Tuesday, September 29, 2020
திருச்சி
புதிய விவசாயம் சட்டங்களை கொண்டு வந்த மத்திய அரசையும், அதற்கு ஆதரவு தெரிவித்த தமிழக அரசை கண்டித்தும், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ்,மதிமுக, இந்திய, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, ஐஜேகே, கொங்கு மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக், ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு திமுக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் குறித்து கே.என்.நேரு செய்தியாளரிடம் பேசும்பொழுது........ திமுக கூட்டணிக் கட்சியினரின் இந்த ஆர்ப்பாட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியானது சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும். நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவோம் என்று அவர் கூறினார். இலால்குடி, பூவாளூர் மார்கெட், புள்ளம்பாடி, கல்லக்குடி, மணிகண்டம் வண்ணாங்கோவில், அந்தநல்லூர் ஜீயபுரம், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பல்லாயிரக்கணக்கான திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.
91.95 லட்சம் ரொக்கம், 2 .4 கிலோ தங்கம், 2 .8 கிலோ வெள்ளி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக கிடைக்கப்பெற்றன..
திருச்சி மாவட்டம், சமயபுரம் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாக சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் ஆகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் மற்றும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.
அவ்வாறு செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் தன்னார்வலர்கள்,பத்மா சேவா சங்கம் ,கோயில் பணியாளர்கள் எண்ணினர். அப்போது ரூ. 91 லட்சத்து 95 ஆயிரத்து 048 ரொக்கமும், 2 கிலோ 477 கிராம் தங்கமும், 2 கிலோ 880 வெள்ளியும், 31 அயல்நாட்டுநோட்டுகளும் கிடைக்கப் பெற்றன என கோயிலின் இணை ஆணையர் அசோக்குமார் தகவல் தெரிவித்தார்.
திருச்சி
திருப்பைஞ்ஞீலி கோயிலில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பூரண உடல் நலம் குணமடைய விநாயருக்கு 108 தேங்காய் உடைத்து சிவன்,எமதர்மன் சன்னதிகளில் சிறப்பு பூஜை.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்ஞீலியில் உள்ள ஸ்ரீலிவனேஸ்வரர் கோயிலில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பூரண உடல் நலம் குணமடைய தேமுதிகவின் வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.குமார் தலைமையில் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தேமுதிக தலைவர் கூடிய விரைவில் பூரண குணமடைந்து உடல் ஆரோக்கியத்துடன் வீடு திரும்புவதற்கு திருப்பைஞ்ஞீலி ஸ்ரீலிவனேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகருக்கு சிறப் பு பூஜை செய்து 108 தேங்காய் உடைத்தனர்.எமதர்மராஜா சன்னதி,அருள்மிகு ஸ்ரீலிவனேஸ்வரர் உடனுறை அம்பாள் விசாலாட்சி சன்னதியில் சிறப்பு அபிஷேகம் செய்து மனமுருக பிரார்த்தனை செய்தனர். பின்னர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கோயில் மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தனர். பின்னர் கோயிலுக்கு வந்த ஏழைஎளியோர், பக்தரகள்,பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கினர். இந்த பூஜை ஏற்பாடுகளை மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் வி.பி. தங்கமணி செய்திருந்தார்
இந்த சிறப்பு அபிஷேகம், பூஜையில் வடக்கு மாவட்ட செயலாளர்,கே.எஸ்.குமார்,மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் வி.பி. தங்கமணி, ஒன்றிய கவுன்சிலர் ஆறுமுகம்,மாவட்ட துனைச் செயலாளர் சுதாகர்,நகரசெயலாளர் கார்த்திகேயன்,ஒன்றிய துனைச் செயலாளர் ஐயப்பன்,ராஜேந்திரன்,மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.
திருச்சி
திருவெள்ளறையில் உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு நாய்களுக்கான சிறப்பு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் உள்ள கால்நடை மருந்தகத்தில் இன்று செப்டம்பர் 28 உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு நாய்களுக்கான சிறப்பு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்
திருவள்ளறை கால்நடை மருந்தகத்தில் லால்குடி கோட்ட உதவி இயக்குனர் மருத்துவர் முருகவேல் தலைமையில் நடைபெற்றது . இம்முகாமில் 50 நாய்களுக்கு வெறி நோய்த்தடுப்பு ஊசி போடப்பட்டது .
திருவெள்ளறை ரை கால்நடைஉதவி மருத்துவர் லட்சுமி பிரசாத் நாய்களுக்கான தடுப்பூசியை அளித்தார் ,கால்நடை பராமரிப்பு உதவியாளர் திரு ஜெரோம் வின்சென்ட் அவர்கள் சிகிச்சைக்கான உதவி புரிந்தார். இ
திருவள்ளரை மற்றும் அதனை சுற்றியுள்ள நாய் வளர்ப்போர் திரளாக கலந்துகொண்டு நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி போட்டு பயனடைந்தனர். இந்த தகவலை லால்குடி கோட்ட உதவி இயக்குநர் மருத்துவர் முருகவேல் தெரிவித்தார்.
Sunday, September 27, 2020
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் தீ பிடித்து எரிந்த கார்.
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியதில் கார் கவிழ்ந்து தீ பிடித்து எரிந்து சாம்பலாயின.
சென்னை கீழ்பாக்கத்திலிருந்து பாஸ்கர், லார்வின் உள்ளிட்ட 5 பேர் காரில் மதுரை நோக்கி சென்றனர். கார் சமயபுரம் அருகே இருங்களூர் பகுதியில் வந்த போது அப்பகுதியில் உள்ள பிரிவு சாலையின் குறுக்கே இருசக்கர வாகனத்தில் இருவர் வந்தனர். அவர்கள் மீது கார் மோதாமல் இருக்க காரை திருப்பிய போது , சாலையின் தடுப்பு சுவரில் மோதி கார் கவிழ்ந்த்து. காரிலிருந்தவர்கள் 5 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்கள். காயமடைந்தவர்கள் இருங்களூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சாலையில் கவிழ்ந்து கிடந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த்து. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுக்க தீயிணை அனைத்தனர்.
இதனால் சென்னை யிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் போக்குவரத்து சுமார் 20 நிமிடம் பாதிக்கட்டது. சம்பவம் குறித்து சமயபுரம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்காசோள பயிர்களை தாக்கும் படைப்புழுவை கட்டுபடுத்தும் தொழில் நுட்பங்களை மண்ணச்சநல்லூர் ஒன்றிய வேளாண்மை அலுவலக உதவி இயக்குநர் விவசாயிகளுக்கு வழங்கினார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் கரியமாணிக்கம் குறு வட்டத்தில் திருப்பட்டூர்,எதுமலை,சிறுகனூர்,வாலையூர்,பாலையூர்,பெரகம்பி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 800 ஹெக்டேர் பரப்பளவில் மக்காசோளம் சாகுபடி செய்கின்றனர். இந்த மக்காசோள பயிர்களை படைப்புழு தாக்கி வருகிறது. இந்த படைப்புழு தாக்கத்தால் உரிய மகசூல் கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டமடைந்து வருகின்றனர். இந்த படைப்புழு தாக்கத்திலிருந்து விடுபட விவசாயிகளுக்கு வேளான் அலுவலக அதிகாரிகள் தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்கியுள்னர்.
உழவியல் முறை
ஆழ உழுது 1 ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு மண்ணில் இட்டு படைப்புழுவின் கூட்டுப் புழுக்களை அழிக்க வேண்டும்.
சரியான பருவத்தில் விதைத்தல் மற்றும் பல்வேறு நாட்களில் ஒரே பகுதியில் விதைப்பதை தவிர்க்க வேண்டும்.
தொடர்ச்சியாக மக்காசோள பயிர்களை சாகுபடி செய்யாமல் சுழற்ச்சி முறையில் பயிர்களை கடைபிடிக்க வேண்டும்.
விதை நேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் பவேரியா அல்லது பேஸியான,30 எப் எஸ் தயோமீதாக்சாம் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்ய வேண்டும்.பூஞ்சானக் கொல்லிகளைக் கொண்டு விதை நேர்த்தி செய்யப்பட் டிருந்தால் அதனுடன் பூச்சிக் கொல்லிகளை கொண்டு விதைகளை நேர்த்தி செய்யலாம்.
இறவை மக்காசோள பயிர்களை 60 க்கு 25 செமீ இடைவெளியிலும்,மானாவரி மக்காசோள பயிர்களை 40 க்கு 20 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
இறவை மக்காசோளத்தில் கம்பு பயிரையும்,மக்காசோளத்தில் சோளப்பயிரையும் வரப்பு பயிர்களாக மக்காசோளம் விதைப்பதற்க்கு 15 நாட்களுக்கு முன்னதாக விதைத்து படைப்புழுக்களை அழிக்கலாம்.
படைப்புழுக்களை முட்டைப் பருவத்திலேயே அழிக்க டிரைக்கோகிரம்மா பிரிட்டியோசம் ஒட்டுண்ணியை ஒரு ஏக்கருக்கு 6 சி.சி பயன்படுத்தி கட்டுபடுத்தலாம்.
வரப்பு பயிர்களாக தட்டைப்பயறு,சூரியகாந்தி,எள்,செண்டுமல்லி பயிர்களையும்,ஊடுபயிர்களாக உளுந்து,பாசிப்பயறு சாகுபடி செய்வதன் மூலம் படைப்புழுக்களை கட்டு படுத்தலாம்
இளங்குருத்துப் பருவத்தில்(15 - 20 நாட்களில்) அஸாடிராக்டின்1 இ.ஸி. 10 லிட்டருக்கு 20 மி.லி. வீதமும்,எமாமெம்டின் பென்சோவேட் 5 எஸ்ஜி 10 லிட்டருக்கு 4 கிராம் வீதமும்,நவலூரான்10 இஸி 10 லிட்டருக்கி 15 மி.லி என்ற அளவில் கலந்து இவற்றில் ஏதாவது ஒன்றை ஏக்கருககு 100 லிட்டர் என்ற அளவில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
முதிர்ந்த குருத்து பருவத்தில் (40-45 நாட்களில்)
தயோடிகார்ப் 75 டபிள்யூ. பி 10 லிட்டருக்கு 20 கிராம் வீதமும்,ஸ்பைநோசட் 12 எஸ்.ஸி 10 லிட்டருக்கு 5 மி.லி வீதமும் மெடாரைஸியம் அனி சோப்பிலியே 1*10 ஸிஎப்யூ கிராம் 10 லிட்டருக்கு 80 கிராம் வீதம் ஏக்கருக்கு 200 லிட்டர் அளவில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
கதிர் பிடிக்கும் பருவத்தில் (60-65 நாட்களில்) புளுபென்டையமைட் 480 எஸ்.ஸி 10 லிட்டருக்கு 9 மி.லி வீதமும், குளோரான்டிரானிலிப்புரோல் 18.5 எஸ்.ஸி 10 லிட்டருக்கு 5 மி.லி வீதம் ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற அளவில் கைத்தெளிப்பான் மூலம் தெளித்து படைப்புழுக்களை கட்டுப்டுத்தில் நல்ல மகசூலை விவசாயிகள் ஈட்ட முடியும் என்று படைப்புழுவை கட்டுபடுத்தும் தொழில் நுட்பங்களை மண்ணச்சநல்லூர் ஒன்றிய வேளாண் அலுவலக உதவி இயக்குநர் தாகூர் தெரிவித்தார்.
திருச்சி மணிகண்டம் ஒன்றியம் இனாம் குளத்தூர் சமத்துவபுரத்தில் அருகேயுள்ள பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் இனாம் புதூர் பகுதியில் சமத்துவபுரம் உள்ளது. இந்த சமத்துவபுரத்தின் அருகே பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று(செப் 26) நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்கள் இந்த பெரியார் சிலைக்கு காவி சாயத்தை பூசியுள்ளனர். தகவலறிந்த பெரியார் இயக்க தொண்டர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இதையடுத்து அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவிவருகிறது. காவி சாயம் பூசிய நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பெரியார் இயக்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
Thursday, September 17, 2020
நீதிமன்ற விதிகளை மீறிய மாவட்ட நிர்வாகம் மற்றும் தாசில்தார் வழக்கறிஞர் சரமாரி புகார்
Thursday, June 18, 2020
Total Pageviews
News
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த நகலூர், பெருமாபாளையத்தை சேர்ந்தவர் அன்புரோஸ்(வயது- 72). இவர், தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை, ...
-
திருச்சி கழக அமைப்புச் செயலாளரும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளருமான சாருபாலா தொண்டைமான் தொகுதிக்குட்பட்ட, சோமரசம்பேட்டை முஹம்மத...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...









