Sunday, December 21, 2014

On Sunday, December 21, 2014 by farook press in ,    
திருப்பூர் கொங்குமெயின் ரோடு எம்.எஸ்.நகர், கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்த 50–க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று மாலை திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
திண்டுக்கல் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தைச்சேர்ந்தவர் கருத்தராஜா(வயது 42). இவர் தனது மனைவி மகேஷ்வரியின் பெயரில் திருப்பூர் கொங்கு ரோடு எம்.எஸ்.நகரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இதன்மூலம், ஏலச்சீட்டு, தீபாவளி பலகாரச்சீட்டு போன்றவை நடத்தி வந்ததுடன், அவற்றின் மூலம் 200–க்கும் மேற்பட்ட மக்களிடம் பல லட்சம் பணம் வசூலித்து வந்தார்.இந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக அந்த நிதி நிறுவனம் திறக்கப்படாமல் உள்ளது. கருத்தராஜா, மகேஷ்வரி ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். எனவே 2 பேரையும் பிடித்து எங்களுடைய பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

0 comments: