நடுத்தர பொது மக்கள் இனி இவர்களிடம் ஏமாறமல் இருக்க ஆவண செய்ய வேண்டும் என சமுக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.