Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by farook press in ,    
திருப்பூர் : தெற்கு குறுமைய அளவிலான மாணவியர் பிரிவு தடகள போட்டி, திருப்பூரில் நேற்று நடந்தது. 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு - 100 மீ., ஓட்டத்தில், யாஷிகா (செஞ்சுரி) முதலிடம் பிடித்தார். ஹரிப்பிரியா (பிரண்ட்லைன்) இரண்டாமிடம், ஸ்வேதா (எம்.என்.எம்.சி.,) மூன்றாமிடம் பெற்றனர். 200 மீ., ஓட்டத்தில், யாஷிகா (செஞ்சுரி பவுண்டேஷன்) முதலிடம், ரீத்தியா (கதிரவன்) இரண்டாமிடம், சவுந்தர்யா (வித்ய விகாசினி) மூன்றாமிடம் பிடித்தனர்.
400 மீ., ஓட்டத்தில், ஹரீஷா (செஞ்சுரி பவுண்டேஷன்) முதலிடம், வினோதினி (இடுவம்பாளையம் அரசு பள்ளி) இரண்டாமிடம், தர்ஷினி (பிரண்ட்லைன்) மூன்றாமிடம். 600 மீ., ஓட்டத்தில், ஹரீஷா (செஞ்சுரி) முதலிடம், ஸ்வேதா (எம்.என்.எம்.சி.,) இரண்டாமிடம், தர்ஷினி (பிரண்ட்லைன்) மூன்றாமிடம் பெற்றனர்.
குண்டு எறிதலில், சந்தியா (எம்.என்.எம்.சி., பள்ளி) முதலிடம், யாஷிகா (செஞ்சுரி பவுண்டேஷன்) இரண்டாமிடம், சவுமியா (விவேகானந்தா பள்ளி) மூன்றாமிடம். 4 ஙீ 100 மீ., தொடர் 
ஓட்டத்தில், எம்.என்.எம்.சி., பள்ளி முதலிடம், செஞ்சுரி பவுண்டேஷன் பள்ளி இரண்டாமிடம், பிரண்ட்லைன் அகாடமி மூன்றாமிடம் பெற்றன.
17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு - 100 மீ., ஓட்டத்தில், சிவரஞ்சனி (விவேகானந்தா பள்ளி) முதலிடம், தன்யா பாரதி (பாரத் மெட்ரிக்) இரண்டாமிடம், ஸ்வேதா (பிரண்ட்லைன்) மூன்றாமிடம் பெற்றனர். 200 மீ., ஓட்டத்தில், லோகிதா (செஞ்சுரி பவுண்டேஷன்) முதலிடம், திவ்ய பாரதி (பாரத் மெட்ரிக்) இரண்டாமிடம், நிவேதிதா (பிரண்ட்லைன்) மூன்றாமிடம்; 400 மீ., ஓட்டத்தில், லோகிதா (செஞ்சுரி) முதலிடம், தனஸ்ரீ (செஞ்சுரி பவுண்டேஷன்) இரண்டாமிடம், காயத்ரி (விவேகானந்தா) மூன்றாமிடம் பிடித்தனர்.
800 மீ., ஓட்டத்தில், கிருத்திகா (செஞ்சுரி) முதலிடம், சிவரஞ்சனி (விவேகானந்தா) இரண்டாமிடம், விமலா (எம்.என்.எம்.சி.,) மூன்றாமிடம் பெற்றனர். குண்டு எறிதலில், மதுமிதா (கொங்கு மெட்ரிக்) முதலிடம், சுஷ்மா (செயின்ட் ஜோசப்) இரண்டாமிடம், தீபிகா (பாரத் மெட்ரிக்) மூன்றாமிடம். 4 ஙீ 100 மீ., தொடர் ஓட்டத்தில், செஞ்சுரி பவுண்டேஷன் பள்ளி முதலிடம், விவேகானந்தா வித்யாலயா இரண்டாமிடம், எம்.என்.எம்.சி., பள்ளி மூன்றாமிடம் பெற்றன.

0 comments: