Friday, June 04, 2021
திருச்சி திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் படத்திற்கு மலர் தூவி EB ரோட்டில் வீடற்றொர் தங்கும் இல்லத்தில் தங்கியுள்ள ஆதரவற்ற முதியவர்களுக்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உணவு, நலத்திட்ட உதவி வழங்கினார்.
Thursday, June 03, 2021
திருச்சி
"ரைட் திங்கர்ஸ் டிரஸ்ட்" சார்பில் ஏழைகளுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக மக்களை தாக்கி வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு தளர்வற்ற ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசு பல முயற்சிகள் எடுத்து வருகிறது
அதன் காரணமாக ஏழை, எளிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடி வாழ்ந்து வருகின்றனர். அப்படி கஷ்டப்படும் 100 மேற்பட்ட ஏழை எளிய நபர்களுக்கு திருச்சியைச் சேர்ந்த ரைட் திங்கர்ஸ் டிரஸ்ட் சார்பில் நிவாரண பொருட்கள் இன்று வழங்கப்பட்டது.
திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் 120 பேருக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், பிஸ்கட், சேமியா அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக வழக்கறிஞர் தினேஷ்பாபு, காவல்துறை உதவி ஆய்வாளர் மதியழகன், தர்கா ஜமாத் தலைவர் ஜாகீர் உசேன், என்டிஎஃப் மாநிலச் செயலாளர் ஆல்பா நசீர், அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் இலியாஸ், ஆசிரியர் காஜாமைதீன், எஸ்டிபிஐ முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டு நிவாரண உதவிகளை பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரைட் திங்கர்ஸ் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் இப்ராஹிம், தலைவர் முகமது ரசூல், பொருளாளர் சாகுல் ஹமீது, அறங்காவலர்கள் சையது முஸ்தபா, அப்துல்லா, பாஸ்கர், ஜோ ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
நலிவடைந்த பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து நிவாரண பொருட்களை பெற்று சென்றனர்.
சோழா ரோட்டரி கிளப் சார்பில் மருத்துவ உபகரணங்களை EVR பள்ளியில் அரசு மருத்துவமனை டீன் இடம் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
திருச்சி இ. ஆர் மேல்நிலைப் பள்ளியில் திருச்சி சோழா ரோட்டரி சங்கம் சார்பில் உறவின் உயிர் காப்போம் என்ற தலைப்பில் ரூபாய் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 100 யூனிட் ஆக்சிஜன் செரி யூட்டிகள், 75 யூனிட் ப்ளோ மீட்டர், 175 யூனிட் ஆக்சிஜன் அளவை கணக்கிடும் கருவி மற்றும் முக கவசம்கள் உள்ளிட்டவைகளை,திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா அவர்களிடம் தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வழங்கினார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி சோழா ரோட்டரி சங்க தலைவர் ஜோசப் பாக்கியராஜ், செயலாளர் அமலச்சந்திரன்/ திட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ். இணை இயக்குனர் லட்சுமி, நோடல் ஆபீசர் முத்துக்குமார் மற்றும் சிறப்பு திட்டங்கள் இயக்குனர் மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சியில் மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி 98வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. திமுக திருச்சி தெற்கு மாவட்டம் 9அ வட்டம் சார்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், சிந்தாமணி அண்ணாசிலை அருகே பூசாரி தெருவில் கொடியேற்றி வெடிகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
திமுக மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன் தலைமை வகித்தார். அங்கு கட்சி கொடியை அவர் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து முனிசிபல் காலனியில் 50 பேருக்கு தலா 5 கிலோ அரிசியை பகுதி செயலாளர் மதிவாணன் வழங்கினார். முன்னதாக அங்கு திமுக கட்சி கொடியை ஏற்றி வைத்து அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி திருவுருவ படத்திற்கு பகுதி செயலாளர் மதிவாணன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சிகளில் திமுக 9அ வட்ட செயலாளர் சண்முகம், ஜம்புலிங்கம், செபாஸ்டின், கணேசன், கந்தன், மோகன், சக்திவேல், பிரபாகரன், பெரியசாமி, காட்டு நாயக்கர் சங்க கவுரவத் தலைவர் செல்வராஜ், செயலாளர் லட்சுமணன், திமுக மலைக்கோட்டை பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் மாரிக்கண்ணன், நிர்வாகிகள் மாணிக்கம், ஸ்ரீதர், ஆதி அரசு, மலைக்கோட்டை பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் திராவிட பண்ணை என்கிற முத்து தீபக், வட்ட பிரதிநிதி தீனதயாளன், இலக்கிய அணி துணை அமைப்பாளர் ராஜ்குமார், மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருச்சி மேலசிந்தாமணியில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொடியேற்றி இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கி சமூக இடைவெளியை கடைபிடித்து தலைமைக் கழகத்தின் அறிவுறுத்தலின்படி கொண்டாடப்பட்டது.
மறைந்த திமுக தலைவர் 98வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. திமுக திருச்சி தெற்கு மாவட்டம் 9வது வட்டம் மேலசிந்தாமணி பழைய கரூர் ரோட்டில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. திமுக முன்னாள் வட்ட செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார்.
அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த கருணாநிதி திருவுருவப் படத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் 200 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை, காய்கறி மற்றும் 300 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் ஸ்ரீதர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஜார் மைதீன், மாவட்ட செயலாளர் விக்டர், டோரி பாலு, ஆட்டோ பாலு, கோபி, விகேஎன் சுரேஷ், செந்தில், சிவா, விடுதலை சிறுத்தைகள் கட்சி அல்லாபிச்சை மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக கொடியை ஏற்றி கலைஞர் கருணாநிதி உருவ சிலைக்கு மாலை அணிவித்து சட்டமன்ற உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்
மாலை அணிவித்து பின்னர் இனிப்புகள் வழங்கி சமூக இடைவெளியை கடைப்பிடித்த கொண்டாடினர்.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி திமுக தலைமை அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில்உள்ள அண்ணா மற்றும் கலைஞர் உருவச் சிலைகளுக்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன் ஆகியோர் தலைமையில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டி,லால்குடிசட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன். துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார், முசிறி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன்,, மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கதிரவன், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அனைவரும் இணைந்து திமுக கழகக் கொடியை ஏற்றி மாலை அணிவித்து திமுக கழகத் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
.
Tuesday, June 01, 2021
திருச்சி
மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவோம் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பல்கலைக்கழகத்தின் தாளாளர் ஏ.சீனிவாசன் பேட்டி
Saturday, May 29, 2021
திருச்சி புத்தூர் அருகே கபசுர குடிநீர் மற்றும் கொரோனா தடுப்பு சித்த மருந்து தொகுப்பு வழங்கும் விழா அமைச்சர் கே என் நேரு துவங்கி வைத்தார்.
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 30 ஆக்சிஜன் படுக்கைகள் தற்போது காலியாக உள்ளது. அரசின் துரித நடவடிக்கையால் இந்த நிலை உருவாகி உள்ளது. எனினும் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதை நிறுத்த வேண்டும். வெளியில் வந்தாலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும். பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். திருச்சி கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் ஒரு ஆழ்குழாய் கிணற்றிலிருந்து மட்டும் தண்ணீர் கலங்கலாக வருகிறது. அதை சரி செய்வதற்காக உடனடியாக ரூ.4 கோடி மதிப்பீட்டில் அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
தொடர்ந்து பொது மக்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அத்தனை வசதிகளும் செய்து கொடுக்கப்படும். திருச்சி மாநகரில் உள்ள தேவைகளை அறிந்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மூலம் செய்து கொடுக்கப்படும். மாநகரில் உள்ள குறைகளை களைய தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக தான் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் ஆய்வு செய்யப்படுகிறது. அரியமங்கலம் குப்பை கிடங்கு அகற்ற நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கும் பணிகள் விரைந்து தொடங்கும். தற்போது நடந்து கொண்டிருக்கும் பாதாள சாக்கடை அமைக்கும் பணி விரைவுபடுத்தப்படும்.
உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவு நீர் கலக்காத நிலையை உண்டாகுவதற்கான பணிகள் நடைபெறுகிறது. மழை வருவதற்கு முன்பாக தூர்வாரும் பணி திருச்சி மாநகரில் நடைபெற்று வருகிறது. உய்யக்கொண்டான் வாய்க்காலில் பொதுப்பணித்துறை சார்பில் தூர் வாரப்படுகிறது. மாநகராட்சி பகுதியிலுள்ள வாய்க்கால் தூர்வாரும் பணி இன்று தொடங்கியுள்ளது. மழைக்காலத்தில் வரும் முன் காப்போம் என்ற திட்டத்தில் இந்த பணி மேற் கொள்ளப்படுகிறது. அதேபோல் சாலைகள் செப்பனிடும் பணியும், புதிய சாலை அமைக்கும் பணிகளும் விரைந்து செயல்படுத்தப்படும். கரோனாவை ஒழிப்பது மட்டுமின்றி மக்களுடைய அத்தியாவசியப் பணிகளை நிறைவேற்றுவதில் தமிழக அரசு முனைப்பாக இருக்கும். விரைவில் சாலை, கசீரான குடிநீர் விநியோகம், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.
நடைபெற்ற விழாவில் தலைமை வகித்த திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு பேசுகையில், திருச்சி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கரொனா தடுப்பு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. திருச்சியில் கரோனா அதிகபட்சமாக நாளொன்றுக்கு 1,750 வரை இருந்தது. இது தற்போது குறைந்துள்ளது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை. ஒத்துழைப்பு இல்லாமல் அரசு எவ்வளவு முயற்சி எடுத்தாலும் தொற்று குறைவதற்கு சாத்தியம் இல்லை.
56,000 தடுப்பூசி திருச்சி வந்தது. 5 தினங்களில் இன்றோடு முடிந்து விட்டது. மத்திய அரசிலிருந்து 2,000 தடுப்பூசிகள் தினமும் வருகிறது. இந்தியாவிலேயே முதல் மாநிலமாக வெளியில் இருந்து வாங்கி 56,000 தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்த வருபவர்களுக்கு சித்தா பெட்டகம் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. வெளியே வந்தாலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும்.
தொற்று பரவுவதற்கு ஒருவரோடு ஒருவர் உரசுவது தான் காரணம். முகக்கவசம் ஒழுங்காக அணியவேண்டும். மூன்று நாட்கள் ஒரே முக கவசம் அணிவது பயனளிக்காது. அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மக்கள் ஒத்துழைத்தாள் இன்னும் ஒரே வாரத்தில் கரோனா தொற்று திருச்சியில் 500 வரை குறைத்து விடலாம். மற்ற மாவட்டத்தை விட நமது மாவட்டத்தில் குறைவதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் தான் காரணம்.
10 நாட்களுக்கு முன்பு ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகமாக இருந்தது. தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் 35 படுக்கைகள் காலியாக உள்ளது. ஆக்சிஜன் படுக்கை 70 காலியாக உள்ளது. இதற்கு அரசின் துரித நடவடிக்கை தான் காரணம். காய் வாங்குவதற்கு அதிக அளவில் கூட்டம் கூடுகிறது. காய்கறி வாங்குகிறோமோ இல்லையோ கொரோனாவை வீட்டிற்கு வாங்கி செல்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் உடலும் நல்லா இருக்கும், மாவட்டமும் நன்றாக இருக்கும் என்றார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிக்குமார், மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி தலைமை பொறியாளர் அமுதவள்ளி கோட்ட உதவி ஆணையர் வினோத் மற்றும் சித்த மருத்துவர்கள், செவிலியர்கள், மாநகராட்சி பணியாளர்கள்ஆகியோர் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர். நலம் நாட கொரோனா தடுக்கும் சித்தா மருந்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறப்பட்டது பாரம்பரிய மருத்துவத்துடன் இணைந்து அனைவரும் கொரோனா நோயிலிருந்து விடுபட பாடுபடுவோம். அரசு வழிகாட்டுதலை பின்பற்றுவோம். என்று அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...













