Thursday, October 16, 2014
அதிகளவு தண்ணீர் குடிப்பதால் உடல் எடை குறையும் என்பது உண்மையா? எப்படி? 80 கிலோ எடையுள்ள ஒருவர், ஒரு நாளைக்கு 4 முதல் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிறார்கள். அப்படிக் குடித்தால் அந்தளவு அடிக்கடி சிறுநீரும் வெளியேறுமே... இதனால் சிறுநீரகம் பாதிக்கப் படாதா? அதிகளவு தண்ணீர் குடிப்பதால் எடை குறைந்து விடாது. நிறைய தண்ணீரும் குடித்துக் கொண்டு, கூடவே அரிசி உணவைக் குறைத்து, காய்கறி, பழங்களை அதிகம் எடுத்துக்கொண்டு, கலோரி குறைவான உணவு களை சாப்பிட்டு வந்தால் எடை குறையலாம். பொதுவாக வெயில் காலத்தில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.
வியர்வை வழியே உடலின் நீர் வெளியேறுவதால், அதை ஈடுகட்ட, அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். வெயில் இல்லாத மற்ற நாள்களில், வியர்வை அதிகமிருக்காது. உடலின் தண்ணீர் சத்திலும் இழப்பிருக்காது. அதனால் அதிக தண்ணீர் குடித்தால், சிறுநீரின் அளவும் அதிகரிக்கும். அதிக தண்ணீர் குடிப்பது என்பது, ஆரோக்கியமான சிறுநீரகங்கள் மற்றும் இதயம் கொண்டவர்களுக்கு ஓ.கே. ஒன்றும் செய்யாது.
சிறுநீரகம் பழுதடைந்திருந்தாலோ, சுவாசப் பிரச்னை இருந்தாலோ, கல்லீரல் அல்லது இதயக்கோளாறு இருந்தாலோ, அதிகளவு தண்ணீரானது உடலுக்குள்ளேயே தங்கி, வெளியேற்ற முடியாமல் போகும். அந்த நிலையை ‘ஃப்ளூயிட் ஓவர் லோடு’ என்கிறோம். சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் நாளொன்றுக்கு ஒன்றரை முதல் 2 லிட்டர் வரையிலும், இதயக் கோளாறு இருப்பவர்கள் 1 லிட்டரும் மட்டுமே தண்ணீர் குடிக்க அனுமதிக்கப்படுவார்கள். எனவே அவர்கள் மட்டும் குடிக்கிற தண்ணீரின் அளவில் கவனம் செலுத்தினால் போதும்.
வியர்வை வழியே உடலின் நீர் வெளியேறுவதால், அதை ஈடுகட்ட, அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். வெயில் இல்லாத மற்ற நாள்களில், வியர்வை அதிகமிருக்காது. உடலின் தண்ணீர் சத்திலும் இழப்பிருக்காது. அதனால் அதிக தண்ணீர் குடித்தால், சிறுநீரின் அளவும் அதிகரிக்கும். அதிக தண்ணீர் குடிப்பது என்பது, ஆரோக்கியமான சிறுநீரகங்கள் மற்றும் இதயம் கொண்டவர்களுக்கு ஓ.கே. ஒன்றும் செய்யாது.
சிறுநீரகம் பழுதடைந்திருந்தாலோ, சுவாசப் பிரச்னை இருந்தாலோ, கல்லீரல் அல்லது இதயக்கோளாறு இருந்தாலோ, அதிகளவு தண்ணீரானது உடலுக்குள்ளேயே தங்கி, வெளியேற்ற முடியாமல் போகும். அந்த நிலையை ‘ஃப்ளூயிட் ஓவர் லோடு’ என்கிறோம். சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் நாளொன்றுக்கு ஒன்றரை முதல் 2 லிட்டர் வரையிலும், இதயக் கோளாறு இருப்பவர்கள் 1 லிட்டரும் மட்டுமே தண்ணீர் குடிக்க அனுமதிக்கப்படுவார்கள். எனவே அவர்கள் மட்டும் குடிக்கிற தண்ணீரின் அளவில் கவனம் செலுத்தினால் போதும்.
நரைய்னியா கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் மாணவர்களிடம், மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். அப்போது 7-ம் வகுப்பு படித்துவந்த 13 வயது மாணவி 6 மாதம் கர்ப்பமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து மருத்துவ குழுவினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, போலீசார் பாதிக்கப்பட்ட மாணவியை உடனடியாக அருகே இருந்த சர்தார் மருத்துவமனைக்கு கூடுதல் பரிசோதனைக்கு அழைத்து சென்றனர் என்று மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அனில் குமார் சிங் தெரிவித்துள்ளார். இதற்கிடையே மாணவியின் பெற்றோர்கள் அளித்துள்ள தகவலின்படி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக ராம் பிரசாத் என்பவருக்கு எதிராக பெண்கள் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் தெரிக்கப்பட்டுள்ள நபர் கிராமத்தில் கடை ஒன்றை நடத்தி வருகிறார் என்றும் அவர் சிறுமியை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாநகரத்தில் தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை பயன்படுத்தி பொதுமக்களிடம் செயின் பறிப்பு, செல்போன் திருட்டு, ஜேப்படி போன்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், பழைய குற்றவாளிகளை பிடிக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சேஷசாயி உத்தரவின் பேரில் துணை கமிஷனர் திருநாவுக்கரசு மேற்பார்வையில் திருப்பூர் வடக்கு உதவி கமிஷனர் ஜெயச்சந்திரன் தலைமையில் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்தது.
கடந்த 4 நாட்களில் பொதுமக்களிடம் செல்போன் திருட்டு, ஜேப்படி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக சுரேஷ், பாண்டியராஜன், ரவி, ராஜா, கலீல்ரகுமான், அக்கீம் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
திருப்பூர் சாமுண்டிபுரத்தைச் சேர்ந்தவர் சிவகாமி. இவருடைய கணவர் சாமிநாதன். சிவகாமியின் தோழியான திருச்சி லால்குடியைச் சேர்ந்த பரமேஸ்வரி(வயது 50) மற்றும் கருணாகரன், தங்கவேல் ஆகிய 5 பேரும் சேர்ந்து திருப்பூர் பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் வங்கியில் குறைந்த வட்டியில் கடன் வாங்கி கொடுப்பதாக கூறி பணம் வசூலித்து வந்ததாக தெரிகிறது.
கடந்த 2012–ம் ஆண்டில் பல மகளிர் சுய உதவி குழுக்களிடம் வங்கியில் குறைந்த வட்டியில் கடன் வாங்கிக் கொடுப்பதாக கூறி கமிஷன் தொகை பெற்றதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் திருச்சி லால்குடியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(34) உள்பட 25 பேர் தங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் பெறுவதற்காக பரமேஸ்வரி மூலமாக சிவகாமிக்கு ரூ.25 லட்சம் வரை கமிஷன் தொகை கொடுத்ததாக தெரிகிறது.
ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் கோபாலகிருஷ்ணன் தரப்பினருக்கு சிவகாமி, குறைந்தவட்டியில் வங்கிக்கடன் பெற்று கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் அவர்கள் கொடுத்த ரூ.25 லட்சம் கமிஷனையும் சிவகாமி திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த கோபாலகிஷ்ணன் உள்ளிட்ட 25 பேர் திருப்பூர் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து சிவகாமி, கருணாகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சாமிநாதன் முன்ஜாமீன் பெற்றார். தலைமறைவாக இருந்த பரமேஸ்வரி, தங்கவேல் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சேஷசாயி உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் குணசேகரன் மேற்பார்வையில் மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையில் போலீசார் திருச்சி சென்று பரமேஸ்வரியை நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான தங்கவேலை தேடி வருகிறார்கள்.
தாராபுரத்தில் 10–க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு சென்று வர காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவ–மாணவிகளை ஏற்றிச்செல்ல ஆட்டோக்களை பயன்படுத்துகிறார்கள். அப்போது அதிக எண்ணிக்கையிலான மாணவ–மாணவிகளை ஆட்டோவில் ஏற்றிச்செல்வதாகவும், ஒரு ஆட்டோவில் 15 முதல் 20 மாணவ–மாணவிகள் வரை அடைத்து வைத்து செல்வதாகவும், இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும், எனவே முன்னரே தடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சப்–இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் ஆகியோர் பள்ளி விடும் நேரம் சர்ச் சாலையில் திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோக்களில் பள்ளி குழந்தைகள் முண்டியடித்து நெருக்கடியாக ஏற்றி செல்வது தெரியவந்தது. மேலும் பல ஆட்டோக்களுக்கு உரிமம் இல்லை என்றும், ஓட்டுனர் உரிமம் இல்லாத டிரைவர்களும் ஆட்டோவை ஓட்டியது தெரியவந்த
இதையடுத்து அதிக எண்ணிக்கையிலான பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகையை கட்டி ஆட்டோ டிரைவர்களை போக்குவரத்து போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெறவேண்டி காங்கயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் நேற்று முன்தினம் இரவு காங்கயம் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ் தங்க தேர் இழுத்தார். திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஒன்றியம் ஆலாம்பாடி அ.தி.மு.க. ஊராட்சி கழகத்தின் சார்பில் சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டன.தொடர்ந்து கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டகவுன்சிலர் டி.ஆர்.கோவிந்தசாமி, மாவட்ட விவசாயபிரிவு தலைவர் கிஷோர்குமார், காங்கயம் நகர துணை வி.எஸ்.நடராஜ், ஊராட்சி செயலாளர் என்.நடராஜ், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் கே.தங்கமுத்து, ஏ.பி.துரைசாமி,பாலு,டி.எஸ்.தமிழரசு, என் மனோகரன் மற்றும் சிவன்மலை முத்துசாமி,மகளிர் அணியின் லட்சுமி சோமசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாநகர் மாவட்டம், அண்ணா தி.மு.க.சார்பில், மாவட்ட கழக செயலாளரும்,வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் திருமுருகன்பூண்டி திருமுருகநாதசாமி திருக்கோவிலில் கட்சியில் பொதுசெயலாளார் ஜெயலலிதா நீதிமன்ற தீர்ப்பில் இருந்து மீண்டு வந்து தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டி சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது..இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், திருப்பூர் துணை மேயருமான சு.குணசேகரன் வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், மாவட்ட பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன், திருமுருகன்பூண்டி பேரூராட்சி தலைவர் பழனிசாமி,துணை தலைவர் விஸ்வநாதன், முன்னாள் தலைவர் லதா சேகர், அவினாசி ஒன்றிய செயலாளர் மு.சுப்பிரமணியம், தொகுதி செயலாளர் சேவூர் வேலுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி திருப்பூர் மாநகர் மாவட்டம் முழுவதும் 19-வது நாளாக தொடர்ந்து யாகங்கள், பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் ஆகியவற்றை அண்ணா தி.மு.க.வினர் நடத்தி வருகின்றனர். இதில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், மேயர் அ.விசாலாட்சி,துணை மேயர் சு.குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அண்ணா தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி, திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,சார்பில் மா நகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழிகாட்டுதலின்பேரில், கோர்ட் ரோட்டில் உள்ள டி.இ.எல்.சி.தேவாலயத்தில் வடக்கு தொகுதி செயலாளரும், 2வது மண்டல தலைவருமான ஜெ.ஆர்.ஜான் தலைமையில், மகளிர் அணி மாநில துணை செயலாளரும்,மேயருமான அ.விசாலாட்சி,மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பேரவை செயலாளரும், முதலாவது மண்டலத் தலைவருமான வி.ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் கண்ணப்பன் எம்.சி., அன்பகம் திருப்பதி, மார்க்கெட் நா.சக்திவேல், வழக்கறிஞர் சுப்பிரமணியம், ஸ்டீபன் ராஜ், சதீஷ், 4வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், வளர்மதி கரு ணாகரன், சாகுல்ஹமீது, தாமோதரன், ஒன்றிய நிர்வாகிகள் பட்டுலிங்கம், பூளுவபட்டி பாலு, ஒன்றிய குழுத்தலைவர் சாமிநாதன், வேலம்பாளையம் அய்யாசாமி, வி.கே.பி.மணி,ஏ.கண்ணப்பன், அட் லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிச்சாமி, கலைமகள் கோபால்சாமி எம்.சி, டி.பார்த்திபன், ஹரிஹரசுதன், கண்ணபிரான், ரகுநாதன்,சடையப்பன், ரத்தினகுமார், பி.ராஜ்குமார், பெரிச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி, ரஞ்சித்ரத்தினம், கேபிள் பாலு, வினோத்குமார்,முபாரக், கு ணசேகர், விஸ்வநாதன், கவுன்சிலர்கள் முருகசாமி, செல்வம், கணேஷ், வசந்தாமணி, பிரியா சக்திவேல், பாலசுப்பிரமணியம், சின்னசாமி, ஈஸ்வரன், கனகராஜ், அமுதா வேலுமணி, பேபி தர்மலிங்கம், மற்றும் பாசறை நிர்வாகிகள் யுவராஜ் சரவணன், வி.எம்.கோகுல், பி.லோகநாதன், பரமராஜன், சுரேந்தர், அன்பரசன், நீதிராஜன் , மயில்ராஜ், ஆண்டவர் பழனிசாமி, பங்க் என்.ரமேஷ் ( எ) பழனிசாமி, பேபி பழனிசாமி, என்.சரவணன், கிளை கழக செயலாளர்கள் விவேகானந்தன், ராஜேந்திரன், மூர்த்தி, தலைமை கழக பேச்சாளர்கள் முகவை கண்ணன், டி.ஏ.பாலகிருஷ்ணன், தீக்கனல் விஜயகுமார், எம்.ஜி.குணசேகரன், மதுரபாரதி உள்ளிட்டவர்களும் , பாஸ் என்கிற பாஸ்கரன், வே.சரவணன், பஸ் ஸ்டாண்ட் சந்திரன், வாசுதேவன், சீனிவாசன், முன்னால் கவுன்சிலர் சு.கேசவன், ருக்குமணி, ராஜகோபால், மகளிர் அணி நிர்வாகிகள் கோமதி சம்பத், சுந்தராம்பாள் கேசவன், மும்தாஜ்,இந்திராணி உள் பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...








