Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
சென்னை ஆயிரம் விளக்கு வாலஸ்கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பா (வயது 26). இவர் நேற்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தனது தாயார் மற்றும் குடும்பத்தினருடன் வந்தார். அவரது உடல் முழுக்க மண்எண்ணெய் வாசனை வீசியது. தனது கணவர், மண்எண்ணெய் ஊற்றி, தன்னை உயிரோடு தீ வைத்து எரித்துக்கொல்ல முயன்றதாகவும், அவரிடம் இருந்து தப்பித்து வந்துள்ளதாகவும், கமிஷனர் அலுவலக அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

புஷ்பா மேலும், அதிகாரிகளிடம் கூறியதாவது:-

எனக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது, குழந்தை இல்லை. எனது கணவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். தற்போது அவர் ஆந்திர பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். என்னை தினமும் அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்தார். ஏற்கனவே என்னை 2 முறை கொல்ல முயற்சித்துள்ளார். தற்போது 3-வது முறையாக என்னை தீர்த்துக்கட்ட முயன்றார். நல்லவேளையாக நான் தப்பித்துவிட்டேன். அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவர் கமிஷனர் அலுவலகத்தில் மனுவும் கொடுத்தார். அவரது மனு மீது உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது

0 comments: