Wednesday, December 24, 2014

On Wednesday, December 24, 2014 by Unknown in ,    
மதுரை–நெல்லை இடையே 29–ந்தேதி முதல் மின்சார என்ஜின் பொருத்திய ரெயில்கள் இயக்கம்: அதிகாரி தகவல்மதுரை-நெல்லை-தூத்துக்குடி ரெயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் முடிந்து சோதனை அடிப்படையில் மின்சார என்ஜின் பொருத்திய ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் இந்த வழித்தடத்தில் மின்சார என்ஜின் ரெயில்களை மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் இயக்க ஒப்புதல் கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து வருகிற 29–ந்தேதி முதல் அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்கள் மின்சார என்ஜின் பொருத்தி இயக்கப்பட உள்ளன.

இது குறித்து மதுரை கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் ஓம் பிரகாஷ் நாராயணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

மதுரை-தூத்துக்குடி-நெல்லை ரெயில் பாதையில் மின்சார ரெயில்கள் இயக்குவதற்கு பாதுகாப்பு கமிஷனர் ஒப்புதல் கொடுத்துள்ளார். எனவே, வருகிற 29–ந்தேதி முதல் அந்த பாதையில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மின்சார என்ஜின் பொருத்தி இயக்கப்படும்.

அதன்படி, நெல்லை-சென்னை நெல்லை எக்ஸ்பிரஸ் (வ.எண்.12631/ 12632), திருவனந்தபுரம்-சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (வ.எண். 16723/16724), கன்னியாகுமரி-சென்னை எழும்பூர் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (வ.எண். 12633/12634), தூத்துக்குடி-சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் (வ.எண். 12693/12694), திருச்சி-நெல்லை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (வ.எண். 22627/22628), குருவாயூர்-தூத்துக்குடி சென்னை எழும்பூர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் (வ.எண். 16127/16128) ஆகிய ரெயில்கள் வருகிற 29–ந்தேதி முதல் இரு மார்க்கங்களிலும் மின்சார என்ஜின் பொருத்தி இயக்கப்படும்.

அதேபோல, நெல்லை, தூத்துக்குடி, மதுரை ரெயில் பாதையில் இயக்கப்படும் 10 வாராந்திர மற்றும் வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரெயில்களும் மின்சார என்ஜின் பொருத்தி இயக்கப்படும்

0 comments: