Friday, September 19, 2014

On Friday, September 19, 2014 by farook press in ,    
ஆலந்தூர்,
மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலேசிய விமானம்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு மலேசியாவில் இருந்து நேற்று மாலை ஒரு விமானம் வந்தது. அதில் பெருமளவில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளின் உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது சென்னை திருவொற்றியூரை சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 36), தாஜுதீன் (40) ஆகியோர் சுற்றுலா விசாவில் மலேசியா சென்று திரும்பியிருந்தனர். இவர்கள் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் அவர்களது உடமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் சிக்கவில்லை.
ஒரு கிலோ தங்கம்
ஆனால் இருவரிடமும் டைல்ஸ் கற்களை வெட்டும் கருவிகள் இருந்தன. சந்தேகப்பட்டு அதை பிரித்துப் பார்த்த போது அதில் தலா அரை கிலோ தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். 1 கிலோ எடையுள்ள அந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.30 லட்சம்.
இது தொடர்பாக 2 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களை தங்கம் கடத்தி வர பயன்படுத்திய முக்கிய புள்ளிகள் குறித்து விசாரிக்கின்றனர்.

0 comments: