Tuesday, September 09, 2014

On Tuesday, September 09, 2014 by farook press in ,    
ண்ணாசாலையில் பஸ்சிலிருந்து இறங்கிய கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
சென்னை எர்ணாவூர் பாரதிநகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 18). இவர் நந்தனத்தில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். சக்கரவர்த்தி நேற்று மாலையில் வகுப்பு முடிந்து நந்தனத்தில் இருந்து பாரிமுனை நோக்கி செல்லும் மாநகர பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.
பஸ் அண்ணா சாலையில் உள்ள ‘ஸ்பென்சர்ஸ் பிளாசா’ வணிக வளாக பஸ் நிறுத்தத்தில் நின்றதும் சக்கரவர்த்தி இறங்கி சாலையில் நடந்து சென்றார்.
அப்போது அதே பஸ்சிலிருந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பின்பக்கமாக சென்று சக்கரவர்த்தியின் தலையில் வெட்டினர்.
இதில் அவருக்கு தலையில் வெட்டு விழுந்தது. சக்கரவர்த்தி தலையில் கையை வைத்து தடுக்க முயன்றார். அப்போது இடது கையில் மூன்று விரல்கள் வெட்டு விழுந்து துண்டாகியது. உடனே சாலையில் சென்ற பொதுமக்களும், பஸ்சில் இருந்த பயணிகளும் அலறியதையடுத்து கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்கள்.
ரத்த வெள்ளத்தில் போராடிய சக்கரவர்த்தியை தகவலறிந்து வந்த ஆயிரம் விளக்கு போலீசார் ஆம்புலன்சு மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சக்கரவர்த்தியின் கை விரல்கள் துண்டாகியதால் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை செய்ய ஸ்டான்லி மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார்.


பரபரப்பு

சக்கரவர்த்தியை அரிவாளால் வெட்டிய கும்பல் யார்? அவர்கள் எதற்காக வெட்டினார்கள்? கல்லூரி பிரச்சினையா? அல்லது காதல் விவகாரமா? என்பது குறித்த பல்வேறு கோணங்களில் ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த அண்ணா சாலையில் கல்லூரி மாணவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது

0 comments: