Monday, September 01, 2014

On Monday, September 01, 2014 by Unknown in ,    
திருநகர் ஜயன்ட்ஸ் குரூப் சார்பில், அண்ணா பூங்கா மைதானத்தில் தேசிய விளையாட்டு தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, ஜயன்ட்ஸ் குரூப் தலைவர் எல். கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். அதன் சர்வதேச துணைத் தலைவர் எம். லெட்சுமணன், ஓய்வுபெற்ற காவல்துறை தென்மண்டலத் தலைவர் எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், திருநகர் ஹாக்கி கிளப் செயலர் ரமேஷின் சேவையைப் பாராட்டி, மாவட்ட விளையாட்டு அதிகாரி முருகன், திருநகர் வாசகர் வட்டத் தலைவர் மு. செல்லா, மாநகராட்சிக் கவுன்சிலர் சந்தியா பலராமன், டவுன் கிளப் செயலர் ஜெயக்கொடி ஆகியோர் வாழத்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், தென்மண்டல காவல்துறை தலைவர் அபய்குமார் சிங் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, திருநகர் ஹாக்கி கிளப் செயலர் ரமேஷுக்கு சிறப்பு விருது மற்றும் திருநகர் ஹாக்கி கிளப்புக்கு ரூ. 10 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கிப் பேசுகையில், தென் மாவட்டங்களில் மாணவர்கள் விரும்பி விளையாடும் விளையாட்டாக ஹாக்கி உள்ளது. இந்த விளையாட்டுக்கு ரமேஷ் போன்றவர்களின் அர்ப்பணிப்பு இருந்தால், ஒலிப்பிக்கில் நாம் விரைவில் தங்கப் பதக்கத்தை வெல்வது உறுதி என்றார்.
இதில், ஜயன்ட்ஸ் குரூப் சார்பில் விளையாட்டு உபகரணங்களை, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத் தலைவர் சோலை எம். ராஜா மாணவர்களுக்கு வழங்கினார்.நிகழ்ச்சியில், ஜயன்ட்ஸ் குரூப் செயலர் வெ. ஐயப்பன் நன்றி கூறினார்.

0 comments: