Saturday, December 27, 2014

On Saturday, December 27, 2014 by Unknown in ,    

இறந்த பெண்ணின் கருப்பையில், குழந்தையை 3 மாதம் வைத்து காப்பாற்றிய மருத்துவர்கள்

இறந்த பெண்ணின் கருப்பையில், குழந்தையை 3 மாதம் வைத்து காப்பாற்றிய மருத்துவர்கள்
இறந்த பெண்ணின் வயிற்றில் அவளுடைய குழந்தையை 3 வைத்து காப்பாற்றி பிறகு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவித்துள்ளனர்.
 
இத்தாலியிலுள்ள மில்லன் நகரின் சான் ரஃபேல் என்னும் மருத்துவமனையில் 36 வயது பெண்,  திடீர் உடல்நலகுறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். 6 மாத கர்ப்பினியான அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர்.
 
பலத்த ஆலோசனைக்குப் பிறகு மருத்துவர்கள், குழந்தையை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என முடிவு செய்தனர். அந்த பெண்ணின் சுவாசம் மற்றும் இரத்த ஓட்டத்தினை மருத்துவ கருவிகளின் உதவி கொண்டு செயற்கையாக இயக்க முடிவு செய்தனர்.
 
கடந்த 3 மாதங்களாக மருத்துவக் கருவிகள் மூலம் செயற்கையாக உடல் உறுப்புகளை இயங்கச்செய்து இந்த மூன்று மாதங்களில் அந்த தாயின் இரைப்பையின் வழியாகவே அந்த குழந்தைக்கு உணவு வழங்கினர்.
 
கடந்த 2014 டிசம்பர் 18 ஆம் தேதி அன்று 9 மாதம் நிறைவு பெற்ற நிலையில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அந்த பெண்ணின் வயிற்றில் இருந்து, ஆண் குழந்தையை ஆரோக்கியமாக வெளியில் எடுத்தனர். குழந்தை 1.8 கிலோ எடையுடன் பிறந்தது.

0 comments: