Saturday, March 28, 2020

On Saturday, March 28, 2020 by Tamilnewstv in    
துபாய் சென்று திரும்பிய எல்பின் சகோதரர்கள் மீது கொரோனா ஆய்வு நடத்த வலியுறுத்தல்


https://tamilnadunewstv.blogspot.com/2020/03/blog-post_52.html 
 24.3.2020   (தொடர்ச்சி)

திருச்சி: துபாய் சென்று திரும்பிய எல்பின் சகோதரர்கள் அரசு விதிமுறைகளை மீறி அன்னதானம் வழங்கியதை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாக கொண்டு போலி நிறுவனம் எல்பின் என்ற மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் சிறந்த முறையில் வணிகம் செய்த 400 பேர் துபாய் சுற்றுலாவுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து இந்நிறுவனத்தின் சார்பில் செயல்படும் அறம் மக்கள் நல சங்க தலைவர் ராஜா, பொதுச்செயலாளர் ரமேஷ் குமார் ஆகியோரது தலைமையில் பல்வேறு குழுக்களாக பிரிந்து மார்ச் மூன்றாம் தேதி முதல் துபாய் சென்றனர்.

கொச்சின், திருவனந்தபுரம், மும்பை, சென்னை விமான நிலையங்கள் வழியாக இவர்கள் பயணம் செய்தனர்.
 மார்ச் 3ஆம் தேதி முதல் சுமார் ஒரு வார காலம் துபாயில் தங்கியிருந்து சுற்றிப் பார்த்துவிட்டு அதே வழித்தடத்தில் நாடு திரும்பினர்.
 இந்நிலையில் உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவையும் தாக்க தொடங்கியது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்தவர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலமாக தான் இந்த நோய் இந்தியாவிற்குள் நுழைந்தது உறுதிசெய்யப்பட்டது.
 இதைத்தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகளின் அடையாளம் காணப்பட்டு அவர்கள் வீட்டிலேயே தங்கி இருக்க அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. வீடுகள்தோறும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவ்வாறு தங்கியிருக்கும் வீட்டின் முன்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
 இப்படி பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு தாக்குதலை கட்டுப்படுத்தி வருகிறது.
 ஆனால் இந்த அறம் மக்கள் நல சங்கம் சார்பில் துபாய் சுற்றுலா சென்று வந்தவர்கள் கண்காணிக்க படவில்லை. மருத்துவ பரிசோதனைக்கும் மேற்கொள்ளப்படவில்லை.

அவர்களும் தாமாக முன்வந்து எவ்வித பரிசோதனையும் செய்து கொள்ளவில்லை. அவர்கள் வீடுகளிலும் தங்கியிருக்க அறிவுறுத்தப் படவில்லை.
மேலும் இந்த அமைப்பினர் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி அன்னதானம் வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.

அன்னதானம் நிகழ்ச்சியிலும் கையுறை, முக கவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான புகார் அரசுக்கு சென்றவுடன் அன்னதானம் வழங்க தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த அமைப்பினரும் அன்னதானம் வழங்குவதை நிறுத்திக் கொண்டனர். ஆனால் வீட்டினுள்ளேயே இருக்காமல் வெளியில் நடமாடியது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரைத் தொடர்ந்து இவர்கள் 400 பேரையும் அடையாளம் கண்டு வீட்டிலேயே இருக்க தற்போது உத்தரவிட்டுள்ளார்.  தொடர்ந்து அவர்கள் மருத்துவர் துறையினரின் கண்காணிப்பில் வீட்டில் தங்கியுள்ளனர். ஆனால் இவர்கள் இத்தனை நாட்கள் பலருடன் பழகி, தெருக்களிலும் நடமாடி உள்ளனர். மாவட்ட ஆட்சியருக்கு தாமதமாக புகார் சென்றாலும், தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
மேலும் இவ்வாறு வெளிநாடு சென்று திரும்பியவர்கள் விதியை மீறி நடமாடினால் அவர்களது பாஸ்போர்ட்டுகள் முடக்கப்படும் என்று மாநில அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்தவகையில் இந்த 400 பேரது பாஸ்போர்ட்களையும் முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் இது பலருக்கும் முன்னுதாரணமாக அமையும்  என்றும் சமூக ஆர்வலர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து மருத்துவ கண்காணிப்பில் வைத்ததற்கு மாண்புமிகு பாரதப் பிரதமர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மாண்புமிகு துறை சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் மாவட்ட நிர்வாகம் காவல்துறை அதிகாரிகள் மருத்துவத்துறை அதிகாரிகள் ஆகியோர்களுக்கு சமூக ஆர்வலர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்
On Saturday, March 28, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 28

திருச்சியில் உழவர் சந்தைகள், காந்தி சந்தை மாற்றம்.

கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உழவர் சந்தைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்ப்பதற்காக இத்தகைய முடிவு அறிவிக்கப்பட்டது. இதன் விளைவாக அனைத்து தரப்பு மக்களும் திருச்சி காந்தி சந்தையில் காய்கறி வாங்குவதற்காக குவிந்தனர். இதனால் மக்கள் கூட்டத்தில் காந்தி சந்தை நிரம்பி வழிந்தது.

 இதைத் தொடர்ந்து காந்தி சந்தையில் மொத்த வியாபாரம் மட்டுமே நடைபெறும். கடைக்காரர்கள் மட்டுமே அந்த காய்கறி செல்லவேண்டும் வாங்கி செல்ல வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனாலும் மக்கள் கூட்டம் குறையவில்லை.
இதனால் வேறு வழியின்றி உழவர் சந்தைகளை மாற்று இடத்தில் திறக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது .
இந்த வகையில் திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தையை மத்திய பேருந்து நிலையத்திற்கு மாற்றி ஆட்சியர் சிவராசு  உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உழவர்சந்தை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 25 கடைகள் முதல் கட்டமாக திறக்கப்பட்டுள்ளது. இங்கு விவசாயிகள், வியாபாரிகள் தங்களது காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று காய்கறிகளை வாங்கும் வகையில் அதற்கென்று கட்டங்கள் வரையப்பட்டுள்ளது. அதில் வரிசையாக மக்கள் நின்று காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். இந்த சந்தை தினமும் காலை 6 மணி முதல் மதியம் 2 30 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர திருச்சி காந்தி சந்தை வரும் 30ம் தேதி முதல் பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
On Saturday, March 28, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 28

திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண்

திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த பெண் பேராசிரியரை மலைக்கோட்டை பகுதி அதிமுக பொருளாளராக இருந்த வணக்கம் சோமு என்பவர் ஒரு தலை காதல் காரணமாக  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலை 8மணியளவில் ஆண்டார் வீதி பகுதியில் பேரரசிரியர் பணிக்கு சென்ற போது  காரில் கடத்தினார். போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் அவரை பாதி வழியில் போலீசாரால் மீட்கப்பட்டார். ஆனால் வணக்கம் சோமு தலைமறைவானார். இந்த சம்பவம் தொடர்பாக கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வணக்கம் சோமுவை தேடி வந்தனர். இந்நிலையில் 7மாத தலைமறைவுக்கு பின் இன்று அவர் கோட்டை காவல் நிலையத்தில் சரண்டைந்தார். கொரோனா பீதி காரணமாக சிறைகளில் உள்ள தண்டனைக் கைதிகளை தவிர மற்ற விசாரணை கைதிகள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது சரண் அடைந்தால் சிறை செல்ல வேண்டியது இருக்காது என்பதால் வணக்கம் சோமு திடீர் என கோட்டை காவல் நிலையத்தில்  சரண்டைந்ததாக தெரிகிறது.

Friday, March 27, 2020

On Friday, March 27, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இதில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, ஆட்சியர் சிவராசு, எம்எல்ஏக்கள் பரமேஸ்வரி, செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
இதைத்தொடர்ந்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 195 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது. 


திருச்சி மாவட்டத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு மக்கள் சந்தேகங்களையும், புகார்களை தெரிவிக்கலாம். 


இந்த கட்டுப்பாட்டு அறை தொடங்கியது முதல் தற்போது வரை 195 புகார்கள் வந்துள்ளது. இதற்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது. திருச்சி- மதுரை சாலையில் உள்ள கள்ளிக்குடி புதிய காய்கறி வணிக வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இதுவரை வெளிநாடுகளிலிருந்து வந்த 78 ஆண்கள், 34 பெண்கள் என 112 வெளிநாட்டு பயணிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 23 பேர் அனுமதிக்கப்பட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அவர்கள் சுகாதாரத்துறை ஊழியர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வகையில் கடந்த 22ம் தேதி துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் 86 பயணிகள் வந்தனர். இதில் 22 பயணிகளுக்கு சளி, இருமல் போன்ற அறிகுறி இருந்தது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ஈரோட்டைச் சேர்ந்த 24 வயது பயணி மட்டும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது நல்ல உடல் நிலையுடன் உள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதே விமானத்தில் வந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 8 பயணிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து வந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 4,120 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்கள்  அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, வீட்டின் முன்பு ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. இந்த வகையில் 2,262 வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது. மீது ஆயிரத்து 498 வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி விரைவில் நிறைவு பெறும். இவர்கள் அனைவரும் வெளியே வரவேண்டாம் என்று மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உத்தரவை மீறி வெளியே வந்தால் பாஸ்போர்ட் முடக்கப்படும். குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி மாவட்டத்தில் 36 சமுதாயக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடிய மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகள், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள், தனியார் பேருந்துகள் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது.  பொதுமக்கள் தமிழக முதல்வரின் அறிவுரைப்படி அனைவரும் வீட்டிலேயே இருந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
On Friday, March 27, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது அவர் கூறுகையில், கடந்த 22ஆம் தேதி துபாயில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த ஈரோட்டை சேர்ந்த 24 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று திருச்சி அரசு மருத்துவமனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 அவரோடு பயணம் செய்த நாகை, திருவாரூர், தஞ்சை, பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களுக்கு தொற்று இல்லை. எனினும் அவர்கள் வீடுகளில் வைத்து அந்தந்த மாவட்ட நிர்வாகத்தால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்றின் பயங்கரம் புரியாமல் மக்கள் இன்னும் அஜாக்கிரதையாக செயல்படுகின்றனர். இருசக்கர வாகனங்களில் பலர் வீதிகளில் உலா வருகின்றனர். 

கிராமப்புறங்களில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். கரோனா வைரஸ் தாக்குதலின் விளைவு தற்போது தெரியாது. தொற்று ஏற்பட்டால் தான் அதன் வீரியம் தெரியவரும். மருத்துவமனைக்கு செல்வோர் மற்றும் காய்கறி வாங்குவோர் மட்டுமே இருசக்கர வாகனங்களில் வரலாம். தேவையற்ற காரணங்களுக்காக இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கண்டிப்பாக மாஸ்க் அணிந்து தான் வெளியில் வரவேண்டும். தேவையற்ற காரணங்களுக்காக வெளியில் வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். அந்த வாகனத்தை திரும்ப பெற முடியாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 11 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 127 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட்டில் செயல்படும் காய்கறி கடைகள் பொன்மலை ஜி கார்னர் பகுதிக்கு மாற்றப்பட உள்ளது. வரும் திங்கள்கிழமை முதல் காந்தி சந்தை பொன்மலை ஜி கார்னரில் செயல்படும். இங்கு பொதுமக்களும் வந்து காய்கறிகளைவாங்கி செல்லலாம். இதேபோல் திருச்சி மாவட்டத்தில் செயல்படுமா 6 உழவர் சந்தைகள் பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களுக்கு மாற்றப்படும். இங்கு திறந்தவெளியில் செயல்படும் உழவர் சந்தையில் மக்கள் காய்கறிகளை வாங்கிச் செல்லலாம். திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை மத்திய பேருந்து நிலைய வளாகத்திற்கு மாற்றப்படும். திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் நேந்திரம் வாழை தார்கள் அறுவடை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக புகார் வந்தது. இது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு அவற்றை அறுவடை  செய்யவும், வாகனங்களில் கேரளாவுக்கு ஏற்றிச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
On Friday, March 27, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 27
தன்வந்திரி யாகம் என்றால் கொடிய நோய்களில் இருந்து விடுபடவும் நோய்களினால் தாக்கம் ஏற்படாமல் இருக்கவும் நடத்தும் யாகம் ஆகும் தற்பொழுது கொடிய வைரஸ் காரணத்தால் நோய் ஏற்பட்டு வருகிறது மக்கள் கொடிய நோய்த் தாக்குதல் பாதிப்படையாமல் இருக்கவும் நோய்த் தாக்குதலில் இருந்து விடுபடவும் சிறப்பு யாகம் நடைபெற்றது


திருச்சி ஸ்ரீரங்கத்தில்
கொரானோ வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டுமக்களை
தன்வந்திரியாகம் நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் நிர்வாகம் சார்பில் கொரானோ வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டுமக்களை காக்கவும், பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழவும் தன்வந்திரியாகம் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் தலைமையில் நடத்தப்பட்டது. இதற்க்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஜெயராமன் செய்து இருந்தார். இதில் கோயில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தன்வந்த்ரி யாகம் பற்றி தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் விளக்கம் அளித்தார்


On Friday, March 27, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 27

ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல்  நடமாடிய, வைத்திருந்த 1289பேர் கைது - 802ஆட்டோக்கள் மற்றும் டூவீலர்கள், 22நான்கு வாகனங்கள் பறிமுதல்.

கொரானாவில் இருந்து காத்துக்கொள்ள யாரும் வீட்டிற்கு வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கு பிறபிக்கப்படுவததாக அறிவித்துள்ளார்.

பல இடங்களிலும் காரணமின்றி சுற்றிதிரிந்த நபர்கள் திருப்பி அனுபப்பட்டனர். சில இடங்களில் ‘தட்டி’ அனுப்பப்பட்டனர். எனினும் நண்பர்களாக சேர்ந்து கொண்டு சுற்றித்திரிந்த நபர்களை கைது செய்த போலீசார் சில இடங்களில் வாகனங்களை பறிமுதல் செய்தினர். அந்த வகையில் திருச்சி, தஞ்சை, நாகை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த மத்தியமண்டலத்தில்  ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல் அவசியமின்றி சாலைகளில் நடமாடிய  1289பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 802ஆட்டோக்கள் மற்றும் டூவீலர்  வாகனங்கள் மற்றும் 22 நான்கு சக்கர வாகனங்கல பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
On Friday, March 27, 2020 by Tamilnewstv in    
கரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வகையில் இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


இந்த வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த கடந்த 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் பொது இடங்களில் மக்கள் கூடுவது தவிர்க்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மக்கள் அதிகம் கூடிய  பேருந்து நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வகையில் திருச்சியில் மத்திய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, காந்தி சந்தை ஆகிய இடங்களில் உள்ள கட்டடங்கள், தரை உள்ளிட்டவற்றில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

உயரமான கட்டடங்களுக்கு தீயணைப்புத்துறை வாகனம் மூலம் கிருமி நாசினி கலந்த தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு தூய்மை படுத்தப்படுகிறது.
 இந்த வகையில் இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ராஜகோபுரம் கிருமி நாசினி கலந்த தண்ணீர் தீயணைப்புத்துறை வீரர்களால் பீய்ச்சி அடிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.  இதேபோல்  ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை, அம்மா உணவகம் உள்ளிட்ட இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
On Friday, March 27, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 27


திருச்சி மத்திய சிறையில்  சிறைவாசி பின்  உறவினர்கள் நேர்காணல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது - சிறைவாசிகள் தங்கள்  உறவினர்களுடன் காணொளி காட்சி மூலம் நேர்காணல் நடத்தலாம்.



திருச்சி மத்திய சிறையில்
விசாரணைக் கைதிகள், ஆயுள் கைதிகள் மற்றும் குண்டாசில் உள்ள கைதிகள்  என
1600 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்
சிறைவாசிகள் இன்று முதல் வரும் 14.4.2020 வரை தங்களது  குடும்பத்தினருடன் நேர்காணல் செய்வது நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 கூட்டமாக நேர்காணல் புரிவது சிறைவாசிகள்  உடல்நலம் மற்றும் நேர்காணல் காணவரும உறவினர்களின் உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இதனை மேற்கொண்டுள்ளதாக கூறும் சிறை நிர்வாகம் காணொளி காட்சி மூலம் சிறைவாசிகள் தங்கள்  உறவினர்களுடன் நேர்காணல் நடத்தலாம் எனவும் அறிவித்துள்ளது.