Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by Unknown in ,    

மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத் தேர்தலில் 157 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருக்கும் 76 பதவிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமையுடன் (செப்.4) முடிவடைந்தது. இந்தநிலையில், பாலமேடு பேரூராட்சியில் காலியாக இருக்கும் 2 மற்றும் 12 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக வேட்பாளர்கள் மேகலா (வார்டு 2), விஜயகுமார் (வார்டு 12) ஆகியோர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர். அதையடுத்து அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் வாய்ப்புள்ளது.
பிற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருக்கும் பதவிகளுக்கு பெறப்பட்டுள்ள வேட்புமனுக்கள் எண்ணிக்கை:
மதுரை மாநகராட்சி நான்காவது வார்டு உறுப்பினர் - 7, 85 ஆவது வார்டு உறுப்பினர் - 8, உசிலம்பட்டி நகர்மன்ற 21 ஆவது வார்டு உறுப்பினர் - 2, திருமங்கலம் நகர்மன்ற 17 ஆவது வார்டு உறுப்பினர் - 2. திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய 10 ஆவது வார்டு உறுப்பினர் - 2, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய 8 ஆவது வார்டு உறுப்பினர் - 2, ஊராட்சித் தலைவர் (6 ஊராட்சிகள்) - 24, ஊராட்சி வார்டு உறுப்பினர் (62 பதவிகள்) - 107 என மொத்தம் 157 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன.
வேட்புமனுக்கள் வெள்ளிக்கிழமை (செப்.5) பரிசீலனை செய்யப்படுகின்றன. வேட்புமனுக்கள் திரும்பப் பெற கடைசிநாள் செப்.8. அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

0 comments: