Tuesday, August 12, 2014

On Tuesday, August 12, 2014 by Unknown in ,
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தேர்க்குடி கிராமத்தை சேர்ந்தவர்  மதியழகன் (வயது 22) இவர் நாமக்கல் மாவட்டம் மோகனூர் காந்தமலை முருகன் கோவில் அருகில் நடன பயிற்சிப்பள்ளி நடத்தி வருகிறார். மேலும் இவர் கார் டிரைவராகவும் பணியாற்றி வருகிறார்.

மோகனூரை சேர்ந்த 19 வயது நிரம்பிய மாணவி ஒருவர் கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர், நான்காம் வகுப்பு படிக்கும் தனது மாமா பெண்ணை மதியழகனின் நடன பள்ளியில் சேர்ப்பதற்காக அழைத்து சென்று உள்ளார். அப்போது மதியழகனுக்கும், அந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் இருவரும் நெருன்கிப்பலகி உள்ளனர்.

இதனைத் தெரிந்து கொண்ட மதியழகனின் நண்பர் திருச்சி மாவட்டம் முறிசி அருகே உள்ள சிட்டிலரை கிராமத்தை சேர்ந்த பூபதி(வயது-30), அந்த மாணவியிடம் நீயும், மதியழகனும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் செல்போனில் உள்ளது. இதனை உன் வீட்டில் சொல்லாமல் இருக்க வேண்டுமானால், உன் வீட்டில் உள்ள நகைகளை எடுத்து வா... என மிரட்டி உள்ளார்.

இதனால் பயந்து போன அந்த மாணவி வீட்டில் இருந்து 25 பவுன் தங்க நகைகளை எடுத்து வந்து பூபதியிடம் கொடுத்து உள்ளார். மீண்டும் மிரட்டிய போது வைர மோதிரம், காதில் போட்டிருந்த தோடு ஆகியவற்றையும் எடுத்து கொடுத்ததாக கூறப்படுகிறது. 3–வது முறையாக மாணவியிடம் ரூ.1 லட்சம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.

நகைகளை பெற்றோருக்கு தெரியாமல் எடுத்து கொடுத்த அந்த மாணவி, பணத்தை கொடுக்க முடியாமல் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து பெற்றோர் அப்பெண்ணை அழைத்துக்கொண்டு வந்த பெற்றோர்கள் மோகனூர் போலீசில் புகார் செய்தனர்.

அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து இச்சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மதியழகன், திருச்சி மாவட்டம் முறிசி முத்தம்பட்டியை சேர்ந்த தனபால்(வயது-22), வெள்ளாளப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணகுமார்(வயது-28) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவான பூபதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இவர் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.