Saturday, December 20, 2014

On Saturday, December 20, 2014 by Unknown in ,    

கவுரவ கொலை புகாரில் இறந்த பெண்ணின் தந்தை உள்பட 4 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
கவுர கொலை மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, புலிப்பட்டியை சேர்ந்தவர் வீரணன். இவரது மகள் விமலாதேவி. வீரனிடம் டிரைவராக வேலை பார்த்து வந்த திலீப்குமாரும், விமலா தேவியும் காதலித்தனர். வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள், திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் தனது மகளை கடத்திச் சென்றதாக திலீப்குமார் மீது உசிலம்பட்டி போலீசில் வீரன் புகார் செய்தார்.
போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
அப்போது, விமலாதேவி தனது பெற்றோருடன் செல்வதாக கூறியதை தொடர்ந்து அவரை பெற்றோருடன் செல்ல கோர்ட்டு உத்தரவிட்டது. இந்தநிலையில் 2.10.2014 அன்று விமலாதேவி இறந்தார். அவர், தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விமலாதேவி கவுரவ கொலை செய்யப்பட்டதாகவும், அதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் திலீப்குமார், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
உத்தரவு வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, விமலாதேவி கவுரவ கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக விமலாதேவியின் தந்தை வீரணன், தாயார் தேனம்மாள், உறவினர் வத்தலக்குண்டு முருகன், தங்கபாண்டியம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள், ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் செங்குட்டரசன் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். முதல் 15 நாட்களுக்கு சென்னையில் உள்ள சி.பி.ஐ. துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், அதன்பின்பு கோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும்வரை மதுரையில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.

0 comments: