Wednesday, December 10, 2014
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த சேவூரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 25. விசைத்தறி தொழிலாளி. இவர் 13 வயதான பள்ளி மாணவியுடன் பழகினார். 2010ல் அவரை திருச்சிக்கு கடத்தி சென்று, திருமணம் செய்து கொண்டார். அவரது நண்பர் வீட்டில் இருவரும் தங்கினர்.சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அவிநாசி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடினர். இரண்டு மாதங்களுக்கு பின், இருவரும் திருச்சியில் இருப்பது தெரிந்து, அங்கு சென்று அழைத்து வந்தனர். சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. விசாரைணக்குப் பின் அவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கு திருப்பூர் மகிளா கோர்ட்டில், நீதிபதி வசந்த லீலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல், பரிமளா ஆஜரானார். விசாரணை முடிவில், சதீஷ்குமாருக்கு, நான்காண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு பேசினார்.
திருப்பூர் காட்டன் சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவது குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நேற்று நடந்தது. காட்டன் சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் ஆறுமுகம் வரவேற்றார். ரோட்டரி உதவி கவர்னர் முத்துசாமி, திட்ட இயக்குனர் முரளிக்குமார் முன்னிலை வகித்தனர்.
மாநகர போலீஸ் துணை கமிஷனர் பேசியதாவது:வாழ்க்கையில் நல்ல வாய்ப்புகளை நழுவ விடுவோர், முட்டாள்; சரியாக பயன்படுத்தி கொள்பவர்கள் புத்திசாலிகள். வாய்ப்புகளை உருவாக்கி கொள்பவர்கள், சாதனையாளர்கள். லட்சிய கனவுகளே, சாதனைக்கு அடித்தளமாகிறது. ஒருவர் தனது லட்சியங்களை கூறும்போது விமர்சனம் எழும். அதுவே, லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும். விமர்சனங்களே லட்சிய வாதிகளை உருவாக்குகிறது.கடந்த 2010ம் ஆண்டில், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 28 பேர் மாற்றுத்திறனாளிகள். சாதிக்கும் மன உறுதி இருந்தால், எல்லா கனவுகளும் வாழ்க்கையில் நிஜமாகும். உடல் ஆரோக்கி யத்தில், முழு கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியம் உடலில் இருந்தால், எண்ணங்களும் ஆரோக்கியமாக இருக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.கோவையை சேர்ந்த சிபி ஐ.ஏ.எஸ்., அகாடமி இயக்குனர் அரங்ககோபால் பேசினார். நிகழ்ச்சியில் மாணவியர், பேராசி ரியர்கள் திரளாக பங்கேற்றனர். காட்டன் சிட்டி ரோட்டரி கிளப் செயலாளர் ரத்னசாமி நன்றி கூறினார்.
திருப்பூர் : "ஆதார் அட்டை பெறுவதற்கான முகாம் இன்று முதல் செயல்படும்; மக்கள் குழப்பமின்றி, அந்தந்த பகுதிகளில் பதிவு செய்யலாம்,' என, மாநகராட்சி அறிவித்துள்ளது.
மாநகராட்சி கமிஷனர் வெளியிட்டுள்ள அறிக்கை:ஆதார் அட்டை பதிவில் விடுபட்டோருக்கு, இன்று முதல் (டிச., 10) பதிவு மையம் செயல்பட உள்ளது. ஒன்று முதல் 20 வரையிலான வார்டு மக்கள், 15 வேலம்பாளையம் மண்டல அலுவலகத்தையும்; 21 முதல் 40வது வார்டு வரை, நல்லூர் மண்டல அலுவலகத்தையும்; 41 முதல் 60 வரை மாநகராட்சி அலுவலகத்தையும் அணுக வேண்டும்.மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டு வைத்திருப்போர், உரிய மையத்துக்கு சென்று, தங்களது தகவல் கம்ப்யூட்டரில் பதிவாகி உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும்; விவரம் இடம் பெற்றிருந்தால், ஆதார் அட்டைக்கான டோக்கன் கொடுக்கப்படும்.டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாளான்று, குடும்பத்துடன் போட்டோ எடுப்பதற்கு, ஆதார் அட்டை மையத்துக்கு வர வேண்டும். ஆதார் அட்டைக்கு புதியதாக பதிவு செய்வதற்கான விண்ணப்பம், ஜன., 20க்கு பிறகே வழங்கப்படும். ஏற்கனவே ஆதார் அட்டைக்கு போட்டோ எடுத்து கார்டு பெறாதவர்கள், ஆதார் அட்டைக்கான சிலிப்பை பயன்படுத்தி, தீதீதீ.தடிஞீச்டி.ஞ்ணிதி.டிண என்ற இணையதளத்தில், கார்டை பதிவிறக்கம் செய்யலாம்.
போட்டோ ஏற்கனவே எடுத்திருந்தும், கைவிரல் ரேகை உள்ள சிலிப் கொடுக்கப்படாமல் இருந்தால், சம்மந்தப்பட்ட மையங்களுக்கு, வரும் ஜன., 20க்கு பின்னர் சென்று, ஆதார் அட்டையின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். ஏற்கனவே போட்டோ எடுத்து, ஆன் லைனில் சரிபார்க்கும் போது விவரங்கள் இல்லாமல் தள்ளுபடி செய்து இருந்தால், மீண்டும் பழைய சிலிப் வைத்தே புகைப்படம் எடுத்து கொள்ளலாம். ஆதார் அட்டை பெற்று, அதில் முகவரியை மாற்ற வேண்டியிருந்தால் தீதீதீ.தடிஞீச்டி.ஞ்ணிதி.டிண என்ற இணையதளத்தில் முகவரியை மாற்றி கொள்ளலாம்.எனவே, மக்கள் குழப்பமின்றி தங்கள் பகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மையங்களுக்கு சென்று, விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
திருப்பூர் செட்டிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி இடத்தில் தெற்கு வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் கட்டுவதை கைவிட்டு, மாற்று இடத்தில் கட்ட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றியக்குழுக் கூட்டம் என்.சுப்பிரமணியம் தலைமையில் திங்களன்று நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.உண்ணிகிருஷ்ணன், என்.கோபாலகிருஷ்ணன், ஒன்றியக்குழுச் செயலாளர் சி.மூர்த்தி உள்பட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம், தாராபுரம் சாலை கே.செட்டிபாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி இடத்தை கையகப்படுத்தி உள்ளது. தொடர்ந்து விரிவடைந்து வரும் திருப்பூர் மாநகரின் தெற்கு பகுதியில் இப்பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. குறிப்பாக ஏழை, எளிய, சாமானிய வீட்டு மாணாக்கர்கள் தான் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். தற்போது இந்த இடத்தை வட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு தேர்வு செய்திருப்பதால் பள்ளிக்கு உரிய விளையாட்டு மைதானம் பறிபோவதுடன், எதிர்காலத்தில் இப்பள்ளியின் விரிவாக்கமும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த வட்டாரத்து மாணவர்கள் தொடர்ந்து உயர்நிலை, மேல்நிலை வகுப்புகள் படிப்பதற்கு இங்கிருந்து பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்பூர் நகரின் மையப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கோ அல்லது பெருந்தொழுவு, கொடுவாய் அரசுப் பள்ளிகளுக்கோ போக வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, இந்த பள்ளிக்கூடம் இருக்கக்கூடிய அரசு புறம்போக்கு இடம், கடந்த காலத்தில் கேட்பாரற்று கிடந்தது. எனவே தனியார் சிலர் இந்த இடத்தை ஆக்கிரமிக்க முயற்சித்தனர். இதை எதிர்த்து இந்த பகுதி பொது மக்கள் உறுதியாக போராடியதன் விளைவாக தனியார் ஆக்கிரமிப்பு தடுத்து நிறுத்தப்பட்டு பள்ளிக்கூடம் உருவாக்கப்பட்டது. எனவே பொது மக்கள் மீட்டுக் கொடுத்த இடத்தை அரசு நிர்வாகம் கையகப்படுத்துவது நியாயமானதல்ல. அரசு நிர்வாகம் இப்பள்ளியின் சீரிய செயல்பாட்டை தடுப்பதன் மூலம் அனைவருக்கும் கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி குழந்தைகளுக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் அருகமைப் பள்ளிகள் இருக்க வேண்டும் என்ற விதிமுறையையும் காற்றில் பறக்கவிடுகிறது.
எனவே திருப்பூர் மாவட்ட நிர்வாகம் கே.செட்டிபாளையம் அரசுப் பள்ளி இடத்தில் வட்டாட்சியர் அலுவலகம் கட்டும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன், வேறு பொருத்தமான இடத்தை தேர்வு செய்து தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தைக் கட்ட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியக்குழு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் இலங்கை அதிபர் ராஜபக்ஷே வருகை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தமிழக பத்திரிகையாளர்கள் மீது ஆந்திர காவல் துறையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து திருப்பூரில் பத்திரிகையாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் பத்திரிகையாளர் நலச் சங்கத்தின் சார்பில் புதன்கிழமை மாநகராட்சி அலுவலகம் காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தலைவர் ஆர்.வி.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆந்திர காவல் துறையினரின் ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டித்தும், பத்திரிகையாளர்களை தாக்கிய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும், பத்திரிகையாளர்களின் சுதந்திரமான செயல்பாட்டுக்கு பாதுகாப்பு வழங்கவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. செயலாளர் வே.தூயவன், விடுதலை மணிகண்டன் ஆகியோர் உரையாற்றினர்.
திரளான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆந்திர போலீசாரால் தமிழக செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.
இத்தாக்குதலுக்கு ஆந்திர முதல்வரும், மத்திய அரசும் மன்னிப்பு கேட்க வேண்டும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.
ஆந்திர மாநிலம் திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று வந்துள்ளார். இலங்கையில் நடந்த இன அழிப்பு போரில் லட்சக்கணக்காண அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவின் வருகைக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கண்டனம் தெரிவித்து போராட்டங்களை நடத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வந்த நிலையிலும் எதையும் பொருட்படுத்தாமல் ராஜபக்சேவுக்கு ராஜ மரியாதை வழங்கப்பட்டது.
இந்த இரு நிகழ்வுகளையும் விருப்பு, வெறுப்பின்றி பதிவு செய்வது பத்திரிகையாளர்களின் கடமையாகும். அந்த வகையில் திருப்பதிக்கு வந்த ராஜபக்சேவை படம்பிடிக்க முயன்ற தமிழக செய்தியாளர்கள் மீது ஆந்திரா போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் 20க்கும் மேற்பட்ட தமிழக செய்தியாளர்களை சட்டவிரோதமாக கைது செய்து, அவர்களை ஆந்திர போலீசார் வனப்பகுதியில் இறக்கி விட்டுள்ளனர். மேலும் அவர்கள். தமிழக செய்தியாளர்களின் கேமரா உள்ளிட்ட பொருட்களையும் திருமலை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் கோவிலில் தரிசனம் முடிந்து வெளியே வந்த ராஜபக்சேவுக்கு கறுப்புக் கொடி காட்டிய ம.தி.மு.க.வினர் மீதும் ஆந்திர போலீசார் தாக்குதல் நடத்தினர். அப்போது, சம்பவ இடத்தில் இருந்த தமிழக செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் மீது ஆந்திர போலீசார் மீண்டும் தாக்குதல் நடத்தி, அவர்கள் வைத்திருந்த கேமரா உள்ளிட்ட உபகரணங்களையும் உடைத்துள்ளனர்.
இப்படியான அராஜக போக்கை கடைபிடித்த ஆந்திர காவல்துறையின் செயல் பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் இந்த ஜனநாயக விரோத செயல். இவர்களின் அராஜக நடவடிக்கையை கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஆந்திர போலீசாரின் இந்த சட்டவிரோதமான, பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் செயலை திருச்சிராப்பள்ளி மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் அனைவர் மீதும் ஆந்திர முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, தமிழக பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலுக்கு வருத்தமும், மன்னிப்பும் கோர வேண்டும்.
இந்த விசயத்தில் மத்திய அரசு தலையிட்டு பத்திரிக்கை சுதந்திரத்தை காப்பாற்ற வேண்டும். மேலும் தமிழக செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக அரசு தனது அரசு ரீதியான கண்டனத்தை ஆந்திர அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது. மேலும் உலக மனித உரிமை தினமான இன்று திருப்பதியில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய ஆந்திரா போலிஸ்சாரை கண்டித்து இன்று மாலை 4மணியளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு திருச்சி மாவட்டத்திலுள்ள பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

உரிமைகளை நிலைநாட்ட உறவுகளே வாரீர்…ஊடக சுதந்திரம் இந்த தேசத்தின் உயிர் நாடி… அதை காத்திட கரம் கோர்ப்போம் வாரீர்…
செயலாளர்
( திருச்சி மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம்)
On Wednesday, December 10, 2014 by முதல்வர் தளபதி in Tiruchchirappalli
மாவட்ட ஆட்சியரகத்தில் மனிதஉரிமைகள் குறித்து விழிப்புணர்வு
உறுதிமொழி
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஜெயஸ்ரீ முரளிதரன் அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மணித உரிமைகள் நாள் இன்று 10. 12.2014 நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது இந்த நாளையொட்டி மணித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அனைத்துத்துறை அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண் ட னர் இந்த உறுதிமொழி நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. க . தர்ப்பகராஜ் , உதவி ஆட்சியர் ( பயிற்சி ) திரு .ச .ப .அமர்த் தனித்துணை ஆட்சியர் சிறப்பு த் திட்டங்கள் செயலாக்கம் ) ,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் வெ .இந்திராணி ,, ( கணக்குகள் ),செல்வி ஜெயஸ்ரீ ( பொது ) துரைராஜன் , பேரூர் ஆட்சிகளின் உதவி இயக்குனர் மை .மார்கரேட் சுசீலா மற்றும் வட்டசியர்கள் மாவட்ட ஆட்சியரக அலுவலக உழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துகொன்டனர்

Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...