Monday, December 07, 2020
திருச்சி-07.12.20
சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக மண்வள தின விழா
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். வுளமான மண் இருந்தால் தான் நிலையான மகசூலை பெற முடியும். ஆரோக்கியமான மண்ணே அனைத்து விவசாயித்திற்கும் ஆதராம். பயிர் சாகுபடியில் அதிக மகசூலைப் பெற ஆரோக்கியமான மண் இன்றியமையாதது. ஆகவே மண் வளத்தை பெருக்கும் நோக்கோடு ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 5-ம் நாள் உலக மண்வள தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த வரும் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் திருச்சிராப்பள்ளி வேளாண்மைத் துறையும் இணைந்த உலக மண்வள தினவிழா 05.12.2020 அன்று சிறுகமணி தேர்வு நிலை சமுதாயக் கூடத்தில் நடத்தியது. இவ்விழாவில் புதுதில்லியிலிருந்த மண்வள தினம் துவக்க விழா நேரடி அலை மூலம் காணொலி காட்சியாக விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டது. இவ்விழாவை தலைமை ஏற்று துவங்கி வைத்து சிறப்புரையாற்றிய வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திரு.ஆறு.பெரியகருப்பன் அவர்கள் மண்வள மேம்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் மண்வள அட்டை குறித்து எடுத்தரைத்தார். இவ்விழாவில் சிறப்புரையாற்றிய பெட்டவாய்த்தலை கூட்டுறவு வங்கி தலைவர் திரு.முஏளு. செந்தில்குமார் அவர்கள் தொழில்நுட்ப கையேடுகளை வெளியிட்டு விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கினார். இவ்விழாவில் வாழ்த்துரை வழங்கிய தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் திரு.பாபுராஜ் அவர்கள் மண்வள மேம்பாட்டில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்தும் வேளாண் பொறியியல் துறை உதவிபொறியாளர் திரு.அ.வெற்றிவேல் அவர்கள் மண்வள மேலாண்மையில் பண்ணை இயந்திரங்களின் பயன்பாடு குறித்தும் அன்பில் எடுத்தரைத்தனர். இதை;த தொடர்ந்து தொழில்நுட்ப உரைகள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் வழங்கப்பட்டது. மண்வளத்தில் உயிர் உரங்கள் மற்றும் மட்க வைப்பான்கள் குறித்து அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் கி.க.அனிதா அவர்களும்ää மண்வள மேம்பாட்டில் பசுந்தாள் மற்றும் பசுந்தழை உரங்கள் குறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் நா.தமிழ்ச்செல்வன் அவர்களும் மண் மற்றும் நீர் பரிசோதனையும்ää மண்வள மேலாண்மையில் மண்வள அட்டையின் பங்கும் குறித்து மண்ணியில் தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் வெ.தனுஷ்கோடி அவர்களும் மண்வள சீர்கேட்டின் இரசாயன பூச்சிக்கொல்லியின் பங்கு இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மைத் தொழில்நுட்பங்கள் குறித்து பயிர்பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் இரா.ஷீபா ஜாஸ்மின் அவர்களும் மண்வளமும் மனித நலமும் குறித்து மனையியல் தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் கா.கீதா அவர்களும் எடுத்தரைத்தனர். இதனைத் தொடர்ந்து முன்னோடி விவசாயிகள் மண் வளம் பேணுதல் குறித்த தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இத்துடன் மண்வள மேலாண்மை குறித்து கருத்துக் கண்காட்சியை விவசாயிகள் பார்வையிட்டு பயன்பெற்றனர். விழாவின் ஆரம்பத்தில் வரவேற்புரை வழங்கிய சிறுகமணி வோளண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் நா.தமிழ்ச்செல்வன் அவர்கள் மண்வள மேம்பாட்டின் மண் பரிசோதனையின் அவசியம் குறித்து எடுத்தரைத்தார். இறுதியாக தொழில்நுட்ப வல்லுநர் (மண்ணியல்) முனைவர் வெ.தனுஷ்கோடி அவர்கள் நன்றியுரை வழங்க நாட்டுப்பண்ணுடன் விழாவானது இனிதே முடிவடைந்தது. இவ்விழாவில் 200-க்கு மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வேளாண் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.
Tuesday, December 01, 2020
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார்.
திருச்சி் மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிக்சாண்டார் கோயில் ஊராட்சியில் இன்று முதன் முறையாக விவசாயிகளுக் கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் திரு.பெரியகருப்பன் அவர்கள் தொடங்கி வைத்து திட்டம் குறித்து விளக்க உரை ஆற்றினார். தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நெல் இயந்திர நடவு செய்யப்பட்ட வயல்களை ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிச்சாண்டார்கோவில் முன்னோடி விவசாயிகளுக்கு வேளாண்மை துணை இயக்குநர் திரு.லட்சுமணசாமி பயிர்களில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு குறித்து விளக்கமாக எடுத்து கூறினார். அதுபோலே ஒவ்வொரு ஊராட்சியிலும் 10 முன்னோடி விவசாயிகளை தேர்ந்தெடுத்து அவர்களிடம் பூச்சி மற்றும் நோய்க்கட் டுப்பாடுகள் குறித்து பயிற்சி் அளிக்கப்பட்டு அந்த பகுதிகளில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பூச்சி மற்றும் நோய்க் கட்டுப்பாடு குறித்து விளக்கமளித்து பயிர்களை காக்க ஆலோசனைகள் வழங்கப்படும். இந்நிகழ்வில் வேளாண்மை உதவி இயக்குநர் தாகூர், வேளாண்மை அலுவலர் உமா மகேஸ்வரி, துணை வேளாண்மை அலுவலர் சின்னப்பாண்டி உடன் இருந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் செய்து இருந்தார். வேளாண்மை உதவி அலுவலர்கள் பாஸ்கர், பிச்சைபிள்ளை மற்றும் ஆனந்த் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
Tuesday, September 29, 2020
திருச்சி
புதிய விவசாயம் சட்டங்களை கொண்டு வந்த மத்திய அரசையும், அதற்கு ஆதரவு தெரிவித்த தமிழக அரசை கண்டித்தும், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ்,மதிமுக, இந்திய, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, ஐஜேகே, கொங்கு மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக், ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு திமுக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் குறித்து கே.என்.நேரு செய்தியாளரிடம் பேசும்பொழுது........ திமுக கூட்டணிக் கட்சியினரின் இந்த ஆர்ப்பாட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியானது சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும். நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவோம் என்று அவர் கூறினார். இலால்குடி, பூவாளூர் மார்கெட், புள்ளம்பாடி, கல்லக்குடி, மணிகண்டம் வண்ணாங்கோவில், அந்தநல்லூர் ஜீயபுரம், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பல்லாயிரக்கணக்கான திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.
91.95 லட்சம் ரொக்கம், 2 .4 கிலோ தங்கம், 2 .8 கிலோ வெள்ளி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக கிடைக்கப்பெற்றன..
திருச்சி மாவட்டம், சமயபுரம் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாக சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் ஆகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் மற்றும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.
அவ்வாறு செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் தன்னார்வலர்கள்,பத்மா சேவா சங்கம் ,கோயில் பணியாளர்கள் எண்ணினர். அப்போது ரூ. 91 லட்சத்து 95 ஆயிரத்து 048 ரொக்கமும், 2 கிலோ 477 கிராம் தங்கமும், 2 கிலோ 880 வெள்ளியும், 31 அயல்நாட்டுநோட்டுகளும் கிடைக்கப் பெற்றன என கோயிலின் இணை ஆணையர் அசோக்குமார் தகவல் தெரிவித்தார்.
திருச்சி
திருப்பைஞ்ஞீலி கோயிலில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பூரண உடல் நலம் குணமடைய விநாயருக்கு 108 தேங்காய் உடைத்து சிவன்,எமதர்மன் சன்னதிகளில் சிறப்பு பூஜை.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்ஞீலியில் உள்ள ஸ்ரீலிவனேஸ்வரர் கோயிலில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பூரண உடல் நலம் குணமடைய தேமுதிகவின் வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.குமார் தலைமையில் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தேமுதிக தலைவர் கூடிய விரைவில் பூரண குணமடைந்து உடல் ஆரோக்கியத்துடன் வீடு திரும்புவதற்கு திருப்பைஞ்ஞீலி ஸ்ரீலிவனேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகருக்கு சிறப் பு பூஜை செய்து 108 தேங்காய் உடைத்தனர்.எமதர்மராஜா சன்னதி,அருள்மிகு ஸ்ரீலிவனேஸ்வரர் உடனுறை அம்பாள் விசாலாட்சி சன்னதியில் சிறப்பு அபிஷேகம் செய்து மனமுருக பிரார்த்தனை செய்தனர். பின்னர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கோயில் மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தனர். பின்னர் கோயிலுக்கு வந்த ஏழைஎளியோர், பக்தரகள்,பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கினர். இந்த பூஜை ஏற்பாடுகளை மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் வி.பி. தங்கமணி செய்திருந்தார்
இந்த சிறப்பு அபிஷேகம், பூஜையில் வடக்கு மாவட்ட செயலாளர்,கே.எஸ்.குமார்,மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் வி.பி. தங்கமணி, ஒன்றிய கவுன்சிலர் ஆறுமுகம்,மாவட்ட துனைச் செயலாளர் சுதாகர்,நகரசெயலாளர் கார்த்திகேயன்,ஒன்றிய துனைச் செயலாளர் ஐயப்பன்,ராஜேந்திரன்,மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.
திருச்சி
திருவெள்ளறையில் உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு நாய்களுக்கான சிறப்பு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் உள்ள கால்நடை மருந்தகத்தில் இன்று செப்டம்பர் 28 உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு நாய்களுக்கான சிறப்பு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்
திருவள்ளறை கால்நடை மருந்தகத்தில் லால்குடி கோட்ட உதவி இயக்குனர் மருத்துவர் முருகவேல் தலைமையில் நடைபெற்றது . இம்முகாமில் 50 நாய்களுக்கு வெறி நோய்த்தடுப்பு ஊசி போடப்பட்டது .
திருவெள்ளறை ரை கால்நடைஉதவி மருத்துவர் லட்சுமி பிரசாத் நாய்களுக்கான தடுப்பூசியை அளித்தார் ,கால்நடை பராமரிப்பு உதவியாளர் திரு ஜெரோம் வின்சென்ட் அவர்கள் சிகிச்சைக்கான உதவி புரிந்தார். இ
திருவள்ளரை மற்றும் அதனை சுற்றியுள்ள நாய் வளர்ப்போர் திரளாக கலந்துகொண்டு நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி போட்டு பயனடைந்தனர். இந்த தகவலை லால்குடி கோட்ட உதவி இயக்குநர் மருத்துவர் முருகவேல் தெரிவித்தார்.
Sunday, September 27, 2020
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் தீ பிடித்து எரிந்த கார்.
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியதில் கார் கவிழ்ந்து தீ பிடித்து எரிந்து சாம்பலாயின.
சென்னை கீழ்பாக்கத்திலிருந்து பாஸ்கர், லார்வின் உள்ளிட்ட 5 பேர் காரில் மதுரை நோக்கி சென்றனர். கார் சமயபுரம் அருகே இருங்களூர் பகுதியில் வந்த போது அப்பகுதியில் உள்ள பிரிவு சாலையின் குறுக்கே இருசக்கர வாகனத்தில் இருவர் வந்தனர். அவர்கள் மீது கார் மோதாமல் இருக்க காரை திருப்பிய போது , சாலையின் தடுப்பு சுவரில் மோதி கார் கவிழ்ந்த்து. காரிலிருந்தவர்கள் 5 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்கள். காயமடைந்தவர்கள் இருங்களூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சாலையில் கவிழ்ந்து கிடந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த்து. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுக்க தீயிணை அனைத்தனர்.
இதனால் சென்னை யிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் போக்குவரத்து சுமார் 20 நிமிடம் பாதிக்கட்டது. சம்பவம் குறித்து சமயபுரம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்காசோள பயிர்களை தாக்கும் படைப்புழுவை கட்டுபடுத்தும் தொழில் நுட்பங்களை மண்ணச்சநல்லூர் ஒன்றிய வேளாண்மை அலுவலக உதவி இயக்குநர் விவசாயிகளுக்கு வழங்கினார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் கரியமாணிக்கம் குறு வட்டத்தில் திருப்பட்டூர்,எதுமலை,சிறுகனூர்,வாலையூர்,பாலையூர்,பெரகம்பி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 800 ஹெக்டேர் பரப்பளவில் மக்காசோளம் சாகுபடி செய்கின்றனர். இந்த மக்காசோள பயிர்களை படைப்புழு தாக்கி வருகிறது. இந்த படைப்புழு தாக்கத்தால் உரிய மகசூல் கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டமடைந்து வருகின்றனர். இந்த படைப்புழு தாக்கத்திலிருந்து விடுபட விவசாயிகளுக்கு வேளான் அலுவலக அதிகாரிகள் தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்கியுள்னர்.
உழவியல் முறை
ஆழ உழுது 1 ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு மண்ணில் இட்டு படைப்புழுவின் கூட்டுப் புழுக்களை அழிக்க வேண்டும்.
சரியான பருவத்தில் விதைத்தல் மற்றும் பல்வேறு நாட்களில் ஒரே பகுதியில் விதைப்பதை தவிர்க்க வேண்டும்.
தொடர்ச்சியாக மக்காசோள பயிர்களை சாகுபடி செய்யாமல் சுழற்ச்சி முறையில் பயிர்களை கடைபிடிக்க வேண்டும்.
விதை நேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் பவேரியா அல்லது பேஸியான,30 எப் எஸ் தயோமீதாக்சாம் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்ய வேண்டும்.பூஞ்சானக் கொல்லிகளைக் கொண்டு விதை நேர்த்தி செய்யப்பட் டிருந்தால் அதனுடன் பூச்சிக் கொல்லிகளை கொண்டு விதைகளை நேர்த்தி செய்யலாம்.
இறவை மக்காசோள பயிர்களை 60 க்கு 25 செமீ இடைவெளியிலும்,மானாவரி மக்காசோள பயிர்களை 40 க்கு 20 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
இறவை மக்காசோளத்தில் கம்பு பயிரையும்,மக்காசோளத்தில் சோளப்பயிரையும் வரப்பு பயிர்களாக மக்காசோளம் விதைப்பதற்க்கு 15 நாட்களுக்கு முன்னதாக விதைத்து படைப்புழுக்களை அழிக்கலாம்.
படைப்புழுக்களை முட்டைப் பருவத்திலேயே அழிக்க டிரைக்கோகிரம்மா பிரிட்டியோசம் ஒட்டுண்ணியை ஒரு ஏக்கருக்கு 6 சி.சி பயன்படுத்தி கட்டுபடுத்தலாம்.
வரப்பு பயிர்களாக தட்டைப்பயறு,சூரியகாந்தி,எள்,செண்டுமல்லி பயிர்களையும்,ஊடுபயிர்களாக உளுந்து,பாசிப்பயறு சாகுபடி செய்வதன் மூலம் படைப்புழுக்களை கட்டு படுத்தலாம்
இளங்குருத்துப் பருவத்தில்(15 - 20 நாட்களில்) அஸாடிராக்டின்1 இ.ஸி. 10 லிட்டருக்கு 20 மி.லி. வீதமும்,எமாமெம்டின் பென்சோவேட் 5 எஸ்ஜி 10 லிட்டருக்கு 4 கிராம் வீதமும்,நவலூரான்10 இஸி 10 லிட்டருக்கி 15 மி.லி என்ற அளவில் கலந்து இவற்றில் ஏதாவது ஒன்றை ஏக்கருககு 100 லிட்டர் என்ற அளவில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
முதிர்ந்த குருத்து பருவத்தில் (40-45 நாட்களில்)
தயோடிகார்ப் 75 டபிள்யூ. பி 10 லிட்டருக்கு 20 கிராம் வீதமும்,ஸ்பைநோசட் 12 எஸ்.ஸி 10 லிட்டருக்கு 5 மி.லி வீதமும் மெடாரைஸியம் அனி சோப்பிலியே 1*10 ஸிஎப்யூ கிராம் 10 லிட்டருக்கு 80 கிராம் வீதம் ஏக்கருக்கு 200 லிட்டர் அளவில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
கதிர் பிடிக்கும் பருவத்தில் (60-65 நாட்களில்) புளுபென்டையமைட் 480 எஸ்.ஸி 10 லிட்டருக்கு 9 மி.லி வீதமும், குளோரான்டிரானிலிப்புரோல் 18.5 எஸ்.ஸி 10 லிட்டருக்கு 5 மி.லி வீதம் ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற அளவில் கைத்தெளிப்பான் மூலம் தெளித்து படைப்புழுக்களை கட்டுப்டுத்தில் நல்ல மகசூலை விவசாயிகள் ஈட்ட முடியும் என்று படைப்புழுவை கட்டுபடுத்தும் தொழில் நுட்பங்களை மண்ணச்சநல்லூர் ஒன்றிய வேளாண் அலுவலக உதவி இயக்குநர் தாகூர் தெரிவித்தார்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...









