Sunday, December 21, 2014

On Sunday, December 21, 2014 by farook press in ,    
திருப்பூர் முருங்கப்பாளையம் நியாயவிலைக் கடை முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து சனியன்று இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
வாலிபர் சங்க முருங்கப்பாளையம் கிளைச் செயலாளர் தீபன் தலைமை வகித்தார். இதில் மக்களை வதைக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.கோபாலகிருஷ்ணன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ச.நந்தகோபால், மாநகரச் செயலாளர் எம்.ஜீவானந்தம், மாநகர துணைத் தலைவர் துரை.சம்பத், கட்சி கிளை செயலாளர் பாலசுப்பிரமணியம், குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில் கட்சி மற்றும் வாலிபர் சங்கத்தினர் பங்கேற்றனர்.

0 comments: