Wednesday, August 27, 2014

On Wednesday, August 27, 2014 by Unknown in ,    
மேலூர் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
மேலூர் அருகே உள்ளது வெள்ளலூர். இங்குள்ள 1–வது வார்டில் கடந்த சில நாட்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் அவதி அடைந்தனர்.
இது குறித்து அவர்கள் அதிகாரிகளிடம் கூறினர். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் இன்று காலை ஒன்று திரண்டனர்.
பின்னர் அவர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆண்களும் கலந்து கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கீழவளவு சப்– இன்ஸ்பெக்டர் சரவணன், ஏட்டு ரமேஷ், வெள்ளலூர் ஊராட்சி மன்ற தலைவர் சின்னபொண்ணு மகாலிங்கம் ஆகியோர் மறியல் செய்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் சின்ன பொண்ணு மகாலிங்கம் கூறும்போது, சில இடங்களில் அனுமதி பெறாமல் முறைகேடாக குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இவைகள் சீர் செய்யப்பட்டு இன்னும் ஒரு வாரத்தில் சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

0 comments: