Saturday, February 06, 2016

On Saturday, February 06, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிருக்கு சிறு வணிகக் கடன் தலா 5 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் குழுவினரும் இந்த கடனுக்கு விண்ணப்பம் அளித்தனர். கடந்த 30 ந்தேதி இதற்கு கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு அனைத்து ஒன்றியத்தில் உள்ள யூனியன் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலர்கள் மூலம் விண்ணப்பங்கள் வாங்கப்பட்டன. ஆனால் மிக அதிகமானவர்களுக்கு கடன் வழங்கும் தகவல் கிடைக்கவில்லை. எனவே அவர்களுக்கும் நாள்களை நீடிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

இதற்கிடையில் இந்த விண்ணப்பம் நேற்று 5ந்தேதி வரை கொடுக்கலாம் என அறிவிப்பு வந்தது. ஆனால் இந்த விண்ணப்ப மனுவை யாரிடம் கொடுக்க எங்கே வாங்குகிறார்கள் என்பது தெரியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். சிலர் தூத்துகுடிக்கு நேரில் சென்றால் கடன் கிடைக்கும் என தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு படையெடுத்தனர். அங்கும் சரியான பதில் இல்லை.

இது குறித்து செய்துங்கநல்லூர் மகளிர் குழுவை சேர்ந்த நளினி கூறும்போது: சிறு வணிகக் கடன் அளிக்கவேண்டும் என்றால் அந்த தொழில் செய்பவர்களிடம் விண்ணப்பம் வாங்கி இருக்கவேண்டும். மேலும் ஆண்கள் பெண்கள் எல்லோரும் சிறுதொழில் செய்கிறார்கள். ஆனால் மகளிர் குழுவில் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த கடன் என்று கூறியதால் குழுவில் இருப்பவர்களை தவிர வேறு யாரும் கடன் வாங்க விண்ணப்பம் கொடுக்கவில்லை. மேலும் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள வங்கிக்கு சென்று கோட்டால், அதற்கு வேறு விண்ணப்பம், இதற்கு வேறு விண்ணப்பம் என்று கூறுகிறார். 

இதுபோல குழப்பத்தினை தவிர்க்க மாவட்ட ஆட்சி தலைவர் இந்த கடனுக்கு விண்ணப்பம் வழங்கும் தேதியை நீடித்து, அதற்கு எப்படி எங்கே விண்ணப்பம் செய்யவேண்டும் என்று முறையாக தெளிவாக தெரிவிக்கவேண்டும். இல்லையென்றால் கடன் காலம் முடிந்துவிட்டது. இனி யாரும் யாரை நம்பியும் விண்ணப்பம் அளிக்க வேண்டாம் என்றாவது தகவல் தெரிவிக்க வேண்டும். என்று அவர் கூறினார்.

தேர்தல் களம் சூடுபிடித்து வரும் காரணத்தினால் சிறுவணிகக் கடன் உதவி திட்டத்தில் வழங்கப்படும். அதன் பின் பணம் எல்லாம் மானியமாக அறிவித்து விடுவார்கள். எனவே இந்த திட்டத்தில் எப்படியாவது இடம்பெற்று விடவேண்டும் என்று பொதுமக்கள் மும்முரமாக அழைகிறார்கள். அவர்களை ஸ்ரீவைகுண்டம் போங்கள், தூத்துக்குடி போங்கள் என அலைகழிக்க வைக்கிறார்கள். எனவே முறையான அறிவிப்பை ஆட்சிதலைவர் அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகிறார்கள்.
On Saturday, February 06, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடியில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்திருந்த வாலிபர் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடியில் முதல் மற்றும் 2வது ரயில்வே கேட் அருகே  நேற்றிரவு 8 மணியளவில் வாலிபர் ஒருவர் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்திருந்தாராம். அப்போது தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்வந்து கொண்டிருந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் கூச்சலிட்டும் அவர் எழுந்திருக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் ரயில் அந்த வாலிபர் மீது மோதியது. 

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். ரயில் அடிப்பட்டு இந்த நபர், அண்ணா நகர் 3வது தெருவைச் சேர்ந்த நாகராஜன் மகன் சுடலைமணி (20) என்பதும், ஆட்டோ டிரைவரான இவர் 2வது கேட் பகுதியில் ஆட்டோ ஓட்டிவந்துள்ளார். அவர் தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது குடிபோதையில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தாரா? என ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Friday, February 05, 2016

On Friday, February 05, 2016 by Tamilnewstv in    
திருச்சி YWCA மெட்ரிக்குலேசன் 49 ஆண்டு விழா நடைபெற்றது சிறப்பு விருந்தினராக டாக்டர் .ராஜேந்திரன் கலந்து கொண்டார் மாணவ மாணவி களு க்கு முத்துமாரி ராஜேந்திரன் பரிசு வழங்கினார்.
On Friday, February 05, 2016 by Tamilnewstv   

On Friday, February 05, 2016 by Unknown in , ,    
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வாக்கு பதிவின்போது மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து வாக்குபதிவு எந்திரங்கள் கொண்டு வரும் பணி தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 1,521 வாக்கு சாவடிகள் உள்ளன. இதை கருத்தில் கொண்டு வாக்கு பதிவு எந்திரங்கள் தேவை குறித்து மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதன் அடிப்படையில் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட வாக்கு பதிவு எந்திரங்கள் தூத்துக்குடிக்கு வர உள்ளதாக கலெக்டர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முதல் கட்டமாக குஜராத் மாநிலத்தில் 5 மாவட்டங்களில் பயன்படுத்தப்பட்ட 2,300 மின்னணு வாக்கு பதிவு எந்திரங்களும், 2,300 கட்டுப்பாட்டு கருவிகளும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நேற்று தூத்துக்குடிக்கு கொண்டுவரப்பட்டன.
கன்டெய்னர் லாரிகளில் கொண்டுவரப்பட்ட எந்திரங்களை தாசில்தார் சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் சோதனை செய்து பெற்றுக்கொண்டனர்.
பின்னர் அனைத்து எந்திரங்களும் தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் தனி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. வாக்கு பதிவு எந்திரங்களை கலெக்டர் ரவிகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள யூனியன் அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
On Friday, February 05, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடி மாவட்டத்தை முழு சுகாதார மாவட்டமாக மாற்றிடும் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நாளை (பிப்ரவரி 6ம்) நடக்கிறது. 

இது தொடர்பாக ஆட்சியர் ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் முழு சுகாதார மாவட்டத்தை நோக்கி... பின்வரும் 8 தாலுகாவில் பிப்ரவரி 6ம் தேதி சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது.

மாரத்தான் ஓட்டம் துவங்கும் இடம்

1. தூத்துக்குடி தாலுகா:  மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோரம்பள்ளம்.

2. திருவைகுண்டம் தாலுகா:  கே.ஜி.எஸ். மேல்நிலைப்பள்ளி, திருவைகுண்டம்

3. திருச்செந்தூர் தாலுகா: செந்தில் ஆண்டவர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்செந்தூர்

4. சாத்தான்குளம் தாலுகா: T.D.T.A.R.M.P. மேல்நிலைப்பள்ளி, சாத்தான்குளம்

5. கோவில்பட்டி தாலுகா: வ.உ.சி.மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி

6. ஓட்டப்பிடாரம் தாலுகா: மெக்காய் ரூரல் மேல்நிலைப்பள்ளி, ஓட்டப்பிடாரம்

7. விளாத்திகுளம் தாலுகா: அரசு மேல்நிலைப்பள்ளி, விளாத்திகுளம்

8. புதூர் தாலுகா:  எட்டையாபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி, எட்டையாபுரம்

இப்போட்டியில் திரளான மாணவ மாணவிகள் பங்கேற்று தூத்துக்குடி மாவட்டத்தை முழு சுகாதார மாவட்டமாக மாற்றிடும் விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
On Friday, February 05, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடியில் நிதி நிறுவன அதிபரிடம் ரூ.4¾ லட்சம் மோசடி செய்ததாக கணவன்-மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனியை சேர்ந்தவர் ஜெயசூரியா. அவருடைய மகன் அசோக் பாபு (53). நிதி நிறுவன அதிபர். இவரிடம், மேலசண்முகபுரம் வண்ணார் 2-வது தெருவை சேர்ந்த பால கணேசன் (40) என்பவர் ஆடிட்டராக உள்ளார். அசோக் பாபு கடந்த 5 வருடமாக வருமான வரி செலுத்தி வருகிறார்.
 
இந்த நிலையில், கடந்த 2014-ல் வருமான வரி செலுத்துவதற்காக, பால கணேசனிடம் ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்தை அசோக்பாபு கொடுத்துள்ளார். ஆனால் பாலகணேசன் அந்த பணத்தை செலுத்தாமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அசோக் பாபு தூத்துக்குடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் ஆடிட்டர் பால கணேசன் மற்றும் அவருடைய மனைவி ரம்யா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Thursday, February 04, 2016

On Thursday, February 04, 2016 by Tamilnewstv   
திருச்சி ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் ரோஸ் கார்டன் புற்றுநோய் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய ஷர்ஷமித்ரா புற்றுநோய் வினாடி வினா விடை பரிசளிப்பு விழாவும் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு (பட்டிமன்றம் திருச்சி பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி கலையரங்கத்தில் திருச்சி கி ஆபெ வில்வ நாதம் அரசு மருத்துவ கல்லூரி டீன் முரளிதரன் தாலைமையில் நடைபெற்றது.  பின்னர் விழா போட்டிகளில் வெற்றி மாணவர்களுக்கு பரிசு V தக்கங்கள் சான்றிதல் வழங்கப்பட்டது.
On Thursday, February 04, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடியில் காமராஜ் கல்லூரியின் பொன்விழா கொண்டாட்டத்தையொட்டி கடந்த ஜனவரி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. இதன் ஒருபகுதியாக இன்று சர்வதேச தரவரிசை சதுரங்க போட்டிகள் இன்று தொடங்கி (4ம் தேதி) 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதன் துவக்க நிகழ்ச்சி இன்று காலை காமராஜர் கல்வி அரங்கத்தில் நடைபெற்றது. பிடே (FIDE) எனப்படும் உலக சதுரங்க கழகம், அகில இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு சதுரங்க கழகத்தின் அங்கீகாரத்துடன், தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மற்றும் டீகே செஸ் மையம் இணைந்து நடத்தும் சர்வதேச தரவரிசை செஸ் போட்டியில் சுமார் 300 போட்டியாளர்கள் பங்கு பெறுகிறார்கள். 

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இருந்தும், இங்கிலாந்து நாட்டில் இருந்தும் இந்த போட்டியில் பங்கு பெறுகிறார்கள். சர்வதேச மாஸ்டர் மற்றும் அர்ஜுனா விருது பெற்ற ஆச. மேனுவல் ஆரோன் போட்டிகளை துவக்கி வைத்தார். காமராஜ் கல்லூரி முதல்வர் நாகராஜன் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் லாஜிஸ்டிக் பிரிவு தலைவர் ஹரிகரன் வாழ்த்துரை வழங்கினார். டீகே செஸ் மையத்தின் தலைவர் டாக்டர். வசீகரன் சிறப்புரை நிகழ்த்தினார்.

சர்வதேச நடுவர் அனந்தராமன், மற்றும் எப்ரேம் ஆகியோர் போட்டிகளுக்கான விதிமுறைகளை போட்டியாளர்களுக்கு விளக்கிக் கூறினார். வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசுத் தொகையாக ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயும், 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு 64 பரிசு கோப்பைகள் மற்றும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை டீகே செஸ் மையத்தின் செயலாளர் மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியை கற்பகவள்ளி, பேராசிரியர்கள் சாந்தி, ரெமோனா, சுபாஷினி, தேவராஜ், ராஜேஷ், IQAC ஒருங்கிணைப்பாளர் நாராயணசாமி, அலுவலர்கள் பொன்ரத்தினம், சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.