Wednesday, December 24, 2014

மானிய திட்டத்தில் இணைவோருக்கு ரூ.568 வைப்புத்தொகை, வங்கியில் முதலிலேயே எரிவாயு நிறுவனத்தால் செலுத்தப்பட்டுவிடும். சமையல் எரிவாயு மானியம் பெற 3 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது என மதுரையில் இன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமையல் எரிவாயு மானியத் திட்டம் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தங்களை இணைத்து கொள்ளும் நுகர்வோர்கள், ஆதார் எண்ணை கியாஸ் நிறுவனம் மற்றும் வங்கியில் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 1–ந்தேதி அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் பல பிரச்சினைகளை சந்தித்ததால், அரசு முழுமையாக ஆராய்ந்து சில மாற்றங்களை செய்துள்ளது. மாற்றியமைக்கப்பட்ட சமையல் எரிவாயு நேரடி மானியத்திட்டம் முதல் கட்டமாக 54 மாவட்டங்களில் கடந்த மாதம் 15–ந் தேதி கொண்டு வரப்பட்டுள்ளது.
இத்திட்டம் தொடர்பாக இந்தியன் ஆயில் துணை பொது மேலாளர் உஜ்ஜல் சட்டோ பாத்யாயா, முதன்மை மேலாளர்கள் வெற்றி செல்வக்குமார், மதிவாணன் (மதுரை வட்டாரம்) ஆகியோர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:–
சமையல் எரிவாயு நேரடி மானிய திட்டம் ஜனவரி 1–ந்தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆதார் எண் இல்லாத நுகர்வோர்கள் மானிய தொகையை நேரடியாக தங்களது வங்கி கணக்கு மூலம் பெறலாம் என்றாலும் ஆதார் எண் கிடைக்கப் பெற்றவுடன் அதனை பயன்படுத்தி மானியத்தை பெறுவது அவசியம்.
வங்கி கணக்கு மூலம் மானியம் கிடைக்க ஏற்பாடு செய்யாதவர்களுக்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது.
இம்மூன்று மாத காலத்தில் எரிவாயு சிலிண்டர்களை மானிய விலையில் பெறலாம். இந்த கால அவகாசம் முடிந்த பிறகு மேலும் 3 மாத கால இருப்பு அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த 3 மாத காலத்தில் அவர்கள் சிலிண்டர்களை சந்தை விலையில் வாங்கி கொள்ளலாம்.
இதே நேரத்தில் இம்மூன்று மாத காலத்திற்குள் சமையல் எரிவாயு நேரடி மானிய திட்டத்தில் நுகர்வோர் இணைந்து விட்டால் அவர்கள் பயன்படுத்திய கியாஸ் சிலிண்டருக்குரிய மானியத்தொகை அவர் களது வங்கி கணக்கில் சேர்க்கப்படும்.
இத்திட்டத்தில் இணைந்த பிறகு முதன் முதலில் ஒரு சிலிண்டருக்கு பதிவு செய்தவுடன் நுகர்வோர் வங்கி கணக்கில் நிரந்தர முன்வைப்பு தொகையாக ரூ.568 செலுத்தப்பட்டு விடும். நுகர்வோர் தங்களது முதல் கியாஸ் சிலிண்டரை சந்தை விலையில் வாங்குவதற்கு இந்த நிரந்தர முன் வைப்புத்தொகை உறுதி செய்கிறது. இதுகுறித்த அறிவிப்பு இத்திட்டத்தில் இணையும் நுகர்வோருக்கு தனியே அறிவிக்கப்படும்.
நவம்பர் 15 முதல் இத்திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் இணைந்த பிறகு முதல் சிலிண்டருக்கு பதிவு செய்தவுடன் அறிவித்தபடி நிரந்தர முன்பணம் என்று ஒருமுறை மட்டும் செலுத்தப்பட்டு விடும். இதற்கு முன் சமையல் எரிவாயு நேரடி மானிய திட்டத்தில் சேர்ந்தவர்கள் நிரந்தர முன்பணமாக ரூ.435 பெற்றுள்ளனர். அவர்களுக்கு மீண்டும் எந்தவொரு நிரந்தர முன் பணமும் செலுத்தப்பட மாட்டாது. மற்றவர்களுக்கு ரூ.568 நிரந்தர முன்பணமாக செலுத்தப்பட்டுவிடும்.
ஜனவரி 1–ந்தேதி முதல் சமையல் எரிவாயு நேரடி மானிய திட்டத்தில் சேர்ந்துள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சந்தை விலையில் எரிவாயு சிலிண்டர்கள் டெலிவரி ஆகும். அவற்றுக்குரிய மானிய தொகை நேரடியாக அவரவர் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டுவிடும்.
இத்திட்டத்தில் இணைந்திடாத எரிவாயு வாடிக்கையாளர்களுக்கு கருணை காலமான 3 மாதத்தின்போது அதாவது ஜனவரி 1–ந்தேதி முதல் மார்ச் 31–ந்தேதி வரை தற்போதுள்ளபடியே தொடர்ந்து மானிய விலையில் சிலிண்டர்கள் கிடைக்கும்.
திட்டத்தில் இணைந்திடாத எரிவாயு வாடிக்கையாளர்களுக்கு நிறுத்திவைப்பு காலமான 3 மாதத்தின்போது அதாவது ஏப்ரல் 1–ந்தேதி முதல் ஜூன் 30–ந்தேதி வரை சந்தை விலையில் சிலிண்டர்கள் கிடைக்கும். ஆனால் அவர்களுக்குரிய மானிய தொகை எண்ணைய் விற்பனை நிறுவனங்களிடம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இந்த காலக்கட்டத்திற்குள் அவர்கள் இந்த திட்டத்தில் இணைந்துவிட்டால் நிறுத்தப்பட்டிருந்த மானிய தொகை அவர்களது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும்.
இத்திட்டத்தில் சேர்ந்திடாத வாடிக்கையாளர்களுக்கு ஜூலை 1–ந் தேதிக்கு பிறகு இத்திட்டத்தில் எந்தவொரு வாடிக்கையாளரும் இணைந்தால் இணைந்த தேதியில் இருந்து தகுதிக்கு தகுந்தபடி நிரந்தர முன்வைப்புத்தொகை மற்றும் மானியம் அனுமதிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடுகள் குறித்து நேற்று 2-வது நாளாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணை நடத்தினார். அப்போது, தங்கள் விள...
-
சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப்போ கவும் மாட்டார்கள். சிங்களவர்க...
-
இலங்கையில் இருந்து இந்தியா செல்பவர்கள் முன்கூட்டியே விசா பிரயாண அனுமதி எடுக்க வேண்டியதில்லை என்றும், அங்கு சென்றவுடன் அதனைப் பெற்றுக்கொள்ள...
-
தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெறவேண்டி திருச்சி மாநகர் செயலாளரும் சுற்றுலா துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில் திருவா...
-
OXFORD ENGINEERING COLLEGE, TRICHY 16th Convocation day was held on 25-08-2018 at Oxford Engineering College. The function was preside...
-
செவ்வாய் கிரகத்தில் பல நாடுகள் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளன. அங்கு உயிரினங்கள் வாழும் சாத்தியக்கூறு உள்ளனவா? என தீவிரமான ஆராய்ச்சிகள் நடைபெற்று...
0 comments:
Post a Comment