Tuesday, September 09, 2014

On Tuesday, September 09, 2014 by farook press in ,    
ராயபுரம்,
சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் அனைத்து செய்தி சேனல்களிலும் வெளியானது.
இதை பார்த்த வடசென்னை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர், தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் தான் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறதோ? என்ற அச்சத்தில் அந்தந்த பள்ளிகளுக்கு படையெடுத்தனர்.
இவ்வாறு கொருக்குப்பேட்டை பகுதியில் இருந்த 4 தனியார் பள்ளிகளிலும், வண்ணாரப்பேட்டை பகுதியில் இருந்த ஒரு பள்ளியிலும் மாணவ–மாணவிகளின் பெற்றோர்கள் முற்றுகையிட்டு, தங்களது குழந்தைகளை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
திடீரென 100–க்கும் அதிகமான பெற்றோர்கள் பள்ளிகளை முற்றுகையிட்டதால், கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

0 comments: