Wednesday, August 13, 2014

மதுரை மாவட்டம் திருமங்கலம் சுந்தரகுட்டன் தெருவை சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவரது மகன் சதீஷ்குமார் (வயது34). இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் விமானப்படை அதிகாரியாக வேலை பார்த்து வந்தார்.
இதனால் மனைவி கார்த்திகா மற்றும் 2 வயது மகள் ரக்சனாவுடன் அங்கேயே வசித்து வந்தார். இந்த நிலையில் திருமங்கலத்தில் அவரது சகோதரி நித்யா வீட்டு காதணி நிகழ்ச்சியில் பங்கேற்க கடந்த 28–ந்தேதி சதீஷ்குமார் வந்துள்ளார்.
விழா முடிந்ததும் 3–ந்தேதி அவர் ராஜஸ்தான் புறப்பட்டுள்ளார். அப்போது தாய் சுபத்ராவையும் அழைத்து சென்றுள்ளார். ஆனால் அவர்கள் இதுவரை ஜோத்பூர் செல்லவில்லை. 6–ம் தேதி சதீஷ்குமார் பணியில் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவர் வராததால் விமானப்படையில் இருந்து கார்த்திகாவிடம் கேட்டனர். அவர் நித்யாவிடம் பேசிய போது அவரும் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து திருமங்கலம் போலீசில் நித்யா புகார் செய்துள்ளார். தாய் மற்றும் சகோதரன் மாயமாகி விட்டதாக அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருமங்கலம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா விசாரணை நடத்தி வருகின்றார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...