Monday, May 25, 2020

On Monday, May 25, 2020 by Tamilnewstv in    
திருச்சி மன்னார்புரத்தில்  அமைந்துள்ள எல்பின் நிறுவனம் பற்றியும் நிறுவனத் தலைவர் அழகர்சாமி என்னும் ராஜா மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ்.ஆர். கே என்னும் ரமேஷ் குமார் பற்றியும் அறம் மக்கள் நல சங்கம் பொது சேவை என்ற பெயரில் கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது குறித்தும் பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக பொதுமக்கள் ஏமாறுவதை தடுக்கும் விதமாக விரிவான செய்திகள் வெளியிட்டு இருந்தோம்.  

                




மேலும் இந்நிறுவனத்தின் பல கோடிகள் முதலீடு செய்து அதனை திருப்பி கேட்ட பொழுது இவர்கள் பணம் தர மறுத்ததால் திருப்பூரில் சிவகுமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்


On Monday, May 25, 2020 by Tamilnewstv in    
திருச்சி ரமலான் சிறப்பு தொழுகை பல்வேறு இடங்களில் பல்வேறு முஸ்லிம்அமைப்புகள் சார்பாக நடைபெறும்

ஆனால் இன்று தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தால் முஸ்லிம் சமுதாய மக்கள் தொழுகைகளை தங்களது இல்லத்திலேயே சிறப்பாக நடத்தி வருகின்றனர்
அப்படி சிறப்பாக நடத்திவரும் தொழுகைகளில் ஒன்றாக திருச்சியில் முஸ்லிம் சமுதாய மக்கள் அவர்களுடைய வீட்டில் சிறப்பு தொழுகை அவர்களது குடும்பத்துடன் ஈடுபட்டனர் மேலும் மக்களை தொற்றிலிருந்து காக்க வேண்டும் என்று அல்லாஹ்விடம் வேண்டியதாக தெரிவித்தனர்

Saturday, May 23, 2020

On Saturday, May 23, 2020 by Tamilnewstv in    
திருச்சி 

மக்கள் சேவையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

சமூக இடை வெளியில் நலத்திட்ட உதவிகள் - ஊரடங்கு உத்தரவு ஆரம்பித்ததிலிருந்து தனது தொகுதி மக்கள் கஷ்டப்படாமல் இருக்க திருச்சியில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான  அமைச்சர்வெல்லமண்டி நடராஜன் மனிதநேயத்துடன் தனது தொகுதிவார்டு வாரியாக இலவசமாக சமையலுக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கி வருகிறார்



தமிழகத்தில் கொரோனா பாதிப்பை அடுத்து தமிழகத்தில்  அமைச்சர்கள் அனைவரும் தங்களது பகுதிகளில் நலத்திட்டங்களை வழங்கி  வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக  திருச்சி கிழக்கு பகுதிக்குட்பட்ட பகுதிகளில் வரும் பொது மக்களுக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கடந்த 50 நாட்களுக்கு மேலாக  வாழ்வாதாரத்தை இழந்து இருக்கும் பொதுமக்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கும் வகையில் தொடர்ந்து   தொகுதிக்கு உட்பட்ட வார்டு வாரியாக நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். 


தற்போது முஸ்லிம் சமுதாய மக்களுக்கு ரம்ஜான் பண்டிகை வருகிறது அதற்காக ஏழை எளிய முஸ்லிம் சமுதாய மக்களுக்கு இலவச பொருட்கள்


திருச்சி மரக்கடை பழைய பாஸ்போர்ட் அலுவலகம் இருந்த இடத்தில் மக்களை வரிசையாக சமூக இடைவெளி விட்டு நாற்காலியில் அமரச்செய்து ஒருவர் பின் ஒருவராக சமூக இடைவெளி பின்பற்றி நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது


 நிவாரண தொகுப்பு பைகளில் அரிசி, காய்கறி மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.


 இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் ஜவஹர்லால் நேரு, மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன்,வெல்லமண்டி சண்முகம், மகளிர் அணியைச் சேர்ந்த ஜாக்லின், மற்றும் சந்திரு, கணேஷ் உட்பட  சார்ந்த அதிமுகவை சேர்ந்த  கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பகுதி தொகுதி செயலாளர்கள் வட்டச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்த கொண்டனர்.
On Saturday, May 23, 2020 by Tamilnewstv in    
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.


தமிழக காவல்துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனம் காரணமாகவும் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். 


 மாநிலம் முழுவதும் 10 டிஎஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா். 



திருச்சி நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக கபிலன் பதவி வகித்து வந்தார். தற்போது அவர் ஓய்வு பெற்று விட்டார். திருச்சி நுண்ணறிவு பிரிவு பதவி காலியாக இருந்தது.

இதில் முக்கியமாக க்யூ பிரிவின் திருச்சி டிஎஸ்பியாக இருந்த ஜி.மணிகண்டன், ஸ்ரீரங்கம் உதவி ஆணையராகவும், 



ஸ்ரீரங்கம் உதவி ஆணையா் கே.ராமச்சந்திரன் திருச்சி மாநகர காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையராகவும், மதுரை காவலா் பயிற்சி மைய டிஎஸ்பி ஏ.முகம்மது நாசா் சென்னை காவல்துறையின் பாதுகாப்புப் பிரிவு உதவி ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள 10 டிஎஸ்பிக்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
On Saturday, May 23, 2020 by Tamilnewstv in    
*திருச்சி    தமிழ்நாடு அரசு டாஸ்மார்க் பணியாளர் சங்கம் சார்பில் பணி நேரத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்* 


 தமிழகத்தின் 144 தடை உத்தரவு காரணமாக மார்ச் 24ஆம் தேதி மாலை 6 மணிக்கு மதுபான கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது இந்த சூழ்நிலையில் டாஸ்மாக் பணியாளர்கள் கூட்ட நெரிசலால் சொல்ல முடியாது பல நெருக்கடிகளைச் சந்தித்தனர்.

   

 தமிழகத்திலுள்ள அனைத்து கடைகளிலும் மார்ச் 24 தேதி மாலை 4 மணிக்கு விற்பனை புள்ளி எடுத்துவிட்டனர் நான்கு மணியிலிருந்து ஆறு மணிவரை விற்பனையான பாட்டில் காண விற்பனைத் தொகை கடையிலேயே இருப்பு இருந்தது கடை பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் திருமண மண்டபம் மாவட்ட மேலாளர் குடோன் அலுவலகத்துக்கு சரக்கு பாட்டில்களை மாற்றும் பொழுது ஆடிட்டர் மூலமாக கணக்கு பார்க்கப்பட்டது அப்பொழுது இரண்டு மணி நேரத்திற்கான சரக்கு விற்பனையான தொகைக்கு 2% வட்டி ஜிஎஸ்டி 18% கட்டி முடிக்கப்பட்டு விட்டது.

 *தற்பொழுது டாஸ்மார்க் நிர்வாகம் ஏற்கனவே ஏற்பட்ட வித்தியாசத்துக்கு 50% அபராதத் தொகை 24% வட்டி தொகை ஜிஎஸ்டி 18% கட்ட வேண்டும் என்று டாஸ்மார்க் நிர்வாகம் மே 25ஆம் தேதிக்குள் கட்டி முடிக்க வேண்டும், என்று ஆணை பிறப்பித்துள்ளது.* 

மிகப்பெரிய முறைகேடுகள் செய்தவர்களை மாவட்ட மேலாளர் தப்பிக்க விட்டுவிட்டு நேர்மையான பணியாளர்களை வஞ்சிப்பது கைவிட வேண்டும் வங்கி மூலம் விற்பனை தொகையை தமிழகம் முழுவதும் வசூல் செய்யப்படவேண்டும்.

 மேலும் திருட்டுப்போன மதுபானத்திற்கு ஆன தொகையை பணியாளர்களை கட்ட சொல்லாமல் காப்பீடு மூலமாக பெற வழிவகை செய்ய வேண்டும் அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும்.

 இதைக் கருத்தில் கொண்டு 23.5.2020 சனிக்கிழமை இன்று அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து மற்றும் கருப்பு சட்டை அணிந்து டாஸ்மார்க் நிர்வாகத்திற்கு கடையில் பணிபுரிந்து கண்டனத்தை தெரிவித்தார்கள்

பேட்டி...... மாநிலச் செயலாளர் முருகானந்தம்
On Saturday, May 23, 2020 by Tamilnewstv in    
திருட்டுத்தனமாக மணல் அள்ளிய ஜேசிபி மற்றும் டிப்பர் லாரி பறிமுதல். அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 9 பேர் கைது

   திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி பகுதியான வேம்பனூர் ஆற்றில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுவதாக வந்த புகாரையடுத்து திருச்சி சரக டி.ஐ.ஜி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் நேற்று இரவு மருங்காபுரி பகுதிகளில் அதிரடி ரெய்டில் ஈடுபட்டனர்.

 அப்போது மினிக்கியூர் அருகே மணல் அள்ளிக்கொண்டு வந்த ஒரு ஜேசிபி மற்றும் ஒரு டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். ஜேசிபி ஓட்டுனர் திருப்பதி (33), லாரி ஓட்டுனர் குமரேசன் (32) ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் மணல் திருட்டில் தொடர்புடைய மினிக்கியூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் அருணாச்சலம் என்ற பெருமாள் (55) மற்றும்  (33), தனபால் (45), சதீஷ் (25), சங்கர் (38), சதாசிவம் (30), ராசு (30) ஆகிய 9 பேரையும் கைது செய்து வளநாடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். 

இதனை அடுத்து அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 9 பேரையும் கைது செய்த வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அனைவரையும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் மருத்துவபரிசோதனை செய்து பின்னர் மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
   
 கைது செய்யப்பட்ட அருணாச்சலம் என்ற பெருமாள் மருங்காபுரி ஒன்றியத்தின் அமமுக முன்னாள் ஒன்றிய செயலாளராக இருந்தவர் உள்ளாட்சி தேர்தலின்போது அதிமுகவில் இணைந்து தற்போது இவரது மனைவி பராசக்தி மருங்காபுரி ஒன்றிய 2 வது வார்டு அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினராக உள்ளார். தொடர்ந்து பினாமிகள் மூலம் மணல் திருட்டில் ஈடுபட்டுவந்த இவரை தற்போது முதன் முறையாக போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

   நீண்ட நாட்களாக மணல் திருட்டில் ஈடுபட்டு வந்த ஆளும் கட்சி முக்கிய பிரமுகர் உள்ளிட்ட 9 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளது மணப்பாறை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
On Saturday, May 23, 2020 by Tamilnewstv in    
திருச்சி மே 23

திருச்சியில் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்
பிறந்த நாளை முன்னிட்டு அரசின் சார்பில் அவரது திருவுருவச்சிலைக்கு
மாவட்ட ஆட்சியர்
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்
அவர்களது 1345 - வது பிறந்த நாள் விழா அவரது திருவுருவச்சிலைக்கு தமிழக அரசின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு இன்று காலை 8.30 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை
செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், வருவாய் துறை கோட்டாச்சியர் விஸ்வநாதன் மற்றும் பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பொது மக்களின் நலன் கருதியும கொரோனா வைரஸ் நோய் தொற்று
பரவாமல் தடுக்கும் நோக்கத்திலும், ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே
144தடை உத்தரவு காரணமாக இந்நிகழ்ச்சிகளில் பொது மக்கள் மற்றும் எந்த கட்சியினரும் அமைப்பும் 
கலந்து கொள்ள வேண்டாம் எனவும்,
மேலும், திருவுருவச்சிலைக்கு
செல்வதை தவிர்க்குமாறும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திகிறார்..
On Saturday, May 23, 2020 by Tamilnewstv in    
*திருச்சியில் மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் Covid-19 சிறப்பு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதி ஆகியோர் துவக்கி வைத்தனர்*


கரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய மாநில அரசு  கடந்த மார்ச் முதல் தற்போது வரை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும் சாமானியர்கள் நடுத்தர மக்கள் வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் சிறப்பு கடனுதவித் திட்டம் தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில்.

இன்று திருச்சி மாவட்ட மத்திய வங்கியின் Covid-19 சிறப்பு கடனாக  நகைக்கடன் மிகக் குறைந்த வட்டியில் 58 பைசாவில் சுய உதவி குழுக்களின் மூலம் சிறப்பு கடன் வழங்கப்படுகிறது.

நகை கடன் திட்டத்தின் கீழ் கிராமிற்கு 3,000 ரூபாய் வீதம் 7% குறைந்த வட்டி வீதத்தில் 6 மாத காலத்திற்கு நபர் ஒருவருக்கு  ஒரு 5,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் 2660 குழுக்களும் சங்க அளவில் 1190 குழுக்களும் உள்ளது.

இதில் Covid-19 சிறப்பு கடன் உதவிக்கு தகுதியுள்ள 75 குழுக்களுக்கு ரூ62.50 லட்சம் கடன்  வழங்கப்பட்டது.

இதில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் காளியப்பன் துணைத்தலைவர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Friday, May 22, 2020

On Friday, May 22, 2020 by Tamilnewstv in    
மணப்பாறை அருகே
40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த தெருநாயை மீட்ட தீயணைப்புதுறை.
மீட்கச் சென்ற அதிகாரியிடம் பரிவுகாட்டி அமைதியாக நின்ற நாய்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த விடத்திலாம்பட்டி பகுதியில் உள்ள சுமார் 40 அடி ஆழமுள்ள ஒரு கிணற்றில் இன்று காலை அந்த வழியாக சுற்றித் திரியும் தெருநாய் ஒன்று கிணற்றில் இருந்த சுமார் 2 அடி நீரில் அங்கும் இங்குமாக சுற்றித் திரிவதை பார்த்த அந்த பகுதி மக்கள் இதுபற்றி மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கயிறு கட்டி கிணற்றில் இறங்கினர். ஆனால் நாய் கடித்து விடுமோ என்ற அச்சத்தில் தயங்கி தயங்கி தீயணைப்பு துறை அதிகாரி கிணற்றில் இறங்கவே அவரைக் கண்டதும் நாய் அமைதியாக நின்று தன்னை மீட்க உதவிய அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு நல்வகுபோல் மிகவும் பரிவு காட்டியது. இதையடுத்து அதிகாரிகள் அந்த நாயின் மீது கயிற்றை கட்டி கிணற்றில் இருந்து மீட்டு மேலே கொண்டு சென்றனர்.
அதன் பின்னர் கயிற்கை அவிழ்த்து விடும் வரை அமைதியாக நின்று கொண்டிருந்த பின்னர் கயிறு அவிழ்த்து விடப்பட்டதும் அங்கிருந்து மெதுவாக புறப்பட்டுச் சென்றது.