Wednesday, December 24, 2014

On Wednesday, December 24, 2014 by farook press in ,    
திருப்பூரை அடுத்துள்ள அவினாசி பெரியாயிபாளையம் நியூ அம்பாள் காலனி பகுதியில் உள்ள ஒரு சோளக்காட்டில் செடிகள் நிறைந்த முட்புதரில் பிறந்த 3 மணி நேரமே ஆன ஒரு பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் கிடந்தது. குழந்தையை சுற்றி எறும்புகளும். ஈக்களும் மொய்த்து கொண்டிருந்தது. எறும்புகள் கடிதத்தால் தான் குழந்தை வீறிட்டு அழுதுள்ளது. இதைப்பார்த்து பதறிய அப்பகுதி பெண்கள் குழந்தையை எடுத்து சுடுதண்ணீரால் சுத்தம் செய்தனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த கேசவன் போலீசாருக்கும், குழந்தைகள் நல அமைப்பிற்கும் தகவல் அளித்தார்.
இதைத்தொடர்ந்து அங்கு அவினாசி போலீசாரும் குழந்தைகள் நல அமைப்பு ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமார் மற்றும் மரியாலயா அமைப்பின் நிர்வாகி கரோலின் ஆகியோர் வந்து குழந்தையை அவர்களிடமிருந்து பெற்று உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த குழந்தை, குழந்தைகள் நலப்பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த குழந்தை 1½ கிலோ எடையுடன் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாக டாக்டர்கள் கூறினார்கள். தற்போது குழந்தைகள் நல அமைப்பின் பராமரிப்பில் உள்ள அந்த குழந்தை சிகிச்சை முடிந்து 1 வாரம் கழித்து மாவட்ட சமூக நலத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு தொட்டில் குழந்தையாக தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

0 comments: