Thursday, March 26, 2020

On Thursday, March 26, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 26

 மருத்துவமனையில் வாலிபருக்கு கொரனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 22ஆம் தேதி துபாயில் இருந்து  விமானம் மூலம் திருச்சி வந்த ஈரோட்டை சேர்ந்த ராஜ்குமார் (24) என்பவர் வைரஸ் காய்ச்சல் அறிகுறி இருப்பதாக திருச்சி அரசு   மருத்துவமனையின்  சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டது.

அதில் அவருக்கு கொரனா நோய் தொற்று  இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  தற்போது அவருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மேலும்  ஒருவருக்கு கொரன் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 26 பேர் கண்டறியப்பட்ட நிலையில் மேலும் ஒருவருக்கு பாதிப்பை தொடர்ந்து கொரனா பாதிப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.


On Thursday, March 26, 2020 by Tamilnewstv in    
திருச்சி பெரிய கம்மாளத் தெருவில்  கன்னிகா பரமேஸ்வரி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெறும்.

 தற்போது ஊரடங்கு சட்டம் அமலில் உள்ள நிலையில் இந்த ஆண்டு விழா நடத்த திருச்சி மாநகர போலீசில்  அனுமதி கேட்டனர். அப்போது நிர்வாகத்தினர் 30 பேருக்கும் குறைவான உபயதாரர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து போலீசார் அனுமதி அளிததனர்.

 ஆனால் அம்மன் வீதி உலா நடைபெற்ற போது 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். இப்போது இந்த விவகாரம்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கோட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
On Thursday, March 26, 2020 by Tamilnewstv in    
திருச்சி:

திருச்சி அருகே உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளில் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் அனைத்து விதமான வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்றவை மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டண வசூல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள சுங்கச்சாவடிகளில் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

திருச்சி சமயபுரம் அருகே உள்ள சுங்கச்சாவடி, திருச்சி- புதுக்கோட்டை சாலையில் மண்டையூர் அருகில் உள்ள சுங்கச்சாவடி, திருச்சி -தஞ்சை சாலையில் துவாக்குடி சுங்கச்சாவடி, திருச்சி- மதுரை ரோட்டில் விராலிமலை அருகே உள்ள சுங்கச்சாவடி, திருச்சி -கரூர் ரோட்டில் முக்கொம்பு அருகே உள்ள சுங்கச்சாவடி ஆகியவை வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
On Thursday, March 26, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 26
 அதிகமாக
உலகையே அச்சுறுத்தும் கரோனா வைரஸை தடுக்கும் நடவடிக்கையாக  ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

 இந்த வகையில் திருச்சியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கூடிய பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நிர்வாகத்தால் நடைபெற்று வருகிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் இந்த கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த வகையில் இன்று திருச்சியில் முக்கிய சந்தையாக விளங்கும் காந்தி சந்தையில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக இரவு 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 7 மணி வரை மட்டுமே காந்தி சந்தை இயங்கும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டுள்ளார். மொத்த வியாபாரம் மட்டுமே இங்கு நடைபெறும். பொது மக்கள் யாரும் காய்கறி வாங்க வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கிய சந்தை இன்று காலை ஏழு மணிக்கு முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் கூடிய பொதுமக்களை காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.
On Thursday, March 26, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 26

மத்தியமண்டலத்தில்  ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல்
சாலைகளில் நடமாடிய மற்றும் கடைகளை திறந்து வைத்திருந்த 539 பேர் கைது -  செய்யப்பட்டனர்.  ஆட்டோக்கள் மற்றும் டூவீலர் என 325 வாகனங்கள் பறிமுதல்
- மாவட்ட காவல் துறை  கண்காணிப்பாளர்  அலுவலகம் தகவல்.

கொரானாவில் இருந்து காத்துக்கொள்ள யாரும் வீட்டிற்கு வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கு பிறபிக்கப்படுவததாக அறிவித்துள்ளார். இதன் முதல்நாளான நேற்று பல இடங்களிலும் காரணமின்றி சுற்றிதிரிந்த நபர்கள் திருப்பி அனுபப்பட்டனர். சில இடங்களில் ‘தட்டி’ அனுப்பப்பட்டனர். எனினும் நண்பர்களாக சேர்ந்து கொண்டு சுற்றித்திரிந்த நபர்களை கைது செய்த போலீசார் சில இடங்களில் வாகனங்களை பறிமுதல் செய்தினர். அந்த வகையில் திருச்சி, தஞ்சை, நாகை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த மத்தியமண்டலத்தில்  ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல் அவசியமின்றி சாலைகளில் நடமாடிய மற்றும் கடைகளை திறந்து வைத்திருந்த 539 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆட்டோக்கள் மற்றும் டூவீலர் என 325 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  அலுவலகம் தெரிவித்துள்ளது.

Wednesday, March 25, 2020

On Wednesday, March 25, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இன்று இரவு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், திருச்சி காந்தி சந்தையில் அதிக அளவில் கூட்டம் கூடுவதாக புகார் எழுந்ததையடுத்து காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கங்களுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.


 நாளை 26 ஆம் தேதி முதல் காந்தி சந்தையில் மொத்த வியாபாரம் மட்டுமே இயங்கும். இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை மட்டுமே இந்த வியாபாரம் நடைபெறும். சில்லரை வியாபாரிகளான மளிகைக் கடைகாரர்கள் மட்டுமே வந்து காய்கறிகளை வாங்க வேண்டும். பொதுமக்கள் யாரும் காந்தி சந்தையினுள் செல்லக்கூடாது.




மளிகை  கடைகளில் மட்டுமே பொதுமக்கள் காய்கறிகளை வாங்க வேண்டும். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை காந்தி சந்தை இயங்காது. யாரும் உள்ளே செல்ல முடியாது. வியாபாரிகள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து தான் காந்தி சந்தைக்கு வரவேண்டும். மாஸ்க் அணியாத வியாபாரிகள் சந்தைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அதைப்போல் சந்தையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளும் மாஸ்க் அணிய வேண்டும். வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காந்தி சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.   ஏற்கனவே 13 பேர் கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்தனர். இன்று மட்டும் இரண்டு பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் ஏழு நோயாளிகளின் ரத்த பரிசோதனை முடிவில் கரோனா தாக்குதல் இல்லை என்று முடிவு வந்துவிட்டது. மீதமுள்ள 6 நோயாளிகளுக்கு பரிசோதனை வரவேண்டியுள்ளது.
ஊரடங்கு உத்தரவின் போது இருசக்கர வாகனங்கள் மட்டும் அதிக அளவில் போக்குவரத்து இருந்தது காவல் துறை மூலம் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது நோயாளிகள் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனை செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
இவர்களைத் தவிர இரு சக்கர வாகனத்தில் இரண்டு பேர் அல்லது மூன்று பேர் சென்றால் இனி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என்றார்.
On Wednesday, March 25, 2020 by Tamilnewstv in    
திருச்சி யில் உள்ள  திமுக மாவட்ட கழக அலுவலகத்தில் கழக முதன்மைச் செயலாளர் கேஎன் . நேரு அவர்கள்  கொரோனா நோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக தொகுதி மக்களுக்கு 2500  மாஸ்க்,சோப்பு,  கை சுத்தம் செய்யும் திரவம்  (சேனிடைசர்)  ஆகியவற்றை

மாநகர மற்றும்  பகுதி செயலாளர்களிடம் கொடுத்து  பொதுமக்களுக்கு விநியோகிக்க ஆலோசனை வழங்கினார். நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மு.அன்பழகன், தமிழ்நாடு மாநில, மருந்து வியாபாரிகள் சங்க தலைவர் மனோகரன், அந்தநல்லூர் துரைராஜ், பகுதி செயலாளர்கள் கண்ணன், காஜாமலை விஜய், மோகன்தாஸ், இளங்கோ  உட்பட பலர் கலந்து கொண்டனர்
On Wednesday, March 25, 2020 by Tamilnewstv in    
மக்களை பெரும் துயரிலும் சிரமத்திலும் உடல் மற்றும் மன உளைச்சலிலும் ஆட்படுத்தியிருக்கும்

 வரலாறு காணாத கொடுமையான தொற்று கிருமியாம் கோரோனா கிருமி பாதிப்பிலிருந்து மக்களை காப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்கள் (வெண்டிலேட்டர், முக கவசம், Hand Sanitizer) போன்ற நோய் தடுப்பு மருத்துவ உபகரணங்களை அரசு மருத்துமனைகளில் வாங்கிடும் விதத்தில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா ₹10 லட்சம் வீதம் திருச்சி மாவட்ட ஆட்சி தலைவருக்கு திருச்சி கிழக்கு மேற்கு , திருவரம்பூர், திருவரங்கம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ₹40 லட்சமும் புதுக்கோட்டை கந்தர்வக்கோட்டை ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா ₹10 லட்சம் வீதம் மொத்தம் ₹20 லட்சமும் ஆக மொத்தம் ₹60 லட்சம் திருச்சி , புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு எனது நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து முதல்கட்டமாக வழங்கப்படுகிறது எனக் கூறியுள்ளார்


On Wednesday, March 25, 2020 by Tamilnewstv in    
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை உள்ளது அண்ணா சிலை வழியாக பல ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் நிற்கும் இடங்கள் மற்றும் பல ஊர்களில் இருசக்கர வாகனங்கள் வழியாக வரும் நபர்கள் எல்லாம் அந்த வழியாக வந்து செல்ல வேண்டும்




மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையிலும் மக்களைகொரானா வைரஸ்இருந்து காப்பாற்றும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும்  சிறப்பு பணியில் போக்குவரத்துக் காவல்துறையினர்

திருச்சி மேல சிந்தாமணி அண்ணாசிலை அருகே  மாநகர போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் திருநாவுக்கரசு , ஆனந்த் மற்றும் 10க்கும் மேற்பட்டவர்கள் தனது போக்குவரத்து பணியின் இடையே பொதுமக்களுக்ககு கொரானா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்த (sanitizer) சனிடைசர் கொடுத்து கைகளை சுத்தம் செய்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.