Wednesday, August 27, 2014

On Wednesday, August 27, 2014 by Unknown in ,    
 திருமங்கலம் அருகே உள்ள மைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ரதி என்ற மீனாட்சி (வயது30). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகின்றன. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
2 குழந்தைகளுக்கு பின், ரதி கருத்தடை அறுவை சிகிச்சை செய்தாராம். அதன்பின்னர் அவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்தது. இதனால் மனவேதனை அடைந்த அவர் தனது உடலில் மண் எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதில் உடல் கருகிய ரதி, சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து திருமங்கலம் தாலுகா போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் விமலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

0 comments: